இந்த பதிவில் “தமிழ் ஒரு வரி தத்துவங்கள்” பார்க்கலாம்.
- தமிழ் ஒரு வரி தத்துவங்கள்
- தமிழ் தத்துவங்கள்
- Oru Vari Thathuvam In Tamil
தமிழ் ஒரு வரி தத்துவங்கள்
1.எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.
2. மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில் அவன் வெற்றி பெறுகின்றான்.
3. நிதானமாகவும், மிதமாகவும் இரு. உன் உடல் நலமாக இருக்கும்.
4. பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.
5. சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.
6. தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.
7. நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலைசிறந்தது.
8. காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம்.
9. பாடுபடாமல் பயன்கள் கிட்டாது.
10. பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும்.
11. கடினமான இதயத்தை உடையவன் கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான்.
12. உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழைந்துவிடத் துணியாது.
13. தயாராவதில் தோல்வி என்றால், நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று அர்த்தம்.
14. இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம்.
15. மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகமிக நல்ல தொண்டாகும்.
16. கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் மண்ணோடு கலந்துள்ள வெள்ளிக்கட்டி போன்றது.
17. புகழைத் தேடாதே குணமுள்ள பண்புள்ள நல்ல மனதைத் தேடு.
18. உழைப்பு சுறுசுறுப்பானது. அது வசதிகளையும் நன்மதிப்பையும் பெற்றுத் தருகிறது.
19. நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டுப் பெறுவதைவிட, நீ நன்றாகச் செய்தாய் எனப் பாராட்டுப் பெறுவது மேல்.
20. பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம்.
Oru Vari Thathuvam In Tamil
21. செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.
22. கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர்.
23. தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார்.
24. காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.
25. சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும். சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கும்.
26. கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம். ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.
27. நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு நாள் விலை மதிப்பற்றது!
28. துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!
29. தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால் தேவையுள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும்.
30. செல்வத்துடன் இருக்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதைப் போல் சேமிப்பதைப் பற்றியும் நினைக்க வேண்டும்.
31. முட்டாளின் இதயம் அவன் வாயிலுள்ளது. ஆனால் அறிவாளியின் வாய் அவன் இதயத்திலுள்ளது.
32. நமக்கு ஏறும்புகளைப்போல் உபதேசிப்பவர் வேறு யாருமில்லை, ஆனால் அந்த எறும்புகள் பேசுவதில்லை.
33. சிறந்த சொல்லைவிட சிறந்த செயலே மேன்மையானது.
34. செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத சொற்களைப் பேசுவதும் மௌனம்தான்.
35. மிருகங்கள் உலகில் உள்ளன. மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான்.
36. உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல, அன்பினாலும் காண்கிறோம்.
37. திறமை எனும் தாயும் உழைப்பு எனும் தந்தையும் பெற்றெடுத்த அழகுக் குழந்தையே புகழ்.
38. பணம் உரம் போன்றது. பரவலாகத் தூவாவிட்டால் பயன் எதுவும் கிடையாது.