இன்று என் சிறு உரையை காண வந்துள்ள அனைவருக்கும் என் பொன்னான வணக்கங்கள். இறைவனின் படைப்புகள் யாவும் அற்புதமானவை இருந்தும் மானிட பிறவி மிகவும் அதிசயமானவை என பலர் கூறும் கருத்து. அந்த வகையில் ஒரு கொடிய விலங்கும் மனிதனே என்பதையும் யாவரும்அறிந்தது.
மனிதனின் கொடிய பக்கங்களில் போதை பொருள் முக்கிய இடத்தை வகுத்துள்ளது. இன்று நானும் அந்த போதையின் நிலையை எடுத்து சொல்ல இங்கு வந்துள்ளேன்.
போதைப்பொருள் என்றால் என்ன
இன்றைய சமூகத்தினரின் எதிர்காலத்தை சீரழித்து சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக போதை பொருள்கள் விளங்குகின்றன. போதை பொருளை நுகர்பவர்கள் தன்னிலை மறந்து பல குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது போதை பொருளை பாவிப்பவர்களை தாண்டி சுற்றி இருப்பவர்களுக்கும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
இன்று பல பெயர் தெரியாத போதை பொருட்களை பண ஆசையில் கறுப்பு சந்தையில் ரகசியமாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சமூக பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
போதைப்பொருட்களாக மதுபான வகைகள், புகையிலை, கஞ்சா, போதை ஊசிகள், போதை மருந்துகள் என பல பெயர்களில் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன.
போதைப்பொருள் சமூகத்தில் பாதிக்கும் முறை
இன்றைய சமூகத்தில் போதைக்கு அடிமையாகும் வயதினர் இளம் வயதினர் என நாட்டின் சுற்றறிக்கை கூறுகிறது. இதன்படி அதிகமாக பாடசாலை மாணவர்களை அதிகமாக இலக்கு வைத்து போதைக்குள் அடிமையாக்கப்படுகின்றது.
அதனை மாணவர்கள் அறிந்தும் அறியாமலும் உட்கொண்டு போதை பழக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் பானங்களில் போதை பொருட்களை கலந்து விநியோகம் செய்வதால் பண நோக்கமும் பூர்த்தியாகிறது. இளைய சமூகத்தை இதனுள் புகுத்துவதால் அவர்களின் நாடு சீரழியும் நோக்கமும் நிறைவடைகிறது.
அத்துடன் சில வீடுகளில் கொலை, பெண்கள் வன்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோகம், பகை உணர்வு, பேராசை என பல கொடிய விடயங்களை நடத்தவும் தூண்டுகிறது இந்த போதைப்பொருள்.
போதைப்பொருள் உட்கொள்வதின் விளைவுகளும் போதை பொருளை தடுக்கும் வழிகளும்
இவர்களுக்கு தெரியவில்லை போதைப்பொருட்களை உட்கொள்வதால் உடலில் பல பாகங்கள் செயலிழந்து விடும்.
அதில் சிறுநீர் பை, இரைப்பை, சுவாசப்பை, இதயம் பலவீனம் அடையும், மன அழுத்தம் ஏற்படும், இரத்த அழுத்தம் ஏற்படும், உணவுக்குடல் சுருங்கி காணப்படும், மலச்சிக்கல் ஏற்படும், அல்சர் உண்டாகும், வாயில் கட்டிகள், தொண்டை கட்டிகள் என இவ்வாறு இன்னும் பல ஏற்படும். இறுதியில் கனவிலும் நினைக்க முடியாத கொடிய மரணம் ஏற்படும்.
போதை பாவனையை தடுக்க அரசாங்கம் பல சட்டங்களை முன் வைத்துள்ளது. நீண்ட கால சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை, தண்டப்பணம் வசூலித்தல் போன்ற சட்டரீதியான தண்டனை வழங்கப்படுகின்றது.
சில பொருட்களுக்கு வரி வசூலிக்கப்படுகின்றது. அதிகமாக வரி வசூலிப்பதால் பொருட்களின் விற்பனை குறையும் என நம்பப்படுகின்றது. சில பொருட்கள் குறிப்பாக ஆபத்தான போதைப் பொருள்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இருந்தும் பலரும் போதைக்கு அடிமையாகவே உள்ளனர்.
தயவு செய்து உங்களுக்காக மட்டும் அல்ல உங்கள் நலனில் ஆர்வம் உள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமையில் நாங்கள் உள்ளோம்.
எனவே பாதுகாப்பான சூழலை உருவாக்கி நாமும் போதைப்பொருளை ஒழிப்போம். இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.
Read More: