சிறந்த தமிழ் பொன்மொழிகள்

Sirantha Tamil Ponmoligal

இந்த பதிவில் வாழ்க்கைக்கு தேவையான “சிறந்த தமிழ் பொன்மொழிகள்” தொகுப்பை காணலாம்.

  • சிறந்த தமிழ் பொன்மொழிகள்
  • தமிழ் பொன்மொழிகள்
  • Sirantha Tamil Ponmoligal

சிறந்த தமிழ் பொன்மொழிகள்

1.வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது.

2. மிக சிறிய விடயங்களைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.

3. உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.

4. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர்.

5. எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள் பிடிக்கும். நான் அதை தான் எப்பொழுதும் செய்கிறேன்.

6. தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.

7. நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரன மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.

8. வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டால், குறைந்தபட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள்

9. கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!

10. பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!!

11. கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு.

12. கனவுகள், பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை.

13. அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும். தவறுகள் அதற்குரிய செலவுகள்.

14. தன் பிள்ளைகளுக்கு, பிறர் மீது அன்பு செலுத்த கற்றுக் கொடுப்பதன் ஊடாக தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.

15. மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.

16. கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. கனவு எண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாத வரை.

17. ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.

18. ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது.

19. மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு.

Sirantha Tamil Ponmoligal

20. கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.

21. சின்ன விசயங்களை கண், காது, மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.

22. புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு

23. எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.

24. தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதுமே முட்டாள்தனத்தின் விசேஷ குணம்.

25. ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை

26. இன்ப வாழ்வுக்கு வழி அமைதி.

27. எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள், நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.

28. வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.

29. கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது.

30. அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது. கோழைகளை திணறடிக்கிறது.

31. சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான்.

32. நகரங்களை உருவாக்க வருடங்கள் ஆகும். அழிப்பதற்கு மணித்துளிகளே போதும்.

33. வாழ்க்கை ஒரு சங்கீதம்.  அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.

Read more from New Tamil Quotes.

இன்றைய சிந்தனை துளிகள்

நட்பு பற்றிய பொன்மொழிகள்