செம்மொழியாம் தமிழ் மொழி கவிதை

semmozhi kavithai tamil

1. செம்மொழியாம் தமிழ் மொழி கவிதை

நாகரிகத்தின் மொழி விதை நம்
தமிழ் மொழி..
நத்தனங்கள் ஆயிரம்
நாக்கில் ஆடிடும் இம் மொழியால்..

செம்மொழியாம் நம்
தமிழ் மொழி..
புலவர்கள் கவியில்
இம்மொழி ஓர் அங்கம்..

பழமையின் மொழி
தமிம் என பல சான்று..
தமிழ் மொழி ஓர்
செம்மொழி என பல வாதங்கள்..

தேனினும் இனிய மொழி
தமிழ் மொழி..
திகட்டாத நம் இனிய
செம்மொழி..

ஆயிரம் மொழிகளில்
தமிழ் தனி மொழி..
அதன் அடிப்படை
நம் உயிர் மொழி..

தமிழ் மொழிக்கு
பல உதாரணம்..
தமிழரே அதன்
முதல் உதாரணம்..

2. செம்மொழியாம் தமிழ் மொழி கவிதை

என் உயிர் மொழி
தமிழ் மொழி
என் தாய்வழி வந்த
செம்மொழி நம் தமிழ்மொழி..

பல எழுத்துகளின் கூட்டு
தமிழ் சொற்கள்
பல சொற்களின் சேர்க்கை
நம் தமிழ் மொழி..

தமிழ் மொழி போல்
செம்மொழியை கேட்டதில்லை இவ் உலகில்
கவிஞர்களின் பேசும் மொழி
நம் தமிழ் மொழி..

காதில் கவிகளை
பாய்ச்சும் செந்தமிழ்..
துன்பத்தில் இன்பமாக்கும்
தூய தமிழ்..

ஒரு சொல் பல பொருள்
தமிழ் ஒரு தனி பொருள்..
கவிகளின் அடை மொழி
என்றும் எம் முதன் மொழி..

தமிழ் மொழிக்கு என்
தலைவணக்கம்..
தமிழ் என் தாய் மொழி
என்றுமே அது என் ஆயுத மொழி..

3. செம்மொழியாம் தமிழ் மொழி கவிதை

தாய் தந்த அன்பு மொழி
தந்தை சொன்ன அறிவு மொழி
ஆரிராரே சொல்லி தந்த
அழகான நம் செம்மொழி..

இனிக்க இனிக்க சொல்லும் மொழி
திகட்டாத திரவ மொழி
சிதையாத ஓர் தேன் மொழி
என்றும் எம் தாய் மொழி..

முன் தோன்றிய தொன்மொழி
முன்னோர் சொன்ன நல்மொழி
கவிஞர் போற்றும் அடைமொழி
அற்புதமான பழம் மொழி..

கவிகளின் முதன் மொழி
கருத்துகளின் புதுமொழி
கதைகளின் தொடர்மொழி
அதிசயமான எம் மொழி..

கண்ணை கவரும் இன்ப மொழி
காதில் கேட்கும் கவிமொழி
நாவால் சுவைத்திடா நற்சொல் மொழி
நம் இனிய நற்பண்மொழி..

உதட்டில் உள்ள புன்னகை மொழி
இமை போல் காக்கும் அறமொழி
உயிராய் கலக்கும் மர்மமொழி
உன்னதமான என் மொழி..

சிறுவர்கள் பேசும் மழலை மொழி
குமரிகள் செய்யும் காதல்மொழி
கிளவிகள் சொல்லும் பேசாமொழி
இது நம் இளம்மொழி..

அகிலத்தை ஆண்ட அதிகாரமொழி
ஆதி வந்த முதல்மொழி
இன்பமான சொற்பமொழி
எல்லோர் உள்ளத்திலும் எம்மொழி..

யாவரும் அறிந்த பொன்மொழி
மூத்தோர் பாடிய முதுமொழி
காவியமான நம் மொழி
எக்காலம் அழியாத தமிழ்மொழி..!!

Read More:

காடு பற்றிய கவிதை

அன்பின் வழி கவிதை