சிறந்த ஆளுமை பண்பு மிக்க இவர் மக்களால் கேப்டன் என அழைக்கப்படுகின்றார். இவர் ஏழை எளிய மக்களுக்கு செய்த உதவிகளால் மக்கள் மனதில் உயரமான இடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி திரைத்துறையில் பல கலைஞர்களுக்கு உதவிகள் செய்து அவர்களின் வளர்ச்சியில் உதவியுள்ளார்.
அரசியல் பயணத்திலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து மக்களால் போற்றப்படும் தலைவராக உருவெடுத்த இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
விஜயகாந்த் இரங்கல் கவிதை
மலைகள் போல் எட்டா
சிகரத்தில் உன்
சிந்தனையை கண்டேன் – உன்
பணியை கண்டேன்..
அரசியல்வாதியாக உன்னை – நான்
பார்த்ததை விட மக்களின்
தலைவனாய் உன்னை
பார்த்தேன்..
மக்களின் நாயகனும் நீயே
தமிழ் பற்றும் – தமிழர்
பிரபாகரன் பற்றும்
உன் மேல் கண்டேன்..
உன் பேச்சில் சட்ட சபையும்
அதிர்ந்தது அல்லவா?
அரசியல் ஓர் சதுரங்கம் – என
சொல்வாய்..
உன் போல் ஒருத்தனை
தாயின் உருவமாய்- எம்
தந்தை உருவமாய்
எத்தனை உள்ளங்கள்..
உன் வரவை காண
எத்தனை பேர்
உனக்காக எத்தனை பேர்
அத்தனையும் உன் உள்ளத்துக்காய்..
இன்று உன் தோற்றம்
சாய்ந்ததுவே..
நிலைகுலைந்து போனதே – உன்னை
காண உள்ளம் தவிக்குதே..
உன்னை சுற்றி உயிர்களின்
அழுகுரல்..
ஆனந்தமாய் இருந்த
மக்களின் ஏக்கங்கள்..
உண்மையான தலைவன் நீர்..
உன் மேல் கொண்ட பாசம்
இன்று கண்ணீராய் ஓடுகிறது
உன் கால்களில்..
உன் வரவை மேகங்கள்
பூக்களாய் தூவுகிறது..
உன் பரிசங்களை காற்று
வருடுகின்றது..
உன் மறைவு நிச்சயம்
ஒரு பேசு பொருள்..
உன் மறைவு ஒரு
வரலாறை உருவாக்கும்..
நீ கொண்ட பாசமும் – நாம்
கொண்ட பாசமும்
கருங்கற்களில் உருவாகும்..
அதன் ஆழம் மக்களில் உருவாகும்..
சாய்வது நீயாக இருந்தாலும்
உன் எண்ணங்கள்
சாய்வதில்லை..
உன் மறைவை நெஞ்சில்
விதையாக்குவேன்..
உன் நினைவுகளை அதற்கு
உரமாக்குவேன்..
உன் உதயம் ஒரு
சரித்திரமாய் பார்கிறேன்..
உன் மறைவு ஒரு
காவியமாய் பார்க்கிறேன்..
விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி
கண்கள் கவி சொல்லும்
கருவிழி உன் பெயர் சொல்லும்..
உள்ளம் மெய்பொருள் தேடும்
இதயம் உன் பொருள்
தேடும்..
உன் மறைவை நீயே
அழகாய் சொன்னாய்..
இன்று அழுகையாய்
மறைவு ஆனதே..
ஏனே உன்னை விரும்பவில்லை
இன்று ஏனே என்
மனதில் ஒரு கலக்கம்..
நல்ல தலைவனை
இழந்த வலி எனக்குள்..
உன் சிந்தனை கேட்டது இல்லை
இன்று உன் சிந்தனையானது..
தெரு எங்கும் உன் பெயர்
தலைவனாக..
மக்கள் பேச்சு எல்லாம்
உன் பெயர் உத்தமனாக..
மக்கள் மனதில் உன்
இடம் கண்டேன்..
ஏனே இன்று உன்
இரசிகன் ஆனேன்..
உன் மறைவு பல
உள்ளங்களை உனதாக்கியது..
உன் மறைவு ஒரு
வரலாறு ஆனது..
அற்புத காவியம் நீர்!
அன்பானம் உள்ளம் நீர்!
நகைச்சுவையின் மன்னன் நீர்!
மக்களின் தலைவன் நீர்..
உம்மை ஆராய்கிறேன்
உம் படைப்பை இரசிக்கிறேன்
உம் மறைவை ஏனே
ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
உம் மறைவு நாளைய
எதிர்காலத்தை வகுத்து
மக்களுக்காக வாழ்ந்துகாட்டிய நாயகன்..
கப்டன் விஜயகாந் அவர்களுக்கு
சமர்ப்பணம்.!
Read More: