பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்

Birthday Kavithai Tamil Text

இந்த பதிவில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்” உள்ளடக்கியுள்ளது.

உங்கள் அன்புக்கு உரியவர்களின் பிறந்த தினத்தில் சிறந்த வாழ்த்துக்களை கூறி அவர்களை மகிழ்வியுங்கள்.

  • பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்
  • காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
  • Birthday Kavithai Tamil Text

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்

1.சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

2. தேவதைகள் எல்லாம்
தேடிவரும் பிறந்தநாளில்
உன்னைப் பார்த்திட..
தேவர்களும் தேடி அலைவார்கள்
பிறந்தநாளில் உன்னை வாழ்த்தி
வணங்கிட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

3. அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

4. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

5. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

6. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

7. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

8. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

9. வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

10. இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

11. உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

12. வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

13. நூறு வயதை கடந்தும்
வாழ்க.. பல்லாண்டு..!
என வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

14. நூறு வருஷம் வாழணும்..
அதுக்கு மேலயும் நீ வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

15. கவலைகள் கடந்து நீ வாழணும்..
சோகம் உன்னை தீண்டாமல்
நீ வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

Birthday Kavithai Tamil Text

16. மகிழ்ச்சிகள் நிறைந்து..
உன் கனவுகளை அடைந்து..
உன் வாழ்க்கையில் வளர
உளமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

17. ஆசைகள் கொஞ்சம் அடக்கி வாழணும்..
வாழ்க்கையில நீ ஜெயிச்சி வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

18. சொர்க்கத்தை நீ வாழும்போதே
காண வேண்டும்.. ஆயுள் முழுதும்
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்..
உளமார உன்னை வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

19. உதிராத சூரியனாய்..
உலகிற்கு ஒளிவீச..
உன்னை பூமிக்கு பரிசளித்த
உன் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.!

20. நீ கண்ட கனவுகள் ஒவ்வொன்றாக
நிறைவேற இந்த நல்ல நாளில்
மனமார வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

21. புத்தகமாய் உன் வரலாறை
பலர் உன்னை படித்திடவே..
பல சாதனைகளை நிகழ்த்திட
வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

22. அன்பெனும் குடைபிடித்து
அகிலமே உனை காத்திடவே..
உனை சுற்றி உள்ள
நட்பு வட்டங்கள் பெருக வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

23. ஆகாசம் வாசலாக
உன் வாழ்வு திறக்கட்டும்..
ஏழு பிறப்பு எடுத்தாலும்
இனிமையாக மலர வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

24. சூரியனை தூதனிப்பி
வாழ்த்த நினைத்தேன்
சுருண்டு விழுந்தது உன் வீரம் கண்டு..
தென்றலை தூதனிப்பி
வாழ்த்த நினைத்தேன்
தெறித்து ஓடியது உன் ஈரம் கண்டு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

25. பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்..
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்

1. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
பெண்ணழகு..!
பெண்ணினத்தில் நீ பிறந்ததாலோ
என்னவோ பெண்மைக்கே பேரழகு..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலே.!

2. தேவைதைகள் பூமியில் பிறப்பதில்லை
ஏனெனில்.. வாடி வருந்த வேண்டுமே
தேவதைகளே பொறாமைகொள்ளும்
உன் பேரழகில்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலே.!

3. வெள்ளை உள்ளமே கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை உரித்தாகட்டும்
உனக்கே..
பிரம்மனின் கற்பனைக்கு
எடுத்துக்காட்டு மட்டுமல்ல..
மழைமேகம் கொண்டுவந்த
வானவில்லும் நீயே..
பௌர்ணமி நிலவுகூட
வெட்கப்பட்டு மறையுதே..
இதெல்லாம் உன்னுடைய
பிறந்தநாள் செய்தியறிந்தா?
ரோஜா மொட்டுக்களோடு
வாழ்த்திட ஆசைப்பட்டேன்..
மலர்ந்த ரோஜாவுக்கு
மலராத ரோஜா ஈடாகுமா?
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அன்பே.!

4. வாடாமல் பல்லாண்டு
வாழ வேண்டுமென்று
வாடாமல்லி கொண்டு வாழ்த்த வந்தேன்..
மல்லிகைப்பூ முறைத்து
பார்க்க தொடங்கியது தன்னைவிட..
அழகோ என்ற பொறாமையில்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.!

5. பண்டிகை நாளெல்லாம் பறந்து போகிறது..
உன் பிறந்தநாளை எதிர் பார்க்கையில்
திருவிழா அனைத்தும் சிறுவிழா ஆகிறது..
உன் பிறந்தநாள் எனக்கு பெருவிழாவாக
இருப்பதால்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.!

6. இமையில்லா மீன் மீதும்
பொறாமை கொண்டேன்..
இமைக்காமல் உன் அழகை
முழுநாளும் பார்க்க முடியவில்லை
என்பதற்கு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.!

7. சினமும் சினம் கொள்ள மறுக்கும்
எதிரே கேட்கும் ஒளியாக நீ இருந்தால்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

1.எப்பவும் உன்ன நான்
வாழ்த்திகிட்டே இருக்கனும்..
உன்னோட முகத்தில புன்னகையை
மட்டும் பார்க்கணும்..
உனக்குப் பரிசளிக்க என்கிட்ட
நட்பை விட பெரிதாக ஒன்னுமில்லை
நட்பை மட்டுமே அள்ளித்தருகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

2. உயிர்வரை தொடரும் நம் நட்பு
அதுதானே அதன் சிறப்பு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

3. உன் வாழ்க்கை என்னும் பயணத்தில்
நீ முன்னேறி செல்ல உனக்கு
தடையில்லா பாதை உருவாகட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

4. இனிமையும் புதுமையும்
உனக்கு வரமாக்கட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

5. உன் ஏக்கமும் கனவுகளும்
நிறைவேறட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

6. புதுமை படைத்திட..
புதுவாழ்வு பெற்றிட..
இன்றுமுதல் புதிதாய்
நீ பிறந்தது போல் எழுந்து வா நண்பா..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

7. என்றுமே என் வாழ்க்கையின்
நலன் விரும்பியாக இருக்கும்..
என் நேசமிகு நண்பனுக்கு
என் உணர்வு பூர்வமான
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!

8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆருயிர் நண்பா.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

Inspirational Quotes For Youngsters Tamil

தினம் ஒரு பொன்மொழி