அறிவே ஆற்றல் பேச்சு போட்டி

arrive aatral speech in tamil

தித்திக்கும் தமிழ் தேனில் இனிய தமிழ் என்றும் நம் செந்தமிழுக்கு என் முதல் வணக்கம். அத்துடன் இங்கு வந்து இருக்கும் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். இன்று உங்கள் முன் அறிவே ஆற்றல் என்பதை பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.

“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்” என்கிறார் வள்ளுவர்.

நம் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை அறிவு உடன் வருகின்றது. நம் அறிவை பகைவராலும் அழிக்க முடியாத ஒன்றாகும். எனவே மனிதனுக்கு அறிவு தான் மிகப்பெரிய ஆற்றல் ஆகும் என்பது மிகபெரிய உண்மை.

அறிவு என்பதன் பொருள்

ஒரு மனிதனின் செயற்பாடுகளை செயற்படுத்துவதும் உலகத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனைக்கு மனிதர்களை கொண்டு செல்வதும் அறிவு ஆகும். அறிவிற்கு உருவம் கிடையாது. ஓர் மனிதனுக்கு கல்வி அறிவும், அனுபவ அறிவும் தான் வாழ்கையை வாழவும் மனித வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்கின்றது.

அறிவு இல்லாதவன் தன் வாழ்க்கையை துன்பத்தில் வாழ்வான். அத்தகைய அறிவை வைத்து தான் நம் வாழ்க்கை பாதைகளும் மாறுகின்றது.

அறிவே ஆற்றல் பற்றி வள்ளுவரின் கருத்துக்கள் சில

மூவாயிரம் ஆண்டு பழமையான நூல் திருக்குறள். அதனை எழுதியவர் திருவள்ளுவர் அவர் அறிவே ஆற்றல் என பல எடுகோள்களை வகுத்துள்ளார். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்கிறார். இதன் பொருள் எப்பொருளை யாரிடம் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளை காண்பதே அறிவு தான் என்பதாகும்.

“அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்” என்கிறார். இதன் பொருள் ஏதும் இல்லாதவனுக்கு அறிவு இருந்தால் அவனிடம் எல்லாம் இருப்பதற்கு சமன். ஆனால் அறிவு இல்லாதவனுக்கு எது இருந்தாலும் அது எந்த பயனும் இல்லை.

இவ்வாறு பல எடுகோள் உள்ளது. வள்ளுவர் மட்டும் அல்ல பல கவிஞர்களும் புலவர்களும் அறிவை பற்றி பல கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

அறிவே ஆற்றல் என்பதன் விளக்கம்

ஒரு மனிதனிடத்தில் உள்ள நல்லறிவும் பண்பும் தான் அவனின் ஆற்றலாகும். எனவே அறிவு உள்ள இடத்தில் தான் ஆற்றலும் வெளிப்படும் என்பது உண்மை.

இவ் உலகில் வாழும் அனைவரும் சமனானவர்கள். ஆனால் ஒரு விதத்தில் தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ளோம். இதற்கு காரணம் அறிவு ஒன்று தான். நம் ஆற்றலை இதன் மூலம் அறிவு தான் தீர்மானிக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

அறிவு உள்ளவன் அழிந்தாலும் அவனின் அறிவு அழிவதில்லை என்பார்கள். காரணம் அவனின் அறிவு ஏதே ஒரு வகையில் புத்தகமாக, எழுத்துகளாக, பேசும் பேச்சாக இன்னொருத்தனுக்கு கடத்தப்படும். அதனால் தான் அறிவு காலத்தால் அழியாது என்று கூறுகிறார்கள்.

எனவே அறிவே ஆற்றல் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. அந்த அறிவை கற்பதன் மூலமே அனுபவத்தின் மூலமும் பெற்று வாழ்க்கையை சிறப்புற வாழ்வோம்.

கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது போல நாமும் நம் அறிவை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் அதன் மூலம் சிறப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். இந்த வாய்ப்பை எமக்கு தந்த எல்லோருக்கும் என் நன்றிகள்.

Read More:

பெரியார் அண்ணா வழியில் கலைஞர் பேச்சு போட்டி