உலகின் மூத்த மொழியான தமிழ்மொழி உருவான இடமாக பாரதம் காணப்படுகின்றது. பழமையான பல வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க நாடாக பாரதம் விளங்குகின்றது.
பாரத நாடு பழம்பெரும் நாடு கவிதை-1
பல் வளங்கள் நிறைந்த பாரத நாடு
நம் பழம் தமிழ் நாடு..
பாட்டும் பரதமும் இவ் உலகிற்கே
சொல்லித்தந்த நாடு..
பல் கலைகளும் பல் மொழிகளும்
கொண்ட நாடு..
பனிமலையும் பல பெருங்கடலும்
உள்ள நாடு..
பல அறிஞர்களையும் பல கலைஞர்களையும்
உருவாக்கிய நாடு..
உலகம் முதல் விண்வெளி வரை
கொடி கட்டி பறக்கும் நாடு..
சிற்பக்கலைகளின் தத்துவத்தை அற்புதமாய்
சேமித்து வைத்துள்ள நாடு..
மூவேந்தர் ஆண்ட அழகிய செல்வம்
கொஞ்சும் நாடு..
சோழர்களின் பொற்காலம் என
தமிழை பறைசாற்றிய நாடு..
எட்டு திக்கும் தமிழின் வளர்ச்சியை
திகைக்க வைத்த நாடு..
பழம் தமிழுக்கு ஓர் எடுகோளை
நிலைநாட்டி உள்ள நாடு..
சிந்துவெளி நாகரிக தோற்றத்திற்கு முன்பே உருவான
மாபெரும் பழம்பெரும் நாடு நம் பாரத நாடு..!
பாரத நாடு பழம்பெரும் நாடு கவிதை-2
அன்பிற்கு உரித்தான – எம்
பாரத நாடு!
கலைகளின் அற்புதமே – எம்
பாரத நாடு..
உலகின் மூத்த குடி – எம்
தமிழ் என்று,
உலகிற்கு உரத்து சொல்லும்
நம் பாரத நாடு..
சேர, சோழ, பாண்டிய ஆளுமை
வீரம், கலை, கலாசாரம் என
பாரத நாட்டின் – எம்
பழம் தமிழை பறைசாற்றியுள்ளது..
தமிழுக்கு இன்றும் ஒரு
அடையாளத்தை – எம்
பாரத நாடு நிலைபதித்து
பழம் தமிழை பறைசாற்றியுள்ளது..
பார் போற்றும் பாரதம் என
நம் நாட்டை வியந்து பார்த்தேன்
இரடி வெண்பா, நாலடி வெண்பா என
பல நம் பழம் தமிழுக்கு எடுத்துகாட்டு..
தமிழிலே நதிகளின் பெயரும் உண்டு..
தமிழிலே பல சரித்திரம் உண்டு..
தமிழிலே பல சாதனை உண்டு..
இதற்கு மேல் ஏதுன்னு – நம்
பாரத நாடு பழந்தமிழ் பெரும் நாடு..!
பாரத நாடு பழம்பெரும் நாடு கவிதை-3
தமிழ் தாயாம் நம் பாரதம்
பரத நாட்டியத்தின் பிறப்பிடமாம்
பாரம்பரிய போர் யுத்தியின் தாயகம்
நம் பழம் தமிழ் நாடு பாரதம்..
தமிழரின் பெருமைக்கு தஞ்சையும்,
தமிழின் பெருமைக்கு சிதம்பரமாம்..
எம் நாட்டின் பெருமைக்கு – இன்னும்
எத்தனை எத்தனை ஆதாரமாம்..
திருவள்ளுவர் முதல் ஔவைபாட்டி வரை
தமிழை வளர்த்தவர் எம் நாட்டில்
தமிழுக்கு ஓர் இடமாய் – நம்
தமிழ்நாடு உள்ளதே..
மூவேந்தர் ஆகிய தமிழ் மன்னர்கள்
ஆண்ட பழம் தமிழ் நாடு பாரதம்
எட்டுத்திக்கும் தமிழை தலைநிமிர்த்தி
அற்புத நாடு நம் பாரத பெரும் நாடு..
தமிழை பறைசாற்ற ஆயிரம்
சான்றுகள் நம் பாரத நாட்டில்..
அற்புதமான படைப்பு – நம்
அழகிய தமிழ் பாரத நாடு..
ஈருலகில் நம் தமிழ் உண்டு
கவிஞர்கள் சொல்லியது உண்டு..
அதன் தாயகம் நம் பாரதமென்று
நாம் உணர்வோம் என்றும்..!
Read More: