செந்தமிழாம் தமிழ் மொழி அந்த தமிழுக்கு என் முதல் வணக்கத்துடன் இங்கு கூடியிருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் என் வணக்கங்கள். இன்று இம் மேடை என்னை இங்கு அழைப்பதற்கான காரணம் நம் நாட்டின் சுதந்திரத்திற்கு வழிகாட்டிய ஒரு போராட்டவாதி, சிந்தனையாளருமான அறிஞர் அண்ணா பற்றி பேச வந்துள்ளேன்.
அண்ணா அவர்களின் இளமைக்காலம்
1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி பிறந்தார். அண்ணா அவர்கள் இந்தியா நாட்டில் காஞ்சிபுரத்தில் தந்தை நடராஜன் அய்யாவுக்கும் தாய் பங்காரு அம்மாள் அவர்களுக்கும் புத்திரனாக அவதரித்தார். இவர்கள் ஒரு நெசவு குடும்பத்தை சார்ந்தவர்கள்.
சிறு வயதிலேயே கலை, கலாசாரங்களுடன் இலக்கியங்களிலும் ஆர்வமுடையவர். இவர் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு மேதை என்று கூட சொன்னால் மிகையாகாது. இவரின் நேரங்களை நூல்களிலும் நூலகங்களிலும் அதிகமாய் செலவழிப்பாராம். அண்ணா அவர்களின் பள்ளிக்காலம் மிக எளிமையான வாழ்க்கை தான் இருந்தும் அவர் அதில் சிறப்பாக தேர்ச்சி பெற்று முடித்தார்.
அண்ணா அவர்களின் திரையுலக மற்றும் தமிழ் பற்றும்
அண்ணா அவர்களின் சிறு வயதில் கொண்ட தமிழ் பற்று அவரை ஒரு எழுத்தாளராக மாற்றியது. பல கதைகள், நாவல்கள், கவிதை என பல நூல்களை எழுதியுள்ளார். இது காலப்போக்கில் திரையுலக வாழ்க்கையிலும் அடி எடுத்து வைக்க தூண்டியது.
அதன் பின் பல திரைக்கதைகளுக்கு வசனம் உருவாக்கினார். அண்ணா அவர்கள் எழுதிய திரைகதை வசனங்களில் “வேலைக்காரி” என்ற திரைப்படம் பல வெற்றிகளை பெற்றது. இவர் சிறந்த பேச்சாளரும் ஆவார்.
அண்ணாவின் திருமணம் மற்றும் அரசியல் வாழ்க்கை
அண்ணா அவர்கள் 1930ஆம் ஆண்டு இராணி அம்மையாரை சட்டப்பூர்வ மனைவியாக்கினார். அண்ணா அவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அண்ணா அவர்களின் மூத்த சகோதரி பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தனர்.
அண்ணா அவர்களின் அரசியல் வழி பெரியாரின் வழியாக இருந்தது. இருப்பினும் அரசியலில் ஆர்வம் காட்ட காரணம் அவரின் பள்ளியின் ஆங்கில பேராசிரியர் வரதராஜன் அவர்களினால் ஆகும்.
அவரின் கற்பித்தலில் அரசியலில் ஆர்வத்தையும் தூண்ட வைத்தது. அதன் பின்னரே பெரியாரின் ஆழமான கொள்கைகளில் நாட்டம் கொண்டு அரசியலுக்குள் சென்றார்.
அண்ணா மற்றும் பெரியாருக்கு இடையில் ஒரு தந்தை மகன் உறவு இருப்பதை அண்ணா அவர்களே மேடையில் கூறியுள்ளார். பெரியாரின் விருப்பத்திற்கு உரித்தான அண்ணாவை அவரது திராவிட கட்சி தலைவராகவும் மாற்றியுள்ளார் பெரியார்.
பெரியாருடன் சேர்ந்து ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் இவரும் போராடினார். இதனால் அண்ணா அவர்கள் சிறைவாசம் சென்றார்.
இந்திய நாட்டுக்கான மக்களின் மனித உரிமைகளுக்காக போராடியவர். பெரியாருடன் அண்ணா உறவு நீடிக்கவில்லை. எதையும் முகத்தை பார்த்து கூறும் பெரியார் கறுப்பு சட்டை அணிந்துதான் கட்சி கூட்டங்களுக்கு வர சொன்னார் பெரியார். இதனை அண்ணா மறுத்த காரணத்தால் இருவரிடையும் பிரிவு ஏற்பட்டது. அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலாவது முதலமைச்சரும் ஆவார்.
அதன் பிறகு அண்ணா அவர்களின் அரசியல் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி 1969ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி அண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார். இன்றும் இவரின் பெயர் பேசும் அளவில் நம் நாட்டில் வாழ்ந்து காட்டியவர். அவரின் சிறப்புக்கும் நாட்டின் பணிக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கங்கள் என கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
Read More: