பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

Proverbs In Tamil and English

இந்த பதிவில் “பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்” காணலாம்.

  • பழமொழிகள் தமிழ்
  • Proverbs In Tamil and English
  • Palamoligal In Tamil and English

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

1.விடாமுயற்சி வெற்றியை தேடித் தரும்.

Perseverance kills the game.

2. மிகச் சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும்.

Good things never come easy.

3. வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை.?

Ability is of little account without opportunity.

4. ஒரு வித்தகனுக்கு பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.

Behind an able man there are always other able men.

5. திறமைப்படி பெறு.. தேவைப்படி கொடு.

From each according to his abilities to each according to his needs.

6. உயர்வாக கருதினால் உயர்ந்திட முடியும்.. திறமைசாலி என நினைத்தால் திறமைசாலி ஆகலாம்.

Some are able because they think they are able.

7. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

Do what you can with that what you have from where you are.

8. கண்ணில் படாதது மனதிலும் படாது.

Out of sight out of mind.

9. இல்லாததற்கு ஏங்கிடும் இதயம்.

Absence makes the heart grow fonder.

10. கண்ணுக்கு எட்டாவிட்டால் இதயத்திற்கும் எட்டாது.

Far from eye far from heart.

11. வராது இருப்போர் வழிமுறை பேணார்.

Never were the absent in the right.

12. அரிதாக பார்ப்பவை விரைவாக மறந்து போகும்.

seldom seen soon forgotten.

13. நெருப்புக்கு காற்று போல.. காதலுக்கு பிரிவு.

Absence is to love what wind is to fire.

14. பூனை புறம்போனால் எலி கூத்தாடும்.

When the cats away the mice will play.

15. மேல் விழுந்து பூசிக்கொண்டால் மேவாது நட்பு.

Friends agree best at a distance.

16. முனைப்பான விளைவுகளே விபத்துக்கள் ஆகும்.

Accidents are outstanding effects.

17. குறுகிய அறிமுகம் வருந்த வைக்கும்.

Short acquaintance brings repentance.

18. அறிமுகம் உடையோர் பலராயினும் உற்ற நண்பர்கள் ஒரு சிலரே வேண்டும்.

Have but a few friends though many acquaintances.

19. புதிய அறிமுகங்கள் புகாத வாழ்க்கை விரைவில் தனிமைப்படும்.

If a man does not make new acquaintances through life he will soon find himself alone.

20. வாய்ச் சொல்லை விட.. செயலின் குரலே உரக்க ஒலிக்கும்.

Action speaks louder than words.

Proverbs In Tamil and English

21. துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவது மேல்.

Better wear out than rust out.

22. உழைக்க கற்ற பின் பொறுக்க கற்றுக்கொள்.

Learn to labour and to wait.

23. உலகமே மூழ்கினாலும் நல்லதை சரியாக செய்.

Do well and right and let the whole world sink.

24. ஆழ்ந்து ஆராய்தல் பலர் பணியாயினும் செய்து முடித்தல் ஒருவன் பணியே.

Deliberation is the work of many men action of one alone.

25. செயல்படாதிருத்தல் செம்மையுற முடியாது.

Nobody can become perfect by merely ceasing to act.

26. நோக்கங்களே செயல்களின் உரைக்கல்.

All actions are judged by the motives prompting them.

27. ஒவ்வொரு விழுமிய செயலும் பழுதின்றி நிற்கும்.

Every noble activity makes room for itself.

28. வெற்றிச் செயலே விளைபயன் ஆகும்.

Successful action trends to become an end in itself.

29. ஆதாமின் வீழ்ச்சியால் நாம் பாவிகள் ஆனோம்.

In Adam’s fall we sinned all.

30. ஆதாம் அப்பிளைக் கடித்ததால் நம் பல்வலி இன்னும் தீர்ந்தபாடில்லை.

Adam ate apple and our teeth still aches.

31. துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்.

Adversity is the touchstone of virtue.

32. துயரங்கள் பகைவரையும் ஒன்றுபடுத்தும்.

Woes unite foes.

33. துன்பமே போதிக்கும் நல்லாசான்.

Adversity comes with instruction in its hand.

34. துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடினும் அறிவாளியாக்கும்.

Adversity makes a man wise not rich.

35. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது.

Between the mouth and the morsel many things may happen.

36. நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது.

Good counsel has no price.

37. அறிவுரை நல்லதானால் யாரானாலும் கொள்.

Accept if the counsel be good no matter who gave it.

38. உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே.

Give neither advice nor salt till you are asked for it.

39. அளவுக்கு மீறி அறிவுரை கேட்டால் அதிகக் குழப்பம் அடைந்திட வேண்டும்.

Too much consulting confounds.

40. அறிவுரை போல இலவசம் வேறேது.?

Nothing is given so free as advice.

41. அறிவுரை கொடுப்பதினும் கேட்பதே நல்லது.

It is safer to hear and take counsel than to give it.

42. நல்ல அறிவுரை கொடுப்பது எளிது அதன்படி நடப்பது அரிது.

It is hard to follow good advice than to give it.

Read more post from New Tamil Quotes.

கல்வி அறிவு பற்றிய பழமொழிகள்

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்