சிறுசேமிப்பு பேச்சு போட்டி

siru semippu pechu potti in tamil

என் அன்புக்குரிய அதிபர், ஆசிரியரே, என் இனிய பொற்றோர்களே, என் சக மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.

சிறுவயதிலே சிறு சேமிப்பை எமது பெற்றோர்கள் எமக்கு உருவாக்கி தந்து உள்ளார்கள். எமது சேமிப்புகளால் எமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள இம்மேடையில் நான் வந்துள்ளேன்.

சேமிப்பு என்றால் என்ன

நம் சிறு வயதிலிருந்து முதுமைக்காலம் வரை வாழ்வதற்கு தேவையானவற்றை சிறுக சிறுக சேர்ப்பதே சேமிப்பு ஆகும். சேமிப்பின் தொடக்கம் சிறு சேமிப்பில் இருந்து உருவாகின்றது.

சிறு சேமிப்பு பண வடிவிலும் நகை வடிவிலும் நிலையான சொத்து வடிவிலும் அதாவது நிலம், வீடு என்ற வடிவங்களிலும் சேமிக்கலாம். சிறுவர்களான நாம் பண வடிவில் இலகுவான சேமிப்பையும் பெரியவர்கள் ஆகிய அதிபர், ஆசிரியர், பெற்றோர், ஊழியர் என்பவர்கள் ஏனைய வடிவத்திலும் சேமிப்பது உகந்தது.

சிறுதுளி பெரும் வெள்ளம் என்ற பழமொழியானது சிறு சேமிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது.

அதுபோல் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை போல் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு ஏற்றாற் போல் சேமிப்பை வளர்த்துகொள்வது மிக சிறந்தது. சிறு சேமிப்பை நாம் எல்லோரும் சிறுவயதில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிறு சேமிப்பின் முக்கியத்துவம்

சிறுவயதில் நம் பெற்றோர்கள் குறிப்பிட்ட பணத்தை அன்பளிப்பாகவும் உறவினர்கள் பிறந்தநாள் பரிசாகவும் தரும் பொழுது நமக்கு ஓர் உண்டியலையும் தந்து “இதில் சேர்த்து வை தேவைப்படுகிற போது பயன்படுத்தலாம்” என்பார்கள் நம் பெற்றோர்கள் இதுவும் சேமிப்பக்குள்ளே தான் வரும்.

பிற்காலங்களில் ஏதோ ஒரு வழியில் அந்த பணம் உபயோகப்படும். அதேபோல் தான் இந்த சேமிப்பும் பல வழிகளுக்கு தேவைப்படுகின்றது.

அதிகமாக பொற்றோர்களே இந்த சேமிப்பில் அக்கறை செலுத்துகின்றார்கள். காரணம் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் அவர்களின் எதிர்காலமும் சேமிப்பில் தான் தங்கியுள்ளது.

உதாரணங்கள் பல உள்ளது அதில் சில பிள்ளைகளின் கற்கை நெறிகளின் சீர்படுத்தல் நிலைக்கும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் சிறு சேமிப்பு கை கொடுக்கும்.

பிள்ளைகளின் திருமணத்திற்கும், பிள்ளைகள் சந்தோசமாக வாழ்வதற்கும் சிறு சேமிப்பு முக்கியமாகின்றது.

பெற்றோரின் தாய் தந்தைகளின் ஓய்வு காலத்தை பயனுள்ளதாக்கவும் நோய்களை போக்கவும் சிறு சேமிப்பு முக்கியமாகிறது. பெற்றோர்களின் அவசர நிலைமைகளிற்கும் இந்த சிறு சேமிப்பு முக்கியத்துவமாய் உள்ளது. இவ்வாறு இன்னும் பல நிலமைகளில் சிறு சேமிப்பு முக்கியம் பெறுகிறது.

இன்றைய உலகத்தின் சேமிப்பு எவ்வாறு உள்ளது

நம் இன்றைய வாழ்வில் பணம் பெரிய பேசு பொருள் ஆகியுள்ளது. சிறு வயதில் இருந்து முதுமை காலம் வரை நமக்கு சேமிப்பு கட்டாயமான விடயம் ஒன்றாகவும் உள்ளது.

எனவே பொதுவாக பணத்தை சேமிப்பதில் தான் அதிக நாட்டமும் மக்களிடையே காணப்படுகின்றது.

மாணவர் ஆகிய நாம் வங்கிகணக்குகளில் பல சேமிப்பு வழிகளை நாடி இருக்கின்றோம். நீங்களும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் பல வழிகளில் சேமிப்புக்களை செய்துள்ளீர்கள்.

சிறு சேமிப்பை பேணாதவர்கள் இன்றில் இருந்து சிறு சேமிப்பை உருவாக்குங்கள். சிறு சேமிப்பை பேணுவதும் மிக இலகுவானது.

எனவே சேமிப்பின் முக்கியத்துவத்தையும் சேமிப்பு பற்றியும் ஒரு நிலைக்கு மாணவர் ஆகிய நாங்களும் எங்கள் பங்களிப்பை சிறு சேமிப்பில் இருந்து தொடங்குவோம் என கூறிக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன். அனைவருக்கும் நன்றிகள் ஆயிரம்.

Read More:

அறிஞர் அண்ணா பேச்சு போட்டி