கலைஞர் பற்றிய பேச்சு போட்டி

kalaignar pechu potti in tamil

கலைகளின் ஆற்றலை அள்ளி தரும் ஆசான் அவர்களுக்கு என் முதல் வணக்கம். அத்துடன் என் போன்ற மாணவர்களுக்கும் என் இனிய வணக்கங்கள். இன்று நான் உங்கள் முன் நம் தமிழ் நாட்டின் முன்னால் முதலமைச்சர் கலைஞர் அவர்களைப்பற்றி கூற வந்துள்ளேன்.

கலைஞரின் இளமைக்கால வரலாறு

நாகப்பட்டனம் மாவட்டத்தில் திருகுவளை எனும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு யூன் மாதம் 03 ஆம் திகதி அன்று தந்தை முத்துவேல் அவர்களுக்கும் தாய் அச்சுகம் அம்மையார் அவரிற்கும் மூத்த மகனாக பிறந்தார்.

அவரது பள்ளிகாலம் சிறப்புற இருந்தாலும் இறுதி பரீட்சையில் இவர் தேர்ச்சியடையவில்லை. இருப்பினும் சோர்வடையவில்லை. கலை, நாடகம், கவிதை, சிறுகதை என எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் ஒரு அன்றைய எழுத்தாளராகவும் இருந்தவர்.

கலைஞரின் திரையுலக வாழ்க்கை

15 வயதில் திரையுலகத்தில் ஏற்பட்ட ஈர்ப்பால் பழனியப்பன் என்ற நாடகமே இவரது முதல் நாடகம் ஆனது. அதன் பிறகு ஏராளமான கதாப்பாத்திரங்கள் இவருக்கு ஓர் அங்கமாய் இருந்தது.

சில காலங்கள் சென்றதும் திரை, கதை, வசனம் என கலைஞர் அவர்களே நாடகம் இயற்றுனராயும் மாறினார். பல இயக்குனர்களையும் திரையுலக வாழ்க்கைக்குள் புகுத்தினார்.

கலைஞரின் அரசியல் வாழ்க்கை

கலைஞரின் திறன்களுக்கு மத்தியில் தேசியப்பற்றும் ஓர் அங்கம் வகிக்கிறது. இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஆவார். தழிழ் நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்துள்ளார்.

இவர் திரையுலக வாழ்க்கையில் இருந்த போது தூக்குமேடை நாடகம் நடந்த போது அந்நாட்களில் நடித்த எம். ஆர் ராதா அவர்களால் “கலைஞர்” என பெயர் சூட்டப்பட்டது. இந்த காலப்பகுதியில் கருணாநிதி என்பதை விட கலைஞர் எனும் பெயர் அதிகமாய் பரவலானது.

கலைஞரின் தமிழ் பற்று

தேசப்பற்றிலும் திரையுலக பற்றிலும் கூட இடத்தை அவர் மனதில் தமிழ் பற்று பெற்றுள்ளது. தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளும் ஏராளம். ஹிந்தி எதிர்ப்பு சட்டத்திற்காய் குரல் கொடுத்தவர். ஹிந்திக்கு நிகரான தமிழ் மொழியை நிறுவியவர்.

பாடசாலைகளில் தமிழ் மொழி கட்டாய மொழியாக கொண்டு வந்தார். பல்கலைகழகங்களில் தமிழ் மொழி கல்வியையும் தமிழ் மாணவர்களுக்கு பல்கலைகழக ஒதுக்கீடுகளையும் கொண்டு வந்தார்.

தமிழ் மாணவர்களுக்காக தொழிநுட்பகூடங்களும். வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கும் தமிழின் புகழை அறிய செய்தார்.

தமிழில் பல கவிதைகள், நாடகங்கள், சிறு கதை என பலவற்றை எழுதியுள்ளார். அத்துடன் நிற்கவில்லை இன்றும் அவர் பெயரில் தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்.

கலைஞரின் திருமண வாழ்க்கை

கலைஞர் அவர்களின் வாழ்க்கையில் மூன்று பெண்மணிகள் இன்றும் முக்கிய இடத்தில் உள்ளார்கள். அவர்களில் பத்மாவதி அம்மையார் மூத்த மனைவியாகும். பத்மாவதி அம்மையாருக்கும் கலைஞர் ஐயாக்கும் மு.க முத்து எனும் மகன் பிறந்தார்.

இரண்டாவது மனைவி தாயள் அம்மையார். அவருக்கும் கலைஞர் ஐயாக்கும் பிறந்த குழந்தைகள் மு.க அழகிரி, மு.க ஸ்டாலின், மு.க தமிழரசும் இவர் பிள்ளைகளாகும். மூன்றாவது மனைவி ராசாத்தி அம்மாள் ஆவார். அவருக்கும் கலைஞர் ஐயாக்கும் பிறந்த குழந்தை கனிமொழி ஆவார்.

கலைஞரின் இறுதி வாழ்க்கை

நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தமிழ் பற்றுக்காகவும் திரையுலக வாழ்க்கைக்காகவும் வாழ்ந்து தன் பணிகளை சிறப்புற செய்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி அன்று இறைவனிடம் சரணடைந்தார்.

கலைஞர் அவர்கள் தன் வாழ்க்கையை நாட்டுக்காக அர்பணித்து மாபெரும் தலைவராக வாழ்ந்து காட்டியவர். அவருக்கு என் வணக்கத்தை தெரிவித்து இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

எல்லோருக்கும் நன்றி வணக்கம்.

Read More:

கலைஞரும் தமிழும் கவிதை