விடுதலை போரில் தமிழர்களின் பங்கு பேச்சு போட்டி

viduthalai porattathil tamilar pangu speech in tamil

தமிழே என் பேச்சு தமிழுக்காய் என் மூச்சு என்ற வாக்குக்கு இணங்க இங்கு வருகை தந்த அனைவருக்கும் என் இனிய வணக்கம். இம்மேடை எனக்கு தமிழனாக ஒரு பெருமையை அள்ளி தருகின்றது.

காரணம் இன்று நான் பேச வந்துள்ள விடயம் அப்படிப்பட்டது நம் இந்திய நாட்டின் விடுதலைக்கு எம் தமிழரின் பங்கு என்ற தலைப்பை மையமாக வைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்து இருக்கின்றேன். இது நம் தமிழர்களின் பெருமை என்று கூறினால் மிகை ஆகாது.

விடுதலை போராட்டம்

அன்றைய இந்தியா ஆங்கிலேயர் வசம் இருந்தது. சொந்த நாட்டிலேயே அடிமை சங்கிலி போடப்பட்டு இருந்த காலப்பகுதி. வர்த்தக நோக்கில் வந்த அன்றைய ஆங்கிலேயர் நாட்டின் வளங்களை சுரண்ட மொத்த நாட்டையும் கைப்பற்றினார்கள்.

அதனடிப்படையில் இந்தியர்கள் நாட்டுக்குள் அடிமைகளாக்கப்பட்டனர். வேறு நாடுகளுக்கு குறைந்த சம்பளத்தில் அனுப்பப்பட்டனர்.

இந்தியர்கள் வெளிநாட்டு கலாச்சாரத்திற்குள் மது, மாது என அடிமையானார்கள். பெண்கள் பல கயவர்களால் சூரையாடப்பட்டார்கள். இதனை பார்க்க முடியாது காந்தியடிகள் நாட்டின் விடுதலை போராட்டத்திற்கு அஹிம்சை வழியை ஆயுதமாய் கையில் எடுத்தார். இது இந்தியாவின் விடுதலை போராட்டம் ஆனது.

விடுதலை போரில் தமிழர் பங்களிப்பு

ஆங்கிலேயர் இந்திய நாட்டை கைப்பற்ற நினைத்த போது மன்னர் ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி இடம்பெற்றது. அந்த காலப்பகுதியில் தமிழ் நாட்டை ஆங்கிலேயர் கைப்பற்ற நினைத்த முதல் வேளையில் பூலித்தேவன் என்ற பாளையக்காரனால் அவர் ஆட்சி செய்த நெற்கட்டான் செவ்வல் பகுதியை ஆங்கிலயரிடம் இருந்து காப்பாற்றினார்.

அதன் பின் ஆங்கிலேயருக்கு வரி வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனையில் வீரபாண்டிய கட்டபொம்மன் வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கு எதற்கு வரி என்று உரத்து ஆங்கிலயரை துரத்தினார்.

அவரை போல் வேலுநாச்சியார், ஊமைத்துரை, சிவகங்கை மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை என்போர் ஆங்கிலயரை எதிர்த்து வீர மரணமடைந்தனர்.

மன்னராட்சி முடிவுக்கு வந்து ஆங்கிலேயர் கொடி இந்தியாவில் ஏறியது. அப்பொழுது விடுதலை சுதந்திர பேராட்டத்தில் பங்கேற்ற பால கங்காதர திலகரும் ஒரு தமிழரே அவர் வழி வந்த கப்பலோட்டிய தமிழனும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய தமிழன் ஆவார்.

தன் கைகளில் இந்திய கொடியுடன் நெஞ்சை நிமிர்த்தி உயிர் போனாலும் நாட்டுக்கு தான் என இறந்த தமிழன் திருப்பூர் குமரன். இவர்களை தொடர்ந்து ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜா என்று பல தமிழர்கள் இந்திய நாட்டு விடுதலைக்கு போராடினார்கள். சிறைவாசம் சென்றார்கள். ஆங்கிலயர்களிடம் அடி உதைபட்டார்கள். தூக்குதண்டனைகள் வழங்கப்பட்டன. எத்தனையே சொல்ல முடியாத கஷ்டங்களை கண்டனர்.

இன்றும் எத்தினையே பெயர் தெரியாத தமிழர்கள் நாட்டின் விடுதலைக்கு தங்களை மாய்த்துள்ளார்கள். அவர்களின் உடைமைகளை இழந்துள்ளார்கள். வீழ்வது உயிராக இருந்தாலும் வீழ்வது இம் மண்ணுக்காகவே என வாழ்ந்து வீரமரணமடைந்து நம் நாட்டு விடுதலைக்கு போராடிய தமிழர்களின் பெருமையும் வீரமும் இன்றும் பறைசாற்றுகின்றன.

இவர்கள் வெறும் போராட்டவாதிகள் அல்ல நாட்டின், நம் தமிழின் இரத்தினங்கள். இவர்கள் நாட்டுக்கும் எம் இளைய சமூகத்திற்கும் இந்நாட்டை துன்பத்திலும் துயரத்திலும் எம்மிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து சென்றுள்ளனர். அவர்கள் மறைந்தாலும் அவர்களின் மறைவு ஒரு சரித்திரமாக நம் உள்ளங்களில் உள்ளது.

இவர்களின் வீரத்திற்கும் இவர்களின் போராட்ட சக்திக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

எனவே இந்திய நாட்டு விடுதலைக்கு தமிழரின் பங்களிப்பும் நிச்சயம் உண்டு என்பது உலகறிந்தவை. இம்மேடையில் ஓர் தமிழனாய் இருக்க எனக்குள் ஓர் கர்வம் கொள்கின்றேன் என கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். அனைவருக்கும் நன்றி வணக்கம்.

Read More:

அச்சம் தவிர் பேச்சு போட்டி