தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள்

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள் நமக்கு சோர்வான சந்தர்ப்பங்களில் நம்மக்கு உற்சாகம் தரும். இவை நம் மனதிற்கு ஆறுதலாகவும் இருக்கும்.

நாம் தோல்விகளை எதிர் நோக்கும் போது சோர்ந்து விடமால் அடுத்த முயற்சியை எடுக்க வேண்டும். அதற்கு இந்த கவிதைகள் ஒரு சிறு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள்

வெற்றியை கனவு காண்பதற்கு பலராலும் முடிகின்றது. ஆனால் ஒரு சிலர் தான் வெற்றிக்காக உழைக்கிறார்கள்.

அறிவு ஒன்று தான் நம்மிடம் இருக்கும் பயத்தை அகற்றும் அரிய மருந்து. அறிவை நாம் வளர்த்துக் கொண்டால் எல்லா வித பயங்களும் ஒழிந்து விடும்.

இழந்தது பெரிதாக இருந்தாலும் இழந்ததை விட பெரியதாய் அடைந்தே தீருவேன் என்ற மன உறுதியே தன்னம்பிக்கையின் உச்சம்.

செய்ய முடியாது என்று எண்ணி நீங்கள் தவிர்க்கும் விஷயங்களை யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டு தான் இருக்கிறார்.

வாழ்க்கையில் பின்னோக்கி தள்ளப்படும் போது மனம் உடைந்து விடாதே. பின்னோக்கி தள்ளப்படும் அம்பு தான் வேகத்துடன் நீண்ட தூரம் செல்கின்றது.

நீ செல்லும் பாதையில் தடைகள் வந்தால் கட்டாயம் தகர்த்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த தடையை தவிர்த்து விட்டும் செல்லலாம்.

உன் உடலை வருத்தும் உழைப்பு உன் உடலை பலமாக்கும். அதே போல தான் உன் மனதை வருத்தும் வலிகள் உன் மனதை பலமாக்கும்.

நிதானம் எனும் அதிசயமான யுத்தியை பயன்படுத்துபவர்கள் எந்த விடயத்தையும் சாதிப்பார்கள்.

இந்த சோகங்கள் துக்கங்கள் எல்லாம் நம் வாழ்வில் நிச்சயம் ஒரு நாள் மாறியே தீரும். ஆனால் ஒரே நாளில் மாறி விடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அனைத்திற்கும் வெறும் காரணங்கள் மட்டும் சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்வில் எதுவும் நடக்க போவதில்லை. நம் வாழ்வை நாம் தான் தேடிக் கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கை எனும் ஆயுதம் நம்மிடம் இருந்தால் ஏமாற்றம் கூட ஏமாந்து விடும்.

காதல் கவிதை வரிகள்