இங்கு என் உரையை பார்வையிடுவதற்கும் இவ்விழாவை சிறப்பிக்க வந்தவர்களுக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
நான் இன்று உங்கள் முன்னில் பேச வந்த விடயம் நம் இந்திய நாட்டு சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த ஓர் உயர்ந்த பெண்மணியுமான சரோஜினி நாயுடு பற்றி சிறு உரையாற்ற வந்துள்ளேன்.
சரோஜினி நாயுடு அம்மையாரின் இளமைக்காலம்
1879ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இந்தியா நாட்டில் ஜதராபாத்தில் தந்தை அகோரநாத் அய்யாவிற்கும் தாயார் வரதா சுந்தரி அம்மையாருக்கும் புத்திரியாக பிறந்தவர் சரோஜினி நாயுடு ஆவார். இவர் தெலுங்கு, உருது, வங்காளம், பாரசீகம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
சரோஜினி நாயுடுவின் பன்னிரண்டு வயதிலேயே மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.
அதை தொடர்ந்து மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றால் அங்கு உள்ள இட்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். அதேபோல் இங்கிலாந்திலுள்ள கேப்ரீட் கல்லூரியிலும் கல்வியை கற்றார்.
சரோஜினி நாயுடு அம்மையாரின் திருமண வாழ்க்கை
சரோஜினி நாயுடு அம்மையார் கல்லூரி காலங்களில் கவிதை எழுதுவதிலும் பூக்களின் அழகை இரசிப்பதும் இயல்பான குணம். அந்த காலப்பகுதியில் பதினேழு வயதில் முத்யாலா கோவிந்தராஜீலு நாயுடு எனும் ஒரு மருத்துவரை காதலித்தார்.
பின் சரோஜினி நாயுடு அம்மையாருக்கு பதினொன்பது வயதில் முத்யாலா கோவிந்தராஜீலு நாயுடு என்பவருக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார்கள்.
கலப்பு திருமணங்களில் பல எதிர்ப்புகள் வந்த போதும் அவர் தந்தை முன்னிலையில் இருந்து இத்திருமணத்தை சிறப்புற நடாத்தி வைத்தார்.
அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என்ற நான்கு குழந்தைகள் பிறந்தன. பிற்காலத்தில் இவர்களின் மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனரும் ஆனார்.
சரோஜினி நாயுடு அம்மையாரின் விடுதலை போராட்ட பங்களிப்பு
பெண் என்ற பெயருக்கு பதுமை உள்ளது அதனுடன் வீரத்தையும் சொல்லி தந்த அம்மையார் சரோஜினி நாயுடு அவர்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுதலை ஏற்படுத்தியது இந்தியாவின் வங்காளம் பிரிக்கப்பட்டதே காரணம். அதன் பிறகு காந்தியுடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் பல சுற்று பயணங்களுக்கு சென்றார் சரோஜினி நாயுடு அம்மையார்.
இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்காக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆங்கிலயரின் செயலை கண்டித்து பேசி ஆங்கிலயரையே அதிர வைத்தார்.
அத்துடன் இவருக்கு இங்கிலாந்து நாட்டால் வழங்கப்பட்ட பதக்கத்தையும் திருப்பி அனுப்பினார். இவரின் பேச்சில் ஆங்கிலேய இளவரசன் இச்செயலுக்காக மன்னிப்பும் கேட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் இவர் காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவரும் இந்திய சுதந்திரத்தின் பின் உத்திர பிரதேச மாநில கவர்னராகவும் பதவியேற்றார். நாட்டிற்காக பல போராட்டங்களில் சிறைவாசம் சென்றார்.
அங்கு அவரது பிடித்தமான கவிதைகள், விடுதலை போராட்டங்கள் பற்றி எழுதினார். அத்துடன் சிறைச்சாலைகளை பூங்காவாக மாற்றினார். பூக்கள் செடிகள் என அவரின் பொழுதை கழித்தார்.
இன்று நம் விடுதலை போராட்டத்தில் பெண்களின் சக்தியும் நிலைத்து இருந்ததற்கு இவர் உதாரணம்.
இவ்வாறு இந்திய சுதந்திரத்தையும் இந்தியாவின் முதல் பெண் கவர்னரும் ஆன இவர் தன் பணியை சிறப்புற செய்து 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி மாரடைப்பு காரணத்தால் இறைவனடி சேர்ந்தார்.
இவரின் பணிகளை போல் இவரும் நம் உள்ளத்தில் என்றும் நிலைத்திருப்பார் என கூறி விடை பெறுகின்றேன். நன்றி வணக்கம்.
Read More: