கெத்து – Gethu Quotes In Tamil

கெத்து கவிதை வரிகள்

Here are the Latest Collection கெத்து – Gethu Quotes In Tamil

வாழ்க்கையில் தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் கெத்தான மேற்கோள்கள் இதில் தொகுப்பை காணலாம்.

  • கெத்து – Gethu Quotes In Tamil
  • கெத்து கவிதை வரிகள்
வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்

Gethu Quotes In Tamil

உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்.. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல.!
பணிந்தவன் எல்லாம் பயந்தவன் அல்ல.
என்னைப் பற்றி விமர்ச்சிப்பதற்கு முன்.. நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது உங்களால் பயணிக்க முடியுமா என்று மட்டும் எண்ணிப் பாருங்கள்.
நீ நீயாக இரு பிடித்தவர்கள் நேசிக்கட்டும்.. பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்.
வாழ்க்கையில் உங்களுக்கு குறைவான காலமே உள்ளது. இதில் நீங்கள் மற்றவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
வாழ்க்கை என்பது நாடக மேடை அதில் ஆளுக்கொரு வேடம் சிலர் நல்லவர்களாக பலர் நல்லவர்களை போல.
தனியாக துணிவாக தெளிவாக செயல்படுங்கள் அனைத்துமே நம்வசம் தான்.
பிறப்பது ஒரு முறை.. இறக்கும் வரை யாருக்கும் அஞ்சாதிரு..!
நீங்கள் தாழ்ந்தவன் என்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதவரை பிறர் சொல்லும் எந்த வார்த்தைகளும் உங்களை ஒருபோதும் தாழ்த்தாது.!
பிறர் என்ன நினைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால்.. உங்கள் வாழ்க்கையை அவர்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
திமிரும் பிடிவாதமும் நேர்மை என்ற நதியின் இரு கரைகளே.
நேற்று என்பது நம்மை கடந்து போனது.. நாளை என்பது நம்மை நோக்கி வருவது.. இன்று மட்டுமே உண்மை உண்மையாக வாழ்தலே நன்மை.!
உன் கஷ்டத்தின் போது உன்னை கை விட்டவர்களுக்கு நன்றி சொல்.. அவர்கள் கை விட்டதால் தான் உன்னையே நீ அடையாளம் கண்டு கொண்டாய்.
சின்ன சின்ன பிரச்சனையையும் பெரிதாக பேசுபவர்களும் உண்டு.. பெரிய பெரிய பிரச்சனையையும் மிக இயல்பாக கடந்து செல்பவர்களும் உண்டு.
இயல்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.. முகச்சாயம் வெளுத்து விட்டால் நல்லது கூட கெட்டதாகவே தெரியும்.
தவறை உணர்ந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.. யாருக்காகவும் பூசி மறைக்காதீர்கள்.. தவறை மறைக்கும் போதுதான் ஆங்கே தோல்வி ஆரம்பமாகிறது.!
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ உயர்ந்து விடப்போவதில்லை.. உன்னை இகழ்வதாலும் நீ தாழ்ந்து விடப்போவதில்லை.. எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்.!
உன் உணர்வுகளை மதிக்காத இடத்தில்.. உரிமைக்கு மட்டும் இடமளிக்காதே.!
நமக்கு தான் எல்லாம் தெரியும்.. மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்.. நமக்கு அனைத்தையும் கற்றுத் தருபவர்களே மற்றவர்கள் தான்.
அவரைப்போல் இவரைப்போல் இல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு.
எப்போதும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்றால் தனியாக சண்டை போட கற்றுக்கொள்.
நன்றாக அழுத பிறகு கிடைக்கும் மனத் தெளிவு ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தால் கூட கிடைக்காத மிகப் பெரிய பாடம் தான்.
நீ பட்ட துன்பத்தை விட.. அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
பலருடன் சேர்ந்து சிரி.. ஆனால் ஒருவரையும் நம்பாதே.!
குத்தி கிழிக்கிற முள்ளா இருந்தாலும் சரி.. குத்திக்காட்டுற மனிதர்களாக இருந்தாலும் சரி.. தூக்கி ஓரமா போட்டு விடுங்க.. இல்லையென்றால் மறுபடியும் நம்மள தான் காயப்படுத்தும்.!
You May Also Like :

தமிழ் ஒரு வரி தத்துவங்கள்

Good Morning Quotes In Tamil