முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அப்பா

appa muthalam andu ninaivu anjali

நாம் செய்யும் தவறுகளை திருத்தி நமக்கு சரியாக வழிகாட்டி எம்மை வாழ்வில் உயரத்துக்கு செல்ல வழிகாட்டும் வழிகாட்டி. ஒவ்வொரு பிள்ளைகளின் காவல் தெய்வம் அப்பா. குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களும் அர்பணிப்புகளும் நமக்கு தெரிவதில்லை.

தந்தையை இழந்த குடும்பம் மாலுமியை இழந்த கப்பல் போன்று தத்தளிக்கும். குடும்பத்தில் தந்தையின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது.

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அப்பா

ஆலமரமொன்று அடிசாய்ந்ததோ – வேரோடி
விழுது விட்டபெரு விருட்சமே எமை – பாரோடு
தவிக்கவிட்டு பாதியிலே போனதேனோ
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் உயிர்மூச்சு மறைவதில்லை
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்
ஆத்மா சாந்திக்காக பிராத்திப்போம்.
ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..!


ஆற்றுப்படுத்தி வழிகாட்டினீர்
ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆறாது உம் பிரிவுத்துயர்
ஆண்டவனடியில் ஆறுதலடைய
ஆத்மார்த்தமாய் பிரதிக்கின்றோம்.!


ஆண்டு ஒன்று முடிந்ததுவோ உங்கள்
அன்பு முகம் நீங்கிச் சென்று ஆனாலும்
எம் மனமோ இன்னும் ஆறவில்லை – அப்பா
நேற்றுப் போல இருக்குதப்பா
அழுத பொழுதுகள் காலங்கள் பல
கடந்தாலும் என்றும் எம் மனதில்
காவியமாய் இருப்பீர்கள் அப்பா.!


அன்பாலும் பண்பாலும் எம்மை அரவணைத்து
நல்வழிப்படுத்திய எங்கள் குடும்ப தலைவரே..
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறவில்லை தெய்வமே..
உங்கள் பிரிவுத்துயரம், உங்கள் நினைவலைகள்
இன்னும் எம் மனதில் பசுமையாகவுள்ளது..
எமது வளமான வாழ்விற்கு வழிகாட்டிய உங்கள் நினைவுகளுடன்
தங்களின் ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..!!


கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் அப்பா
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண் நோக்கிச் சென்று
ஆண்டு ஒன்று சென்றாலும்
கண்விட்டு மறையாது
உங்கள் நினைவுகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில் எமை
நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்..
சுவாசிக்க சுவாசம் இல்லை நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன் நிஜங்களைத் தேடுகின்றோம்
நிஜம் தானா என்று எண்ணி நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில் மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும் துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ..
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
எங்கள் மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!


ஆண்டொன்று சென்றதப்பா – உங்கள்
பேரின்ப முகம் கண்டு
உயர் குணமேவிய திருவுருவாய் உங்கள்
சாந்தமான மொழி கேட்க
கனவில் தேடிப்பார்க்கின்றோம்.
கண்களில் இருக்கும் எம் அப்பாவை..
எம் மனம் சிறுபிள்ளை போல் அடம்பிடிக்கின்றது
அப்பா வேண்டுமென்று..
நீர் அற்ற குளத்தில் தத்தளிக்கும்
மீன்களைப் போல
எம் தந்தை இல்லா உலகில் தவிக்கின்றோம்.
நாங்கள் உங்கள் அன்புக்காக
இறைவனின் பாதங்களில் எம் தந்தையின்
ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி !! சாந்தி !!!


ஆண்டொன்று சென்றதப்பா
உங்கள் அன்பு முகம் கண்டு
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்தீரே
பண்புடன் பக்குவமாய் எம்மை நடாத்தி
இரக்கத்தின் இருப்பிடமாய் எல்லோர்
மனத்திலும் இடம்பிடித்து
இனியவராய் வாழ்ந்து இவ்வுலகம் நீந்தீரே
நிழலாய் தொடரும் உங்கள் நினைவுடன்.
இறைவனிடம் என் தந்தையின் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.!


Read More:

கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள்