மாட்டு பொங்கல் பேச்சு போட்டி

mattu pongal speech in tamil

என் தமிழ் தாய்க்கு முதல் வணக்கத்துடன் இங்கு வந்துள்ள அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். நான் இன்று நம் முன்னோர்கள் நமக்கு உரித்தான கலாச்சாரங்களை கொண்டாடிய விதத்தில் இருந்து மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பை பற்றி நாம் கொண்டாடும் மாட்டுப்பொங்கல் பண்டிகையில் இருந்து கூற வந்துள்ளேன்.

மாட்டு பொங்கல் என்றால் என்ன

மாட்டு பொங்கல் என்பது தைப்பொங்கலிற்கு மறுநாள் கொண்டாடப்படும் நிகழ்வு ஆகும். இதனை பட்டி பொங்கல் என்றும் அழைப்பார்கள். தமிழர் பாரம்பரிய பண்டிகையில் இதுவும் ஒன்றாகும்.

மாட்டு பொங்கல் கொண்டாட காரணம் உழவர்களிற்கு உதவியதற்காக நன்றி சொல்லும் விதமாக நண்பனான மாடுகளுக்கு மாட்டு பொங்கல் கொண்டாடப்படும். மனிதனுக்கும் மாட்டிற்கும் இடையில் உள்ள உறவை வெளிப்படுத்தவும் கொண்டாடப்படும்.

மாட்டை அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும் கேமாதா ஆகவும் இந்து கடவுளின் வாகனமாகவும் வழிபடுவது வழமையாகும். மாட்டு பொங்கல் அன்று கேமாதா தரிசனம் கோடி புண்ணியம் என முன்னோர்கள் கூறி உள்ளார்கள்.

மாட்டுப்பொங்களில் மாட்டுக்கு செய்யும் விஷயங்கள்

நாம் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதற்கு என மாடுகளுக்கு பல சடங்குகளாக நம் முன்னோர்கள் செய்வது வழமை.

அந்தவகையில் மாட்டு தொழுவங்களை சுத்தம் செய்வார்கள். அதன்பின் அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளை குளிப்பாட்டி மாட்டின் கழுத்தில் பட்டு கட்டி மாட்டின் கொம்புகளை சீவி வர்ண நிறங்களில் கொம்பை அழகுபடுத்தி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு கற்பூர ஆராத்தி காட்டுவார்கள்.

அதன்பின் வாழை இலையில் உணவுகளை படைத்து உண்ண விடுவார்கள். அத்துடன் நீராகாரம் கொடுப்பார்கள். அதன்பின் மாடு குடித்த நீரின் மீதியை தொழுவத்திலும் வீட்டை சுற்றியும் தெளிப்பார்கள்.

இதன் மூலம் நோய் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம் என்பதும் ஓர் நம்பிக்கை ஆகும். இவ்வாறு உழவனின் நண்பனாக மாட்டிற்கு நன்றி சொல்லி பண்டிகையை கொண்டாடுவார்கள்.

தற்காலத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தற்காலத்தில் யாவுமே மாற்றத்துக்கு உள்ளாகிவிட்டது. இருந்தும் மாட்டுப்பொங்கலின் பாரம்பரியம் இன்னும் மாறவில்லை. நம் முன்னோர்கள் மாட்டுப்பொங்கல் கொண்டாடும் முறைக்கு அமைய இன்றும் மாடுகளை கௌரவிக்கின்றோம்.

இந்த வகையில் தமிழர்களுக்கு என வீர விளையாட்டுக்களும் கொண்டாடப்படுகின்றது. அதில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பாரம்பரியமான விளையாட்டு விளையாடப்படும்.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகளை ஓடவிட்டு அதை அடக்கும் நபர் வெற்றி பெறுவார். இவ்வாறு அதை இன்றும் மாட்டு பொங்கல் அன்று விளையாடுகின்றனர்.

இவ்வாறு பல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. வானவேடிக்கைகளும் பட்டத்திருவிழாவும் என அவற்றை கான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கூட்டமும் அலைமோதும். இவ்வாறு தற்போதைய மாட்டுபொங்கள் கொண்டாடப்படும்.

எனவே இத்தகைய மாட்டுப்பொங்கலை நாமும் சுற்றத்தாருடனும் உறவினர்களுடனும் மாடுகளை கௌரவித்து தைப்பொங்களுடன் சேர்த்து கொண்டாடி மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.

Read More:

சிறுசேமிப்பு பேச்சு போட்டி