தன் தாய்மொழியில் அளவு கடந்த அன்பு கொண்ட பன்மொழி புலமை கொண்ட “மகாகவி பாரதியார் பொன்மொழிகள்” பற்றிய தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
- மகாகவி பாரதியார் பொன்மொழிகள்
- பாரதியார் பொன்மொழிகள்
- Bharathiyar Quotes In Tamil
- Mahakavi Bharathiyar Quotes In Tamil
மகாகவி பாரதியார் பொன்மொழிகள்
1.சென்றதை சிந்திப்பதை விட, இனிமேல் நடக்க இருப்பதை சிந்திப்பவனே புத்திசாலி.
2. மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை.. பயம் என்னும் பெயரில் மனத்துக்குள்ளையே இருக்கிறது.
3. நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.
4. மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.
5. கடமையைச் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பவனைக் காண்பது நமக்கு தீமையையே உண்டாக்கும்.
6. கொடுத்த வேலையைச் செய்யாமல் ஆதாயம் பெற முயல்பவன் பிச்சைக்காரனை விட கேவலமானவன்.
7. பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
8. மனித முயற்சில் தவறு ஏற்படுவது இயல்பே.. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.
9. துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை இழுத்து பிடியுங்கள்.
10. எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடாதே.. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்த தொழிலைக் கற்றுக் கொள்.
11. அன்பு எந்த குறையையும் பொறுக்கும்.. உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபம் கொள்ள மாட்டான்.
12. மனம் உற்சாகமாக இருந்தால் உடல்நிலை தீவிரமடையும். உடம்பைத் தீவிரப்படுத்தினால் மனம் புத்துணர்வு பெறும்.
13. அறிவுத் தேடலை நிறுத்தி விடாதே.. ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நன்மையாகவே முடியும்.
14. கொள்கை அளவில் அன்பிருந்தால் அது பயனளிக்காது. அதைச் செயலில் வெளிப்படுத்து.
15. உண்மையை உயிராக மதியுங்கள்.. உண்மையான வாக்கே அருள்வாக்கு என்று சொல்லப்படும்.
Mahakavi Bharathiyar Quotes In Tamil
16. உலக இன்பம் நீர்க்குமிழி போல மறையும் என்று சொல்பவன் சோம்பேறி.
17. எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவே வேராக இருக்கிறது. அறிவுக் கண் திறந்தால் எதையும் சாதிக்கலாம்.
18. பொருள் படைத்தவன் சமத்துவ எண்ணத்தை பெற்று விட்டால். உலகமே சீர் பெற்று விடும்.
19. சோம்பேறியாக வாழ்வது பெருங்குற்றம். பிறரிடம் கையேந்துபவனே சோம்பலுக்கு இடம் கொடுப்பான்.
20. தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிப்பது பாவம். பிறருக்கு இன்பம் விளைவிப்பது புண்ணியம்.
21. உழைத்து வாழ்வது தான் சுகம், வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
22. அகங்காரம் என்னும் அசுரனுக்கு ஆளாகி விட்டால் நகரத் துன்பத்தை அனுபவிக்கும் நிலை உண்டாகும்.
23. கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.
24. மலர்ந்த முகமும் இனிய சொல்லும் இன்பமாக இருப்பதற்கு வழி வகுக்கும்.
25. அச்சம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. அச்சமின்மையே அறிவு.
26. காலம் பண விலை உடையது. பொழுதை பயனுடையதாக கழித்தால் மட்டுமே அதற்குரிய லாபம் கிடைக்கும்.
27. இடைவிடாமல் மனதில் உறுதி செய்யப்படும் தீர்மானம் நிச்சயமாக ஒருநாள் நிறைவேறும்.
28. மனதில் பக்தி இருந்தால் உதவும் மனப்பான்மை உண்டாகும். இல்லாவிட்டால் பக்தி பகல் வேஷமே.
29. சோம்பலை புறக்கணியுங்கள். உழைப்பின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது.
30. பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.