மழை கவிதை பாரதியார்

bharathiyar malai kavithai in tamil

மகாகவி சுப்ரமணிய பாரதியார் தமிழ் மீது மிகுந்த பற்றுக்கொண்ட கவிஞரும் பெண்களின் விடுதலைக்காக போராடிய பெண் விடுதலை போராளியும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.

இவர் சிறு வயதில் இருந்தே கவிதைகள் மீது ஈடுபடும் கவிதைகள் படைக்கும் புலமையையும் கொண்டிருந்தார். பாரதியாரின் கவிதைகள் இன்றும் நிலைத்து நிற்பது பாரதியாரின் திறமையின் சிறப்பை உணர்த்துகின்றது.

பாரதியார் பல கவிதைகளை தமிழில் படைத்துள்ளார். இவர் படைத்த கவிதைகளில் மழை பற்றி “திக்குகள் எட்டும் சிதறி” என தொடங்கும் கவிதையை இந்த பதிவில் நோக்கலாம்.

மழை கவிதை பாரதியார்

திக்குக்கள் எட்டும் சிதறி – தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து – வெள்ளம்
பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்
சாயுது சாயுது சாயுது – பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று – தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய – மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

அண்டம் குலுங்குது தம்பி – தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான் – திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார் – என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம் – இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்

Read More:

அன்புள்ள ஆசிரியருக்கு கவிதை