ஆசிரியர் பற்றிய பேச்சு போட்டி

teachers day speech in tamil

கண்களுக்கு விருந்தாய் காதுக்கு தேனாய் தமிழ் எனும் செந்தமிழை நான் கண்டேன். அத்தமிழுக்கு என் முதல் வணக்கம்.

நம் பாடசாலை அதிபருக்கும் என் இனிய ஆசான்களுக்கும் என் சக மாணவ மாணவியருக்கும் பெற்றோருக்கும் இனிய காலை வணக்கம். நான் உங்கள் முன் இன்று நம் அன்புள்ள ஆசான்கள் பற்றி ஒரு சிறு உரையாற்ற வந்துள்ளேன்.

ஆசிரியர் என்றால் யார்

“இருள்களின் ஒளிக்கதிர்கள் நம் ஆசிரியர்கள்” என கூறலாம். அல்லது “தன்னை மட்டும் செதுக்காமல் நம்மையும் செதுக்குபவர்” ஆசிரியர்கள் என்று கூறலாம்.

எனக்கு புரிகின்றது இந்த நொடி உங்கள் ஆசான் யார் என கேள்வியும் பதிலும் புலப்படுவது புரிகின்றது. ஆசானாக இருப்பவர் அப்பாற்பட்ட நிலை உடையவர் ஆவார்.

அகரம் முதல் நம் வாழ்க்கை பாடங்களை கற்க சொல்லி தந்தவர்கள் ஆசிரியர்கள். ஆழமான அன்பிற்கும் அழகான கோவத்திற்கும் சொந்தகாரர்கள் நம் ஆசான்கள்.

கண்களை சிமிட்டி காதில் கதை பேசுவார்கள். தண்டிக்க மனம் ஏற்காமல் தண்டனை தருவார்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்கள். அன்பென்ற சொல்லின் உருவம். இன்னொரு தாயாக காக்கும் தெய்வம். இன்னும் ஆசிரியர்களின் அடையாளம் ஏராளம்.

ஆசிரியருக்கான தின கொண்டாட்டம்

நம் ஆசிரியர் தினம் உலகில் எங்கும் கொண்டாடப்படும் நிகழ்வாகும். ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு திகதியில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் நம் இந்திய நாட்டில் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்படும்.

ஆசிரியர் தினம் அவர்களின் பணி சிறப்பையும் ஆசிரியர் மீது மாணவர்கள் வைத்துள்ள அன்பையும் வெளிப்படுத்துவதற்காக கொண்டாடப்படுகின்றது.

மாணவர்கள் ஆசிரியர் தினத்தை பல்வேறு விதமாக கொண்டாடுகின்றனர். சில மாணவர்கள் பரிசளிப்பார்கள் சில மாணவர்கள் தின்பண்டங்கள் வழங்குவர். சிலர் மாலை அணிவிப்பார்கள் வாழ்த்துக்கள் கூறுவார்கள். இவ்வாறு ஆசிரியர் தின விழாக்களை கொண்டாடுவார்கள்.

ஆசிரியரை ஊக்கப்படுத்துவதால் மாணவர்களின் மனதிலும் ஆசிரியருக்கான இடம் பெரிதாக காணப்படும்.

தற்கால ஆசிரியர் மாணவர் இடையிலான புரிந்துணர்வு

ஆசிரியர்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றத்திற்கும் உள்ளாக வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் தான் ஆசிரியர் சேவை என்பது எப்பொழுதும் செதுக்கும் சிற்பிக்கு ஒப்பிடப்படுகின்றது.

ஆரம்ப கால ஆசிரியர்களின் அனுபவங்களும் சமூகத்தில் ஓர் நிலைக்கு மாணவனை உருவாக்குவது நோக்கமாக இருந்தது. தற்போது அதே உணர்வு ஆசிரியர் இடத்தில் காணப்படுகின்றது. இருந்தாலும் தற்கால மாணவர்களின் நிலை ஆசிரியரிடம் இருந்து இடைவெளியை உருவாக்குகின்றது.

இதற்கு காரணம் பாட தேர்வுகளும், போட்டிகளிற்கு மத்தியில் மாணவர்களின் நிலமை இருப்பது அத்துடன் ஆசிரியரின் கண்டிப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பாங்கு போன்றவையாகும்.

ஆசிரியர்களின் கண்டிப்புக்கள் நம் எதிர்கால பாதைக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கற்பிக்கும் ஆசான்கள் எப்பொழுதும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பார்ப்பதில்லை. அதனால் ஆசானை மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு உறவுகளிலும் ஒருவராக தெரிகின்றார்.

எனவே மாணவர்கள் ஆகிய நாமும் ஆசிரியர்களில் நிலமையை புரிந்து செயற்பட வேண்டும். நாளைய எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களின் பணிகளை சிறப்புற மாணவர்களாகிய எமக்கு அர்ப்பணிக்கின்றனர்.

அத்தகைய ஆசிரியர்களை கௌவரவிக்கும் நாள் இன்று. எனவே ஆசானாகிய உங்கள் அயராத உழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் பல என கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

Read More:

அறிவே ஆற்றல் பேச்சு போட்டி