அச்சம் என்பது மடமை என பல அறிவு சான்றோர்கள் கூறுகின்றனர். அச்சம் என்பது தன்னம்பிக்கையை உடைத்து சோர்வினை கொடுத்து எமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது.
இருப்பது ஒரு வாழ்வு அதனை நாம் வெற்றியாகவும் மகிழ்வாகவும் மாற்றுவதற்கு முதலில் நாம் எமக்குள் இருக்கும் அச்சம் எனும் தடையை உடைத்து ஏறிய வேண்டும்.
#1 அச்சம் தவிர் கவிதை
அச்சம் தவிர்.!
அறிவு கண்களை விளித்து கொள்
அவமானங்களை கண்டு அச்சம் கொள்ளாதே
அடுத்த அடி உனதாக இருக்கலாம்..
எதையும் ஏற்றுக்கொண்டு பார்
நீ போகும் வழி உனதாகும்
மூளையற்ற மூடர்களை பேச்சை விட்டு பார்
உன் வாழ்க்கை ஒளிமயமாகும்..
மரணத்தை போன்ற நரகத்தை கொடுப்பது
விஷத்தை விட கொடியது இருப்பினும்
உன் துணிவை விட சிறியது
அச்சம் தவிர் அற்புதமாய் தவிர்..
நாளை விடியல் உனதாகட்டும்
உன்னை நீயே நிமிர்ந்து பார்
உன் அவமானங்களை கண்டு சிரிக்கட்டும்
ஒரு நாள் அந்த சிரிப்புக்கள் உனது மாலை ஆகும்..
எதை கண்டு அச்சம்
உன்னை கண்டா, அல்லது
உன்னை ஏமாற்றும்
இந்த உலகத்தை கண்டா..
விளித்து கொள்.!
உன் அச்சம் உன் எதிரி..
உன் கேடு.. உன் அழிவு..
அச்சம் தவிர்.! நெஞ்சை நிமிர்த்தி சொல்
அச்சமென்பது எனக்கில்லை.!
#2 அச்சம் தவிர் கவிதை
அச்சம் எனும் மடமையை
ஆழ் கடலில் தள்ளி விடு
அற்புதமான துணிவை
ஆழ் மனதில் எண்ணி விடு..
இருளாகிய அச்சத்தை
ஒளியான துணிவால் வென்று விடு
அச்சம் உன்னை கோழையாகவும்,
உன்னை அடிமையாகவும் மாற்றி விடும்..
அச்சத்தில் உன்னை நீ இழப்பாய்
உறவை நீ மறப்பாய்
உன்னை ஏமாற்ற சில கூட்டம்
உன் ஏமாற்றத்தை பார்க்க பல கூட்டம்..
அச்சம் தன்னை தவிர்,
அழகாய் ஓர் உலகம் அமைப்பாய்
அச்சம் தன்னை தவிர்,
அற்புதமாய் ஒரு வரலாறு படைப்பாய்..
அஞ்சி நீ நடுங்குவதற்கு,
இந்த உலகில் எதுவும் இல்லை
மாவீரனாய் உயிர்த்தெழ,
அச்சம் தவிர்..
செல்லும் பாதையை உனதாக்க,
உனக்கோர் பாலத்தை அமைத்துகொள்
அச்சம் தவிர்த்து உன்னை நீயே செதுக்கி,
அங்கே உனகொரு அடையாளத்தை உருவாக்கி கொள்.!
#3 அச்சம் தவிர் கவிதை
அச்சம் தவிர்.!
எண்ணியவை கைகூட வேண்டும்
இயலாமை அகன்றோட வேண்டும்
உலகம் உன் கைகளில் தவழ வேண்டும்..
அச்சம் தவிர்.!
அறியாமை எனும் இருளை போக்க வேண்டும்
அற்புதமான படைப்பு படைக்க வேண்டும்
ஏழு கடல் தாண்டி உன் பெயர் அறிய வேண்டும்..
அச்சம் தவிர்.!
மாவீரனாய் உருவாக வேண்டும்
உன் மகத்தை உலகம் சொல்ல வேண்டும்
மாண்பு மிகு மரியாதையுடன் நீ வாழ வேண்டும்..
அச்சம் தவிர்.!
அறிஞனாக உன்னை மாற்ற வேண்டும்
எண்ணற்றவை கற்க வேண்டும்
உன்னை நீயே அறிய வேண்டும்..
அச்சம் தவிர்.!
உனக்கோர் பாதை அமைக்க வேண்டும்
உன் வரலாறு நாளை சொல்ல வேண்டும்
சிலையில் உன் பெயர் எழுத வேண்டும்..
அச்சம் தவிர்.!
அன்புள்ளவரை உன்னுடன் சேர்க்க வேண்டும்
அறிஞர்கள் சபையை நீ ஆள வேண்டும்
அக்கினியாய் உன் உண்மை திகழ வேண்டும்..!
மேலும் தொடர்ந்து படியுங்கள்: