இன்று இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள். சூரியனின் வருகைக்கு காத்திருக்கும் உழவர்கள் மட்டுமில்லாமல் நாமும் காத்திருக்கின்றோம். காரணம் இன்று நம் தைப்பொங்கள் திருநாள் என்பதால் ஆகும். இத்தகைய தை திருநாளை சிறப்பிக்க நான் உங்கள் முன் சிறு உரையாற்ற வந்துள்ளேன்.
தைப்பொங்கல் கொண்டாட்டம்
தமிழுக்கு ஒன்று தை ஒன்று என்ற நாளில் தைப்பொங்கல் கொண்டாடப்படும். இது ஆங்கில மாதப்படி தை பதினைந்தாம் திகதி அன்று கொண்டாடப்படுகின்றது.
தைப்பொங்கலில் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து வீட்டில் கோலம் இட்டு புதுப்பானையில் பொங்கி சூரியனுக்கு படைப்பார்கள். அதன்பின் வானவேடிக்கை, பட்டாசு என பல பட்டாசுகள் வெடிப்பார்கள். ஆலயத்திற்கு சென்று இறைவனை வணங்குவார்கள். பின் உறவினர்களிடம் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள்.
சிலர் உறவுகளின் வீடுகள் சென்று இனிப்பு பண்டங்களை பரிமாறி வாழ்த்துக்களையும் பரிமாறி கொள்வார்கள். அதன்பின் சிலர் நண்பர்களுடன் சேர்ந்து பண்டிகை கொண்டாடுவார்கள். வேடிக்கையான போட்டிகளும் வைத்து தை பண்டிகையை கொண்டாடுவார்கள்.
தைப்பொங்களும் தமிழர் பெருமையும்
தைப்பொங்கள் பொதுவாக தமிழர்களின் பெருமைக்கு பறைசாற்றும் பண்டிகையில் ஒன்றாகும். பொங்கல் தமிழருக்குரித்தான பண்டிகை எனவும் கூறலாம். உழவர்கள் வயல்களில் நட்ட நெல்லிற்கு சூரியன் உதவி செய்வதற்காக நெல் அறுவடை முடிந்ததும் நன்றி சொல்லி அந்த அரிசியில் பொங்குவார்கள்.
சாதாரண மக்கள் உணவளித்த உழவருக்கும் சூரிய கடவுளுக்கும் நன்றி சொல்லி தைப்பொங்கலை கொண்டாடுவார்கள். இதன் மூலம் நம் உணவு கஷ்டம் இன்றி மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கின்றது என பலராலும் நம்பப்படுகின்றது.
பொங்கல் பண்டிகையை பல பெயர் கொண்டு அழைப்பார்கள். தை மாதம் கொண்டாடுவதால் தைத்திருநாள் எனவும் சூரியனுக்கு படைப்பதால் சூரிய பொங்கல் எனவும் உழவர்கள் சார்பில் கொண்டாடுவதால் உழவர் திருநாள் எனவும் தமிழர் பெருமையை பறைசாற்றுவதால் தமிழர் திருநாள் எனவும் அறுவடை செய்த நெல்லின் அரிசியையே பொங்குவதால் பொங்கல் பண்டிகை எனவும் பொங்கலை சிறப்பித்து அழைப்பார்கள்.
தற்காலத்தில் பொங்கல் கொண்டாடும் விதம்
நம் பாரம்பரிய பண்டிகை என்று இன்றும் உலக அளவில் கொண்டாடப்படுகின்றது. பல நாடுகளில் உள்ள தமிழர்கள் இதனை கொண்டாடுவதால் அங்குள்ள பிற மொழி மக்களும் இதை விரும்பி கொண்டாடுகின்றனர்.
ஆங்கிலேயர், அமெரிக்கர், பிரான்சியர் என பலரும் இந்திய நாட்டில் தமிழர் கலாச்சாரத்தை பின்பற்றி தைப்பொங்கல் கொண்டாடுகின்றனர்.
நம் தைப்பொங்கல் தினத்தில் பிற மொழி மக்கள் நம் பண்டிகை விளையாட்டுகளிலும் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இன்று உழவர்களின் எண்ணிக்கையும் குறைந்து செல்கின்றது. இது வேதனைக்குரிய விடயம் ஆகும். இதன் காரணம் விவசாயத்திற்கான முக்கியத்துவத்தை பலரும் கொடுப்பதில்லை. இருப்பினும் நம் மரபின் படி இப்பண்டிகையை சிறப்பித்து கொண்டு தான் உள்ளோம்.
அத்துடன் பல தொலைகாட்சி நிகழ்வுகளும் பொங்கலை சிறப்பிப்பதற்காக பல நிகழ்ச்சிகளை செய்கின்றனர். இவ்வாறு தற்கால பொங்கல் கொண்டாடபடுகின்றது.
எனவே நம் முன்னோர்களின் தமிழரின் பண்பாடுகள் நாளைய சமூகத்திற்கும் ஒப்படைக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு.
ஆகவே சிறப்பான நம் பொங்கல் பண்டிகையின் பெருமையையும் சிறப்பையும் நாம் காப்போம் என கூறி அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்களுடன் நன்றி வணக்கம்.
Read More: