பனை மரம் கவிதை

panai maram kavithai in tamil

நம் தமிழ் மண்ணில் சிறப்பு மிக்க மரமாக பனை மரம் காணப்படுகின்றது. பனை மரத்தின் பெரும் சிறப்பே இதன் அனைத்து பாகங்களுமே எமக்கு பயன் தரக்கூடியது ஆகும். எத்தனையோ பஞ்சங்களில் நம் முன்னோர்கள் பனை மரத்தினை நம்பியே வாழ்ந்து இருக்கின்றார்கள்.

பயன் தரும் பனை மரத்தினை காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக இந்த கவிதை வடிக்கப்படுகின்றது.

பனை மரம் கவிதை

தானா முளைத் தோங்கும் மரம்
நீரோ யாரும் வார்க்கா மரம்
தேனா இனிக்கும் நுங்கு பதநீரும்
பதமா தந்திடுமாம் சுவைக்கவே

பனங்காயும் பலவாக கிழங்கும்
பசியாறித் தென்புற தந்திடுமாம்
பாய் பெட்டி சுளகு பின்ன
பதமான குருத்தும் தரும்

வீடுகட்ட அடிமரம் சலாகை
வெலிக்களவான ஓலை மட்டை
பாடுபட்டு வளர்க்காது தானாக
பலன் தருமாம் பனை மரம்

பலமான கயிறு திரிக்க நார் தரும்
பலத்துக்கும் பயன்பட ஈர்க்குத் தரும்
பசியாற ஒடியல் புளுக்கொடியல் தரும்
பானாட்டுடன் வேய ஓலையது பசளை ஆகும்
பதம் செய்யும் கருப்பெட்டி சீனியாக மாறும்

காலமெலாம் சுவையோடு பசியாத்தும்
கையில் வருமானம் தரும்
கற்பகத் தருவாம் இதைக்
கண் போலக் காத்திடுவோம்..!!

Read More:

காடு பற்றிய கவிதை

செம்மொழியாம் தமிழ் மொழி கவிதை