தனது பதின்மூன்றாவது வயதில் பெற்றோர்கள் உறவினர்களை பிரிந்து துறவு வாழ்க்கையை ஏற்றுகொண்ட “மகா பெரியவா பொன்மொழிகள்” தொகுப்பை பார்க்கலாம்.
- மகா பெரியவா பொன்மொழிகள்
- Mahaperiyava Quotes In Tamil
மகா பெரியவா பொன்மொழிகள்
1.பூமியை விட்டுச் செல்லும் முன் ‘என்னிடம் பாவமே இல்லை’ என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.
2. வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.
3. நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.
4. பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
5. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.
6. தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.
7. உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.
8. எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.
9. நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.
10. சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.
11. புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் ‘நான்’ என்னும் ஆணவம் கூடாது.
12. மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.
13. பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.
14. எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.
15. ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.
Mahaperiyava Quotes In Tamil
16. வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.
17. பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.
18. வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.
19. அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.
20. நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக் குறைவானதே.
21. கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.
22. தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.
23. ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
24. தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.
25. வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.
26. சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.