Latest collection of “Inspirational Quotes For Youngsters Tamil”.
- மோட்டிவேஷன்
- குரோட்டஸ்
Inspirational Quotes For Youngsters Tamil
மோட்டிவேஷன் (Motivation)
1.புத்திசாலித்தனமாக யோசிப்பதும்
சொதப்பலாக செய்து முடிப்பதும்
மனிதனின் பிறவி குணம்.!
2. நீங்கள் பேசுவதன் மூலம் பேசவும்..
படிப்பதன் மூலம் படிக்கவும்..
ஓடுவதன் மூலம் ஓடவும்
கற்றுக்கொள்கிறீர்கள்..
அதே போல் அன்பு செய்வதன் மூலம்
அன்பு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.!
3. சிறந்த சாதனைகளை செய்ய
நாம் உழைத்தால் மட்டும் போதாது..
கனவு காண வேண்டும்..
திட்டமிட்டால் மட்டும் போதாது
நம்பிக்கையும் வேண்டும்.!
4. நிறைய விடயங்களை தவறாக
விளங்கிக் கொள்வதை விட..
குறைந்த விடயங்களை சரியாக
விளங்கிக்கொள்வதே சிறந்தது.!
5. பொய் என்பது இல்லாவிட்டால்..
உலக வாழ்க்கையானது மனிதனுக்கு
ஏக்கமும் சலிப்பும் கொண்டதாகி விடும்.!
6. மனிதர்கள் அவர்களின் செயல்பாடுகளால்
மட்டுமே வாழ்கிறார்கள்..
தத்துவங்களால் இல்லை.!
7. உனக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும்
நேரம் இல்லை என்றால்
நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு
இருக்கிறாய் என்று அர்த்தம்.!
8. இனிமைகள் கண்ணை கவரும்..
திறமையோ ஆன்மாவை ஈர்க்கும்.!
9. கர்வம் அதுதான் முட்டாள்களை விட்டு
ஒருபோதும் நீங்காத துர்க்குணம்.!
10. எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்..
அதனால் எதிர்பார்ப்பு இல்லாதவனே
பாக்கியசாலி.!
11. தகுதியில்லாத புகழுரை மாறுவேஷம்
பூண்ட பழியாகும்.!
12. பணக்காரத்தன்மை ஆடம்பரத்தன்மை
முக்கியமானதல்ல..
மாறாக அதை பயன்படுத்தும் விதமே
முக்கியமானது.!
13. வெற்றிக்கு செல்லும் வழியானது
நாம் நம்மை வெற்றிகரமாக
அந்த வழிக்கு தயாரிக்கும் போது
எளிதாக தென்படுகிறது.!
14. எவ்வளவு செலவாகின்றது என்பதை
கூர்ந்து கவனியுங்கள்..
இலாபம் தன் பங்கை தானே
கவனித்து கொள்ளும்.!
15. தங்களை தாங்களே ஊக்கப்படுத்தி
கொள்ள தெரியாதவர்கள்..
எவ்வளவு திறமைகள் இருந்தாலும்
வெற்றி பெற முடியாது.!
16. நாம் செய்கின்ற பணியில் மட்டுமே
நிறைவு கொள்ள முடியாது..
பணிகளுக்கு அப்பாற்பட்டும்
உழைக்க வேண்டும்..
ஓட்ட பந்தயத்தில் கொஞ்சம்
அதிக தூரம் ஓடிய குதிரைதான்
வெற்றி பெறுகிறது.!
17. சந்தோசமாக மகிழ்ச்சியாக
செயல்படுபவர்கள் தான் அதிகம்
சாதிக்கிறார்கள்..
சிரிப்பே இல்லாத மனிதர்கள்
சாதித்தார்கள் என்றால்
அது மிகவும் அபூர்வமானது தான்.!
18. நியாயமான வழியில் செயல்படும்
யாரையும்.. யாராலும்
நிச்சயமாக ஏமாற்ற முடியாது..
அவராக தன்னை ஏமாற்றினால் தான்
அது முடியும்.!
19. எதிலும் திருப்தி உள்ளவனை
யாராலும் வெல்ல முடியாது.!
20. உங்களுக்கு என்ன நடக்கிறது
என்பது அனுபவமல்ல..
நடக்கும் விஷயங்களுக்கான
உங்களுடைய செயல்பாடு
என்ன என்பதே அனுபவம்.!
லைப் குரோட்டஸ் (Life Quotes)
21. நடைமுறைக்கு ஏற்ற வழியில்
கனவு காணுங்கள்.!
22. தரையில் நின்று கொண்டிருந்தால்
நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது..
தண்ணீரில் இறங்கினால் தான்
கற்றுக்கொள்ள முடியும்..
வாழ்க்கையில் இறங்கினால் தான்
வாழ்வு என்னவென்று புரியும்.!
23. குற்றத்தை விட தண்டனை இன்னும்
வெறுக்கத்தக்கதாக இருக்கிறது.!
24. சமூகம் தான் என்ன சொல்கிறதோ
அதை சமூகமே நம்புவதில்லை.!
25. விலை குறைந்தது என்ற
ஒரே காரணத்திற்காக
வேண்டாத பொருட்களை வாங்காதே.!
26. நாளைக்கு செய்யலாம் என்று
ஒரு வேலையை தள்ளிப் போடுவதில்
தவறு இல்லை..
அது நாளை மறுநாள்
செய்ய வேண்டிய வேலையாய்
இருக்குமானால்.!
27. நமது செயல்களில் நாம் செய்யும்
தவறுகளுக்கு
நாம் கொடுத்துள்ள பெயரே
அனுபவம் என்பதாகும்.!
28. மனிதனிடத்தில் அளப்பெரிய சக்திகள்
மறைந்து இருக்கின்றன.
அதில் பத்தில் ஒரு பகுதியை கூட
எந்த மனிதனும் பயன்படுத்துவதில்லை.!
29. வாழ்க்கை என்பது சிக்கல்
நிறைந்தது இல்லை..
நாம் தான் சிக்கல் மிக்கதாக
மாற்றி வருகிறோம்.!
30. மனச்சாட்சி இல்லாத தைரியம் என்பது
ஒரு காட்டு விலங்கினை போன்றது.!
31. பிறரை குறைத்து மதிப்பிட வேண்டாம்..
அது உங்கள் உள்ளத்தின் மதிப்பை
குறைக்கும்.!
32. நாய் குரைக்கும் போதெல்லாம்
நடப்பதை நிறுத்தினால்
வீடு போய் சேர முடியாது.!
33. விடியற் காலையில் எழுந்து
செயல்படுபவனுக்கு வாழ்க்கை
சூரியனை போல் என்றும்
பிரகாசமாக இருக்கும்.!
34. அறியாமையை காட்டிலும்
இழிவான அடிமைத்தனம்
வேறு கிடையாது.!
35. துருப்பிடித்த இரும்பும்
சோம்பல் ஏறிய உடம்பும்
உதவாது.!
36. தேகத்தை உழைப்பு தீயில் வை..
உனது எதிர்காலம் தங்கமாய்
மின்னும்.!
37. வாழ் நாள் முழுவதும் செம்மறி ஆடாக
இருப்பதை விட..
ஒரே ஒரு நாள் மட்டும்
சிங்கமாக இருப்பது சிறந்தது.!
38. அனைத்து புனிதமான செயல்களிலும்
கடவுள் உறைந்திருக்கிறார்.!
39. உன் நல்ல செயல்களின் மூலம்
பிறருக்கு வழிகாட்டியாக இரு.!
40. இந்த பூமியில் தைரியத்திற்கான
மிகப்பெரிய சோதனை என்பது
இதயத்தை இழக்காமல்
தோல்வியினை தாங்கிக் கொள்வதே.!
மோட்டிவேஷன் குரோட்டஸ் (Motivation Quotes)
41. உங்களுக்காக நீங்கள் கோரும்
உரிமைகளை நீங்களும்
ஒவ்வொரு மனிதருக்கும்
கொடுத்திடுங்கள்.!
42. மனிதனின் உண்மையான
உழைப்பே
ஒரு நேர்மையான கடவுள்.!
43. நீங்கள் எதிலும் முதலில்
வரவேண்டுமா.?
முதலில் விழித்தெழுங்கள்.!
44. அறியாமை தான்
துயரத்தின் தாய்.!
45. வீழ்ச்சியில் கலக்கமோ..
எழுச்சியில் மயக்கமோ
கொள்ளாதே.!
46. படித்து அறிபவனை விட..
அனுபவித்து உணர்பவன்
அறிஞன்.!
47. கவலையை கடன் வாங்குவது
உன் இயல்பாக இருக்கலாம்..
ஆனால் அதை அடுத்தவனுக்கு
கடன் கொடுக்காதே.!
48. காயங்கள் மன்னிக்கப்பட்டு
விடலாம்..
ஆனால் மறக்கப்படுவதில்லை.!
49. தீயவற்றின் விதையை
அழித்துவிடுங்கள்..
இல்லையென்றால் அது உங்களின்
அழிவு வரை வளர்ந்து விடும்.!
50. ஒன்றுபட்டோம் எழுந்து நின்றோம்..
பிளவுபட்டோம் வீழ்ந்து விட்டோம்.!
51. எவன் நம்முடன் போராடுகிறானோ
அவன் நம்முடைய திறமையை
கூர்மைப்படுத்துகிறான்.!
52. தீமையின் வெற்றிக்கு
ஒன்றே ஒன்று தான் காரணம்..
நல்லவர்கள் சும்மா இருப்பது.!
53. நல்லவர்கள் எதுவும் செய்யாமல்
இருப்பது தான்
தீமையை செழிக்க வைக்கும்.!
54. நம்பிக்கை தான்
வெற்றியின் ரகசியம்.!
55. நீங்கள் என்னவாக வேண்டுமோ
அதை உங்களுக்குள்ளே
சொல்லிக் கொள்ளுங்கள்..
பின்பு நீங்கள்
என்ன செய்ய வேண்டுமோ
அதை செய்யுங்கள்.!
56. நாம் விரும்பியபடி வாழும்
உரிமையை விட
வேறு பெரிய சுதந்திரம்
இந்த உலகில் இல்லை.!
57. மற்றொருவரின் தவறினால்
எப்பொழுது நீங்கள்
எரிச்சல் அடைகிறீர்களோ..
அப்பொழுது உங்கள் தவறுகளை
ஆராய்ந்து பாருங்கள்..
பிறகு உங்களது கோபத்தை
நீங்கள் மறந்து விடுவீர்கள்.!