அச்சம் தவிர் பேச்சு போட்டி

acham thavir speech in tamil

தாமரை மேல் வீற்றிருக்கும் சரஸ்வதி போல் என்னை பார்வையிட வந்து இருக்கும் நடுவர்களுக்கும் என் போன்ற மாணவர்களுக்கும் இனிய வணக்கங்கள்.

நான் உங்கள் முன் அச்சம் எனும் மடமையை தவிர்ப்பதை அதாவது அச்சம் தவிர் என்பதை கூற வந்துள்ளேன்.

அச்சம் என்றால் என்ன

நம் மனதில் தோன்றும் பல உணர்ச்சிகளின் சேர்க்கையும் ஆபத்து வருவதை கண்டு உள்ளத்தில் உதிக்கும் எண்ணமும் அச்சம் ஆகும். அச்சமானது கவலை, கோபம், மன அழுத்தம், பதற்றம் என்பவற்றால் உருவாகும். அச்சத்தை பயம் என்ற சொல் கொண்டும் அழைப்பார்கள்.

உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு தீய குணங்களை கொண்டு இருப்பார்கள். அதில் அச்சமும் தீய குணம் ஆகும். அச்சம் மனதில் வந்தால் செய்வதறியாது செயல்களை செய்து ஆபத்துக்கு உள்ளாவார்கள். உடன் பிறப்புக்கள் இடையில் சண்டை, பகை, பொறாமை குணங்களும் சமூகத்தில் தீயவன் பட்டத்தையும் பெறுவான்.

அச்சம் நம்மையும் கொன்று நம் உறவுகளையும் கொன்று விடும். தீய பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும். மது, மாது , அவமானங்கள் என மிருகத்தை போல் நம்மை மாற்றி விடும். பல தோல்விக்கு வழிவகுக்கும். சபை ஒன்றில் உன் மதிப்பை இழக்க செய்யும். ஆடு போல் பல பொருள் தேடச்செய்யும். உயிரோடு உன்னை வதம் செய்யும். அச்சம் இருப்பவன் அறிவில்லாதவனுக்கு ஒப்பிடப்படுகின்றது.

பாரதியாரின் அச்சம் தவிர் கூற்றுகள்

பல அறிஞர்கள், பல கவிஞர்கள் அச்சம் தவிர் பற்றி பல கவிதைகள், பல பொன்மொழிகள் சொன்னார்கள். இருப்பினும் மகாகவி பாரதியாரின் அச்சம் தவிர் கவிதைகளும் கூற்றுகளும் இன்றும் முன்நிலையாக உள்ளது.

“அச்சமில்லை அச்சமில்லை….
அச்சம் என்பதில்லையே….” என்ற வரிகள் அச்சம் தவிர்ப்பதை குறிக்கிறது. அதாவது ஒரு நபருக்கு அச்சம் என்பது இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

அச்சம் பற்றிய ஏனைய சான்றுகள்

பாரதியார் போல் இன்னும் பல புலவர்கள், முன்னோர் வாக்குகள், நாட்டு தலைவர்கள் என சான்றுகள் உள்ளன.

அவற்றின் உதாரணம் சில “பயங்களின் கூடாரம் தன்னம்பிக்கையின் சேதாரம்” என நம் முன்னோர்களின் பொன்மொழி அச்சத்தை பற்றி சொல்கிறது.

“வெற்றி பெற விடாமல் நம்மை தடுப்பவை, தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் தான்” என ஷேக்ஸ்பியர் கூறுகின்றார்.

இவ்வாறு பலர் அச்சத்தை பற்றி அதனால் படும் துன்பத்தை பற்றியும் கூறி உள்ளார்கள்.

அச்சம் தவிர் என்றால் என்ன

நம் மனதில் ஓடும் எண்ணங்களை எமக்குள் இல்லாமல் ஒழிப்பது அச்சம் தவிர்ப்பது ஆகும். அச்சம் தவிர்ப்பதற்கு நம் மனதில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, துணிவு, நேர்மை எனும் மனப்பாங்குகளை கொண்டு இருக்க வேண்டும்.

அச்சம் தவிர் பற்றி திருக்குறளில் “அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு” என்று கூறுகிறது. அதாவது உள்ளத்தில் அச்சம் உள்ளவருக்கு புறத்தில் அரண் இருந்தும் எந்த பயனும் இல்லை என்பதாகும்.

எவ்வாறு அச்சம் தவிர்ப்பது

“மனதில் உறுதி வேண்டும்” என்ற பாரதி கூற்றுக்கு ஏற்றாற் போல் நம் மனதை கத்தி போல் தீட்டி வைத்தால் பயம் எனும் கொடிய விலங்கு நம்மை விட்டு சென்றுவிடும். நம் மேல் நாமே தன்னம்பிக்கை வைத்துக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியை எப்பொழுதும் தவறவிடக்கூடாது. துணிந்து எதிர்த்து நின்று உண்மையை உரைக்க வேண்டும். இதனால் அச்சம் என்பதை தவிர்க்க முடியும்.

முடிவுரை

இதன் மூலம் கூறவருவது அச்சமாகிய எம்மில் உள்ள அறியாமையை போக்க வேண்டும். அப்பொழுது தான் உலகத்தின் சிறந்த மனிதனாகவும் பார் போற்றும் நபராகவும் அறிவுடனும், திறமையுடனும் வாழ முடியும். அச்சம் தவிர் அற்புதமாய் நீ வாழ் என கூறி கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.

Read More:

தனிமை பெண் கவிதை