பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி கவிதைகள்

Piranthanal Valthukkal Thozhi In Tamil

உங்கள் அன்புக்குரிய தோழிக்கு இந்த “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி கவிதைகள்” வரிகள் மூலம் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

  • பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி கவிதைகள்
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி
  • Piranthanal Valthukkal Thozhi In Tamil

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி

1.நீ எங்கே சென்றாலும் என்ன செய்தாலும்
இந்த வருடம் முழுவதும் வெற்றியும்
சந்தோஷமும் உன்னோடு பயணிக்க
என் வாழ்த்துக்கள்..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

2. என் உயிர் தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

3. பிறந்தநாளுக்கும் கூட
பிறந்தநாள் கொண்டாட்டம்
நீ பிறந்த பிறகுதான்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.!

4. பூவினம் சேராத பூவொன்று
பூமியில் பூத்த நாள்
இன்று வானம் சேராத நிலவொன்று
மண்ணில் உதித்த நாள் இன்று..
அன்பு தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

5. அனைத்து நாட்களும்
உன் பிறந்த நாளை பார்த்து
பொறாமைப்படுகின்றன.
இந்நாளில் நீ பிறக்கவில்லையே
என்று.. அன்பு தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

6. நம்ம சந்தோஷம் மட்டுமே
தெரிந்த நட்பை விட
நம்ம கஷ்டங்களை சொல்லாமலே
தெரிந்து ஆறுதலாக இருக்கும்
நட்பே சிறந்தது.
அன்பு தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

7. காதலுக்கு எல்லை எத்தனையோ
உள்ளது.. நட்பிற்கு எல்லை
எவன் இங்கு கண்டது..
நம் உறவு எல்லையற்றது..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

8. எல்லா உறவுகளையும் காலம்
பிரித்து விடும்.. காலத்தால்
பிரிக்க முடியாத உணர்வுகளே
நண்பர்கள்..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

9. என் உயர்வில் தொற்றிய
உறவல்ல நீ..
துயரிலும் தோல்வியிலும்
என்னைத் தேற்றியவள் நீ..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

10. அழகு புன்னகையில்
அறிமுகம் தந்தாய்..
அழிக்க முடியாத
அன்பைத் தந்தாய்..
கறை படியாத நட்பைத் தந்தாய்..
கலங்கரை விளக்கமாக
ஒளியை தந்தாய்..
மறக்க முடியாத நினைவுகள்
தந்தாய்..
மானிடப் பிறவியை ரசிக்க
வைத்தாய்..
தேவதை வானில் மட்டும் இல்லை
தோழியே உன்னிலும் இருக்கிறாள்..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

Piranthanal Valthukkal Thozhi

11. தோழியே நட்பிற்கு இலக்கணம்
தேவையாம்
எழுதி கொடுத்து விட்டேன்
உன் பெயரை.
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

12. துடிப்பதெல்லாம் உயிர் அல்ல
எனக்காக துடிப்பது தான் உயிர்..
என் உயிர் என் தோழி..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

13. உனக்கும் எனக்கும் ரத்த
சொந்தம் இல்லை..
உனக்கும் எனக்கும் பூர்வ பந்தம்
இல்லை ஆனால்..
உனக்கும் எனக்கும் இடையே
ஏதோ ஒரு உறவு..
நான் அழுதால் என்னுடன் ஆறுதலாக..
நான் சிரித்தால் என்னுடன்
மகிழ்ச்சியாக..
நான் விழுகின்ற வேளையில்
உயரவைக்கும் ஏணியாக..
நான் தோற்றுப் போய் நிற்கையில்
எனை தேற்றுகின்ற அன்னையாக..
நான் வழிதவறி போகையில்
திருத்துகின்ற ஆசானாக..
உனக்கும் எனக்கும் ஒரு உறவு
அது மூன்றெழுத்து மந்திரம் நட்பு..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

14. காலங்கள் மாறி யுகங்கள் நான்கும்
மாறலாம்..
மாறும் யுகங்களிலும் மாறாமல்
நிலைத்து நிற்கும் அகம் புரிந்த நட்பு..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

15. நட்புக்கு வயது முக்கியமில்லை..
பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும்
உன்னதமான உறவே நட்பு..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

16. சண்டை போட்ட அடுத்த நிமிடமே
சரி விடு இனி இப்படி
பண்ணாதேன்னு வந்து பேசும்
தோழி கிடைத்தால் வரம்..
அன்பு தோழிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

Read more from New Tamil Quotes.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்