வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்

அனைவருக்கும் வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும் அது எல்லோருக்கும் பொதுவானது தான் நமக்கு மட்டும் தான் துக்கங்கள் இருக்கின்றன என எண்ணி தினமும் வருத்தப்படுவது நமது மன வருத்தங்களை இன்னும் அதிகப்படுத்தும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மனதிற்கு சிறு உற்சாகத்தை கொடுக்கும் வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் சிலவற்றை பார்க்கலாம்.

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்

நமக்கு வாழ்கை பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத் தருகின்றது அதில் முக்கியமான ஒன்று தான் நாம் யார் யாரிடம் எவ்வாறு பழக வேண்டும் எந்த அளவோடு பழக வேண்டும் என்பது.

உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவது புத்திசாலித்தனம் என்று நினைக்காதீர்கள் அது தான் துரோகத்தின் உச்சம்.

உங்களுக்கு தெரிந்த விடயங்களை மட்டும் மற்றவர்களுடன் பேசி பழகுங்கள் இது காலப்போக்கில் உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையை அதிகப்படுத்தும்.

சந்தோஷமான நேரத்திலும் துன்பமான நேரத்திலும் நாம் நினைவில் வைத்திற்குக்க வேண்டிய ஒரு உண்மை இந்த நிமிடம் கூட நிரந்தரம் இல்லை.

நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு மீறினால் ஏமாளி என்பார்கள்.

கடன்களும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப அளவோடு இருக்க வேண்டும். கடன்களும் நினைவுகளும் அளவுக்கு மீறினால் இரண்டுமே தூக்கத்தை பறித்து விடும்.

வாழ்வில் வரும் வலிகளை சிரித்துக் கொண்டே கடந்து போக பழகிக் கொள்ளுங்கள். அப்படியே சிரித்துக் கொண்டே கடந்து போக பழகிக் கொண்டால் உன்னை விட வலிமையானவர்கள் யாரும் இல்லை இந்த உலகில்.

ஒரு தவறை செய்தால் ஒதுக் கொள்ள எந்த சூழ்நிலையிலும் தயங்காதீர்கள் அவற்றை சரி செய்து கொள்ள முடியும். ஆனால் செய்த தவறை இல்லை என்று சாதிக்காதீர்கள் பிறகு அவற்றை வாழ்நாளில் சரி செய்ய முடியாது.

மற்றவர்களிடம் குற்றம் என அடையாளம் காணும் விடயம் நம்மக்கு ஏற்பட்டால் அதை சோதனை என்று அழைக்கிறோம்.

உன் பாதையை நீயே உருவாக்கிக் கொள்ளும் தண்ணீராக இரு. வாழ்வில் எதையும் சாதிக்கலாம். அடுத்தவர் பாதையை தடுக்கும் பாறையாக இருந்து விடாதே.

மனதில் நஞ்சு வைத்து உதட்டில் தேனாக கொஞ்சி பேசும் மனிதர்களும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே.

காகமும் குயிலும் பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல தான் தோற்றமளிக்கும். ஒருவரின் வெளித் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடாதீர்கள்.

உற்சாகம் ஊட்டும் தன்னம்பிக்கை கவிதை வரிகள்.