பெரியார் அண்ணா வழியில் கலைஞர் பேச்சு போட்டி

periyar anna valiyil kalaignar speech in tamil

“தமிழுக்கு ஓர் குரல் என்றும் தமிழே என் குரல்” என்ற வாக்குக்கு இணங்க எனது காலை வணக்கத்துடன் இந்த உரையை தொடருகின்றேன்.

நம் தமிழ் நாட்டின் நலனை வளர்த்த அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் இவர்கள் வழியில் தனது பணியை சிறப்புற செய்த தமிழக நாட்டின் முதல்வராக இருந்தவருமான நம் கலைஞர் அவர்கள் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

இளமைகால பயணங்கள்

அச்சுகம் அம்மையாருக்கும் முத்துவேல் அய்யாவுக்கும் மூத்த மகனாக பிறந்தவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்களை இளமைக் காலங்களில் கருணாநிதி என்ற பெயரிலேயே அவரின் தாய் தந்தையரால் அழைக்கப்பட்டார்.

கருணாநிதி அய்யா சிறு வயதிலேயே தமிழில் கவிதை, கதை, நாடகம் என எழுதுவதில் ஆர்வம் உள்ளாராய் இருந்தவர். அவர் தானே நாடகங்கள் எழுதி அதில் பல சுவாரசியமான காதப்பாத்திரங்களை கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். இன்றைய தமிழ் திரையுலக வாழ்க்கைக்கு இவரும் ஒரு அஸ்திவாரம் என்பது உலகறிந்த உண்மை.

பாதியில் படிப்பை முடித்து இருந்தாலும் அனுபவத்தை அதிகம் தனக்குள் வைத்திருப்பவர்.

இவருக்கு எழுதும் பழக்கம் அதிகமாகவே எப்பொழுதும் இருக்கும். பதினாறு வயதில் திரையுலகம் இவரை வரவேற்றது. இவருக்கு கலைஞர் என எம். ஆர் ராதா அவர்கள் நாடகத்தின் போது பெயர் சூட்டினார். காலப்போக்கில் அதுவே பலரும் சொல்லும் பெயர் ஆனது.

பெரியார், அண்ணா பற்றி

பெரியார் அன்றைய சுதந்திர பேராட்டத்தில் காந்தியுடன் நாட்டை காப்பாற்ற முற்பட்டவர். அத்துடன் தீண்டாமை ஒழிப்பையும் தடை செய்வதற்கும் போராடியவர். இவர் ஒரு அரசியல்வாதியாகவும் இருந்தவர். திராவிட கழகத்தின் மூத்த உறுப்பினரும் இவர் தான். ஹிந்தி எதிர்ப்புக்கும் போராடியவர். தமிழுக்கு ஓர் இடத்தை இட்டு சென்றவரும் கூட நம் பெரியார்.

அண்ணா அவர்களை பற்றி கூற வேண்டும் ஆனால் அவர் ஒரு மேதை. எந்நேரமும் நூல்களோடும் நூலகங்களோடும் உரையாடி கொண்டு இருப்பதில் கொள்ளை பிரியம் என அவரே கூறியுள்ளார். பெரியாரை என் தந்தையாய் ஏற்று கொண்டேன் என அண்ணா ஒரு மேடையில் தெரிவித்து இருந்தார்.

இதற்கமைய பெரியார் அவர்களும் அண்ணாவை அடுத்த திராவிட கட்சிக்கு தலைவரும் ஆக்கினார். அண்ணா அவர்கள் ஒரு சிந்தனையாளரும் ஆவார். கவிதை, நாடகம், நாவல், கதை என பலவற்றை எழுதும் பழக்கமும் உடையவர். அவரின் எழுத்துக்களும் கூட திராவிட கட்சி வளர்ச்சி அடைய ஒரு காரணம் இது யாவரும் அறிந்த உண்மை.

பெரியாரும் அண்ணா இருவரும் ஒரே சிந்தனைக்குள் ஒரே போராட்டத்துக்கும் பொது நலன்களுக்கும் தங்களை அற்பணித்தவர்கள்.

பெரியார், அண்ணா வழியில் கலைஞர்

நாட்டு நலனை திராவிட கட்சியாய் மாற்றி ஹிந்தி திணிப்பை தடுத்து பல போராட்டத்திற்கு வழி வகுத்ததில் கலைஞர் அவர்களும் முக்கிய இடத்தில் உள்ளார். அரசியலில் கலைஞர் அவர்களுக்கு நாட்டம் வர காரணம் ஆனவர்கள் பெரியாரும் அண்ணா அவர்களும் என கலைஞர் அவர்கள் பல மேடைகளிலே கூறியுள்ளார்.

இவரும் பெரியார், அண்ணா அவர்களைப்போல் தமிழிலும், கவிதை, கதை, நாடகம் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். அவர்களை பார்த்து அரசியலையும், நாட்டு மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டார். மனித உரிமைகளுக்கும் குரல் கொடுத்தார்.

இவர்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனையும், பொதுநல நோக்கமும் இருந்ததனாலே திராவிட கட்சியும் வலுமையான தூண்கள் ஆனது இது இன்றும் பேசப்படும் உண்மை.

இதனடிப்படையில் கலைஞர் அவர்களின் வளர்ச்சியும் இவர் அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கும் பெரியாரும் அண்ணா அவர்களும் ஒரு காரணம்.

இதன் மூலம் கலைஞர் அய்யா அவர்கள் பெரியார், அண்ணா வழிகளிலே தான் இந்நாட்டையும், தமிழையும் வளர்த்த ஒரு மகான் என்ற கூற்று முற்றிலும் உண்மை என கூறிக்கொண்டு என் உரையை நிறைவு செய்கிறேன்.

என் உரையை கேட்டதற்கும் கலைஞர் அவர்களின் பெருமையை சொல்ல வாய்பளித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Read More:

கலைஞர் பற்றிய பேச்சு போட்டி