நேரு பற்றிய பேச்சு போட்டி

jawaharlal nehru speech in tamil

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்கள். உலகத்தில் பல அறிஞர்கள், கலைஞர்கள், புலவர்கள், சிந்தனையாளர்கள், போராளிகள் என பல திறன்களில் தமக்கென ஓர் இடத்தை “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்பது போல சரித்திரத்தை படைத்து சென்றவர்கள் ஆயிரம்.

அந்த ஆயிரத்தில் நம் இந்திய நாட்டின் சுடர் ஒளி ஜவகர்லால் நேரு அவர்கள் பற்றி சொல்ல என் மனம் திறந்து பேச இம் மேடையில் வந்துள்ளேன்.

முதலில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தை கூறுவதில் பெருமிதம் அடைகின்றேன். அனைவருக்கும் என் காலை வணக்கங்கள்.

நேரு அவர்களின் இளமைப்பருவம்

1889ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி இந்தியா நாட்டில் உத்தர பிரதேசத்தில் பிறந்தார். நேரு அவர்கள் மோதிலால் நேரு அய்யாக்கும் சுவர் ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக பிறந்தார்.

நேரு அவர்களின் முழு பெயர் ஜவகர்லால் நேரு ஆகும். காலப்போக்கில் அது நேரு எனும் பெயரில் அதிகம் சொல்லப்பட்டது. நேரு அவர்களின் தந்தை செல்வந்தரும் ஒரு வழக்கறிஞரும் ஆவார்.

நேரு அவர்களுக்கு சிறு வயதிலேயே இந்திய கலை கலாச்சாரங்களில் ஆர்வம் அதிகமாக இருந்தது.

இருப்பினும் நேருவின் தந்தையார் வெளிநாட்டு கல்வியை வழங்குவதற்கு வெளிநாட்டில் அதாவது இங்கிலாந்து நாட்டு பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தார்.

நேரு அவர்களுக்கு பிடித்தோ பிடிக்காமலே தந்தை சொல்லை மீறாமல் வெளிநாட்டு கல்வியை முடித்து சட்டத்துறையில் தேர்ச்சி பெற்று தனது இந்தியா நாட்டுக்கு திரும்பினார்.

நேருவின் திருமண வாழ்க்கை

நேருவின் படிப்பை முடித்து வந்ததும் கமலா கவுல் எனும் காஷ்மீர் பெண்ணை மனம் முடித்து வைத்தனர். கமலா கவுலும் நேரு அவர்களை போல் சுதந்திர இயக்கத்தில் அதிகம் ஆர்வமுள்ளவர் ஆவார்.

இவர்கள் இருவரின் திருமணம் முடிந்து அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷனி என்ற பெயரில் அழகான பெண் குழந்தை பிறந்தது. கமலா கவுல் நேரு அவர்களுடன் மகிழ்ச்சியுடன் இருபது ஆண்டுகள் வாழ்ந்து புற்றுநோய் காரணமாக இவ் உலகம் விட்டு சென்றார்.

கமலா கவுல் மீது கொண்ட காதலால் வேறு திருமண நாட்டம் இன்றி தன் காலத்தை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் ஈடுபடுத்தினார்.

நேரு அவர்கள் தன் மகளை பெரோசு காந்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். பிற்காலங்களில் இந்திராபிரியதர்ஷனி எனும் பெயர் இந்திராகாந்தி என ஆனது.

நேரு அவர்களின் அரசியல் மற்று இறுதி பக்கங்கள்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு ஆவார். காந்தியடிகளின் நம்பிக்கைக்கு உரித்தானவரும் கூட. இவர் காந்தி அவர்களின் வழி நின்று சுதந்திர இந்தியாவை கட்டியெழுப்பினார்.

இவர் சுதந்திர போராட்டத்திற்கு வர காரணம் ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட “ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்”. இதில் பல பேர் மரணத்தை கண்களால் பார்த்ததார் நேரு.

குறிப்பாக குழந்தைகளை விரும்பும் இவர் அந்த சம்பவத்தில் குழந்தைகளின் மரணம் நேரு மனதில் ஆழமாக பதிந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக போராடி சிறைவாசமும் சென்றார்.

இறுதியாக சுதந்திர இந்தியா கொடியை ஏற்றும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டு காந்தி அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயரை நாட்டை விட்டு விரட்டினார்.

இந்திய சுதந்திரத்தின் பின் இடைக்கால அரச பொறுப்பு ஏற்றார் அப்போது மத கலவரங்கள் நாட்டுக்குள் நுழைந்தது. பின் இந்தியா, பாகிஸ்தான் பிரிவுக்கு இங்கிலாந்து ஆலோசனைக்கு இணங்க பகிரங்கமாக ஒப்புதல் அளித்தார்.

அன்றில் இருந்து நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தார். பல சட்டங்கள், பொருளாதார கொள்கை, வெளிநாட்டு உறவுகளை பேணினார். இவ்வாறு இன்றைய சுதந்திர இந்தியாவின் அடித்தளமாய் அமைந்தார் என்பது மிகையாகாது.

நாட்டு பணிகளை சிறப்புற செய்து 1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி மாரடைப்பால் இவ் உலகத்தில் தனக்கு ஓர் இடம் செதுக்கிய சிற்பியாய் மறைந்தார்.

இந்தியா நாட்டை ஒரு சுதந்திர நாடாகவும் ஜனநாயக நாடாகவும் மாற்றி இன்று நம் வாழ்க்கை நூல்களில் கம்பீரமாய் இருக்கும் நம் நேரு அவர்களுக்கு என் மரியாதைகள். இவர் போல் நாமும் நாட்டு பற்றுடன் எமது நாட்டை காப்போம் என கூறி எனது உரையை முடிவு செய்கின்றேன். நன்றி வணக்கம்.

Read More:

சமத்துவமே மகத்துவம் பேச்சு போட்டி