காடு பற்றிய கவிதை

kaadu kavithai in tamil

காடு பற்றிய கவிதை

ஆதியும் அந்தமும் இல்லா
இவ் உலகில் ஆயிரம் உயிரினங்கள்
இவ் அற்புத படைப்பில்
நம்முடன் காடுகளும் ஓர் அங்கம்..

ஆதிகால மனிதனின்
பிறப்புரிமை நம் காடு
பல் ஆயிரம் உயிர்களின்
வாழ்விடம் நம் காடு..

இறைவனின் கொடையில்
யாவும் அற்புதமே
அவற்றை நம் தாய் போல்
காப்போம் முப்பொழுதுமே..

நம் முன்னோரின்
ஆயுத சக்தி நம் காடு
நம் நோய்களின்
திருத்தங்கள் நம் காடு..

அழகிய சொர்க்கம்
நம் காடு
பஞ்ச பூதங்களின்
பொக்கிசம் நம் காடு..

ஆதவனே அடைய முடியாத
பெரும் பரப்பு நம் காடு
அவற்றின் அற்புதங்கள் இன்னும்
ஆயிரம் உண்டு இவ் உலகில் கூற..!

காடுகள் பற்றிய கவிதை

காகிதமாய் போன -நம்
காடுகளின் வரலாறு இது..
பகலில் இருளின்
அற்புதத்தை இங்கு கண்டேன்..

அதிசயம் என
ஆராய்ச்சி மையங்கள் சில அங்கே..
ஆச்சரியம் என
கயவர்கள் கூட்டம் பலர் அங்கே..

நகரமான காடுகளின்
பட்டியலை புரட்டினேன்..
அதில் ஆயிரம்
பாதுகாக்க வேண்டி உள்ளது இன்று..

மனிதனாக நினைக்கயில்
எனக்குள் வெட்கம்..
நன்றி உள்ளவனே மனிதன் என்பார்
இன்று மனிதன் மிருகமானது ஏன்..?

ஆயிரம் உயிர்களை காத்த நம் காடுகளை
காக்கும் கடமையில் நாம் உள்ளோம்..
ஆனாலும் சிலர் சுரண்டுவதை விடவில்லை
உலக மாதவின் கோவத்திற்கு இன்னும் வழி வகுக்கின்றோம்..

எத்தனை எச்சரிக்கை வந்த போதும்
மனிதனின் குணம் மாறவில்லை..
ஆனால் எச்சரிக்கையாக இருந்தாலும்
நம்மை காப்பதற்கு தயங்கியது இல்லை..

காடுகளை அழித்து
பஞ்சத்திற்கு இட்டு செல்கின்றோம்..
வறுமையை நாடுகின்றோம்..

நம் முன்னோர் விட்டு
சென்றதை – நாம்
தராசுகளில் சரி பார்கிறோம்..
ஆதாயம் இல்லாமல்
நம்மை நாமே அழிகின்றோம்..

நம் காடுகளை நாமே
பாதுகாப்போம்..
இவ் உலகத்தை
காப்போம்..!

காடு கவிதை தமிழ்

பச்சை நிற அழகி
உன் கம்பீரமான கூட்டத்தை,
என் இரு கண் பார்த்து
வியந்தது அன்று..

ஆதவனின் வருகையை
எண்ணி உன் தவிப்புகள்
புரிந்தது எனக்கு..

அருவிகளின் சலசலப்பும்
வண்டுகளின் ரீங்காரமும்
கான ஒலியை பரப்பியது..

மான்கள் துள்ளி விளையாடுவதும்
யானைகள் கூட்டங்கள் செல்வதும்
காவியங்களாய் இருந்தது..

இடை இடையே
சிங்க கர்ச்சனையும்
புலி உறுமலும்
என்னை மிரள வைத்தது..

ஒய்யாரமாய் தலை
நிமிர்ந்த மரங்களும்
என் வரவை எதிர்பாராத
விலங்குகளின் ஓட்டமும்
விசித்திரமாய் இருந்தது..

தூக்கத்தில் அலறும் வவ்வால்களும்
நரியின் ஊளைகளும்
ஒரு கணம் பதைபதைத்தது..

இன்னும் பெயரே தெரியாத
அத்தனை உயிர்களையும்
காடுகள் இரகசியமாய்
பாதுகாத்துள்ளது..

இத்தகைய அழகையும்
பயங்கிரத்தையும் வாழ்க்கையில் ஒரு
முறையாவது பாத்திட
வேண்டும்..

இந்த அனுபவத்தை என்
அழகிய நிமிடங்களாக மாற்றியது
காடுகளே..!

Read More:

அன்பின் வழி கவிதை

தேர்தல் விழிப்புணர்வு கவிதை