இங்கு கூடியுள்ள அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு நம் சமூகத்தில் பாதுகாக்க வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளார்கள். அதன் அடிப்படையில் நான் இந்த மேடையில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி சிறு உரையாற்ற வந்துள்ளேன்.
கல்வி என்பதன் பொருள்
இறைவனால் படைக்கப்பட்ட யாவுமே அற்புதமே அதில் மனிதன் மாபெரும் அற்புதம் என்பார்கள். அந்த அடிப்படையில் மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் கல்வி அறிவு ஓர் முக்கிய இடத்தை பதித்துள்ளது. கல்வி என்பது மனிதர்களிற்கு சுயமான சிந்தனையையும் திறன்களையும் பெற்று தருகின்றது.
ஒரு மனிதனை பூரணமடைய செய்வது கல்வி அறிவும் அனுபவ அறிவும் என்பார்கள். அந்த வகையில் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று என்பது உலகறிந்த உண்மை.
கற்றவருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு கற்காதவருக்கு அவ்வாறு இல்லை என்பதை நம் வள்ளுவரும் கூறியுள்ளார்.
பெண் கல்வியின் தற்கால நிலை
ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு மிக முக்கியமானது. அவ்வாறு பெண்களும் மனிதர்களிற்குள்ளேயே வருவார்கள். பண்டைய காலங்களில் பெண் கல்வி என்பது ஒரு தேவையற்ற விடயமாகவே கருதப்பட்டது.
பெண்கள் என்ற பெயர் வீட்டு பணிகளிற்கும் வீண் கௌரவத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை. ஆனால் இன்று பெண்களுக்கு அடிப்படை கல்வியில் இருந்து பெண் பாதுகாப்பு வரை பெண்களுக்கு என சங்கங்களும் தோற்றம் பெற்றுவிட்டது.
தற்காலத்தில் பெண்களின் கல்வி அறிவு வீதமே அதிகளவு உள்ளது என உலகளாவிய ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்வி என்பது பெண்களுக்கு மிகமிக முக்கியமான ஒன்றாகும்.
பெண் என்பவள் பல அடக்குமுறைகளை தாண்டி இவ் உலகில் இத்தூரத்தை அடைந்து உள்ளாள். பல சாதனைகள் பெற்றுள்ளாள். பெண் என்ற பெயரை வீரத்திற்கு ஒப்பிட வைத்துள்ளாள்.
பெண் கல்வியின் முக்கியத்துவம்
பெண்கள் எம் நாட்டின் கண்கள் என்பார்கள். பெண் பிள்ளைகளை சாதனையாளராக மாற்ற வேண்டிய கடமையில் இன்று நாம் உள்ளோம். பெண்கள் கல்வி அறிவால் நாட்டில் பல இன்னல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டு உள்ளார்கள். சமூகத்தில் பல உதாரணங்களாகவும் எடுகோள்களாகவும் பல பாசமுள்ள உறவுகளாகவும் உள்ளார்கள் பெண்கள்.
பெண் கல்வியால் பெண்களிற்கு இன்னும் பல முக்கியத்துவம் உள்ளது. அவற்றில் பெண் சுதந்திரம் என்ற போர்வைக்குள் இருந்து பெண்களை உலகத்தின் உயிராய் மாற்ற கல்வி பெரிதும் உதவுகின்றது.
பெண்ணின் வாழ்க்கையில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் தனக்கென முடிவுகளை சரியாக தெரிவு செய்யவதற்கும் பெண் கல்வி பெரிதும் முக்கியமாகின்றது. இன்னும் பல அப்பாற்பட்ட சிந்தனைகளில் இருந்து தன்னை காத்து கொள்ள பெண் கல்வி பெண்ணிற்கு அவசியம் ஆகின்றது.
எனவே நான் கூற வந்தது பெண் என்பவள் நாளைய எதிர்காலத்தை உருவாக்குபவள். பெண்களே உங்கள் கைகளிலே கல்வி எனும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது தான் உங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று கூறி விடை பெறுகின்றேன். நன்றி வணக்கம்.!
Read More: