இந்த பதிவில் “இரண்டு வரி பொன்மொழிகள்” காணலாம்.
- இரண்டு வரி பொன்மொழிகள்
- இரண்டு வரி தத்துவங்கள்
- Two Line Quotes In Tamil
Two Line Quotes In Tamil
இரண்டு வரி பொன்மொழிகள்
எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம்.
மலர்களுக்கு சூரிய ஒளி எப்படியோ அதுபோல மனித நேயத்திற்கு புன்னகை.
படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும்.
பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல், கல்வியினால் ஆன்மா சிறப்படைகின்றது.
எங்கு அறிவு முடிவடைகின்றதோ அங்கு மதம் தொடங்குகின்றது.
விவாதத்தில் நிச்சயமாக வெற்றி பெற ஒரே வழிதான் உண்டு. அது விவாதங்களை தவிர்ப்பதுதான்.
அன்பு கிடைக்கவில்லையே என்று ஏங்காதீர்கள். அன்பை கொடுக்கப் பழகுங்கள் அன்பு தானாகக் கிடைக்கும்.
நீங்கள் எப்படியும் யோசித்தேயாக வேண்டும், அதை ஏன் பெரிதாக யோசிக்கக்கூடாது?
தீர்வுகளில் கவனம் செலுத்துவதே முக்கியம்; பிரச்சினைகளில் அல்ல.
புத்திசாலித்தனமான மனிதர்கள் நல்லவர்களே; ஆனால் சிறந்தவர்கள் அல்ல.
அனைத்து வகையான அறிவுக்குமான ஆரம்பநிலை ஒரு அன்பான இதயமே.
எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி ஒன்றுள்ளது; அது மனிதனின் மனோசக்தி.
ஒவ்வொரு உன்னதமான பணியும் முதல் யோசனையில் சாத்தியமற்றதே.
ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல; அதனை அறியவேதான்.
சொர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் சில நிமிடங்களாவது நரக அனுபவம் தேவை.
வெற்றியை நோக்கிய விருப்பத்தைக் கொண்ட மனிதனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது.
மனிதனின் இதயத்தை திறப்பது எது? அவனை அறியாமல் எழும் சிரிப்புதான்.
கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை ஆற்றுங்கள். அடுத்த கடமை என்ன என்பது தன்னாலே புலப்படும்!
பயத்தை வெல்வதே மனிதனின் முதல் கடமை; அதை செய்யாத வரை அவனால் செயல்பட முடியாது.
திறமை உடையவர்கள் மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள்.
இலக்கு இல்லாத மனிதன், சுக்கான் இல்லாத கப்பலைப் போன்றவன்.
தவறு என்று எதையும் உணராமல் இருப்பதே தவறுகளில் தலையாயது ஆகும்.
இரண்டு வரி தத்துவங்கள்
பணம் முட்டாளுக்குக் கூட அறிவாளி நண்பனை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
நல்ல வழிகாட்டுதலாக மாறாதவரை தண்டனை என்பது மதிப்பற்றதே.
அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
எளிமையானதாக மாறுவதற்கு முன் அனைத்து விஷயங்களும் கடினமானதே.
குணத்தில் மிக உயர்ந்தவனும், குணத்தில் அடிமட்டத்தில் இருப்பவனும் ஒருபோதும் மாறவே மாட்டார்கள்.
உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் சக்திமிக்க மனிதர்களாகத் திகழ்வர்.
நாம் அழுதுகொண்டே பிறக்கின்றோம், குறை சொல்லியே வாழ்கின்றோம், ஏமாற்றத்துடன் இறக்கின்றோம்.
ஒரு செம்மறியாடு ஓநாயிடம் சமாதானம் பேசுவது பைத்தியக்கார செயல்.
நினைவில் வைத்திருக்கும் விஷயங்களை விட அதிகமானவற்றை நாம் மறந்து விடுகின்றோம்.
சிரிக்கத் தெரியாதவனும், சிந்திக்கத் தெரியாதவனும் வாழ்வில் சிறப்புப் பெறுவதே இல்லை.
கனிவான முகத்துடன் கொடுக்கப்படும் பரிசு என்பது இரட்டிப்பு அன்பளிப்புக்கு சமமானது.
நீங்கள் இருக்கும்போது உங்களை கண்டு அஞ்சுபவன் நீங்கள் இல்லாதபோது உங்களை வெறுப்பன்.