அன்பின் வழி கவிதை

anbin vazhi kavithai in tamil

#1. அன்பின் வழி கவிதை

அழகான பாதையில் அன்பும்
ஒரு வழி..
ஆழமான பாதையிலும் அன்பு
ஒரு வழி..

அன்பின் வழி சென்றால்
ஆதாயமும் உண்டு – ஒரு
சில ஆபத்தும் உண்டு..
என்பது ஆழமான உண்மை..

தாயின் அன்பிற்கு மேல்
ஓர் அன்பு இல்லை – இருப்பினும்
சில உறவுகளின் அன்பும்
நம்மை கை சேர்க்கும்..

காதலின் அன்பும்
ஆழமானதே..
சிலருக்கு அது
இறுதிவரை கிடைப்பதில்லை..

சில அன்பு நம்மை
வந்தடைகிறது..
சில அன்பு நம்
வலி ஆகின்றது..

சரிசமமான அன்பயே
உலகம் விரும்புகிறது..
அதன் ஆழமே நிலையாக
இம் மண்ணில் உள்ளது..!

#2. அன்பின் வழி கவிதை

அன்பென்ற சொல்லிற்கு
ஆயிரம் வழி இருப்பினும்
எதிபார்பற்ற ஓர் அன்பின் வழி
இருவரிடையில் மலரும் காதலே..

ஆச்சரியத்தில் ஓர் அதிசயம்
யாரென்று தெரியாமல்
அன்பை
தெரிவிப்பது ஆழமான – நம்
காதல் ஒன்றே..

பல உறவுகள் மத்தியில்
உண்மையை உணர முடியாது..
காதல் ஒன்றில் மட்டுமே
உண்மையை உணர முடியும்..

அன்பான காதல் இல்லையென்றால்
உலகத்தில் எந்த உறவும் இல்லை..
காதலின் வெளிப்பாட்டில் தான்
உயிரின் நிலைப்பாடு உண்டு..

அதிக அன்பு – சில
வலிகளை தருகிறது இருந்தும்
காதலின் அன்பின் வழி
யாவரும் அறிந்ததொன்று..

பல காதல்கள் அதிசயமே
ஓர் சில காதல் அற்புதமே
உண்மையான அன்பின் வழி காதல்
எப்பொழுதும் உயர்ந்த ஒன்றே..!!!

#3. அன்பின் வழி கவிதை

அன்பு என்ற சொல்
கவிதைகளின் தொடக்கம்
சொற்களின் ஆயுதம்
எழுத்துகளின் மெய்ப்பொருள்..

அன்பின் வழியில் – பல
பரிணாமங்கள்
அன்பின் வழியில் – பல
அவதாரங்கள்..

கணவன் மேல் மனைவி
கொண்ட அன்பு
இறைவன் மேல் இறைவி
கொண்ட அன்பு..

காதலன் மேல் காதலி
கொண்ட அன்பு – என
ஆயிரம் உறவின் வெளிப்பாடு
அன்பு என்ற சொல்..

அன்பின் உறவுகளை போல்
அன்பின் மொழிகளும்
ஆயிரம் உண்டு..
சிலர் காதல் என்பார் – சிலர்
பற்றுஇ நேசம் என்று
அன்பை வகுத்துள்ளார்..

அன்பின் வழி நின்றோர்
இவ் உலகில் அறிஞர்கள் ஆனார்..
அன்பின் வழி அறிந்தோர்
இவ்லகில் கவிஞர்கள் ஆனார்..!!

Read More:

அன்புள்ள ஆசிரியருக்கு கவிதை

மழை கவிதை பாரதியார்