நம் வாழ்க்கையில் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது. நாம் இழந்ததிற்கு மேலாக திரும்ப பெற்றுக் கொள்ளும் ஆற்றல் தன்னம்பிக்கைக்கு உண்டு. ஊக்கம் ஊட்டும் வரிகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
இந்த பதிவில் ஊக்கம் ஊட்டும் வரிகள் சிலவற்றை பார்க்கலாம். இது நமக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் கொடுக்க கூடியவை.
ஊக்கம் ஊட்டும் வரிகள்
வழிகள் இன்றி கூட வாழ்கை அமைந்து விடலாம் ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது.
நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும்.
அடுத்தவர்கள் கதைப்பதற்கு ஏற்ப நீ வாழ நினைத்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசுவார்கள் அப்படி வாழ இந்த ஆயுள் போதாது.
செய்த தவறை ஏற்றுக் கொள்ளுபவர்களை விட அதில் இருந்து தப்பிக்க காரணம் தேடுபவர்களே அதிகம்… அந்த தவறை நீயும் செய்து விடாதே…!
வாழ்க்கைக்கு இரண்டு பக்கம் உண்டு ஒரு பக்கம் இன்பம் மறு பக்கம் துன்பம் இரண்டு பக்கத்தில் ஒரு பக்கமாவது இருக்க வேண்டும்..!
முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது. புதைத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிப்பான்.
சிக்கல்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பவை அந்த சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல. அவை தான் உன்னை செதுக்குபவை..!
யாரும் உன்னை தூக்கி வீசினால் அவர்கள் முன்னாள் உயரமாக வளர்ந்து நில்லு… அடுத்த தடவை அவர்கள் உன்னை பார்க்கும் போது அன்னாந்து பார்க்கும் அளவிற்கு…!
நீ ஒரு செயலை செய்ய விருப்பினால் செய்ய தொடங்கும் போது பேசுவதை நிறுத்தி விடு அடுத்த தடவை நீ பேசும் போது அந்த செயல் செய்து முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
உண்மையான உங்கள் வளர்ச்சியின் தொடக்கம் உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளும் போதுதொடங்குகின்றது..!
உனக்கென்று படைக்க பட்ட எதுவும் உன்னை விட்டு வேறு யாருக்கும் போகாது நீ தான் அதை முயன்று போராடி வெல்ல வேண்டும்.
உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள் அது பிழையாக இருந்தாலும் பரவாயில்லை அடுத்த முறை சரியாக சிந்திக்க முடியும்..!