சிறந்த “எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்” தொகுப்பு.
- எண்ணங்கள்
- வாழ்க்கை தத்துவம்
எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்
1. “வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும் உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது.”
2. “கிடைக்காததை துரத்துவதும் கிடைத்ததை மதிக்காததும் தான் வாழ்க்கை.”
3. “ஒவ்வொரு படிநிலையும் ஒவ்வொரு ஆசான் எந்த படிநிலையும் வந்த படியே செல்வதில்லை.. ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கும் ஏதோ ஒன்றை ஏற்கச் சொல்லும்.. கற்றுக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருந்தால் வசப்படுமே வாழ்க்கை.!”
4. “தேடி வருவதில்லை துன்பங்கள் ஓடி விடாது நம்மை விட்டு இன்பங்கள்.. நாம் போகும் வழியெங்கும் நம்மை வரவேற்கத் தயாராய் நம் பாதையில் கல்லும் உண்டு முள்ளும் உண்டு.. கண்களின் துணைக் கொண்டு எளிதாக கடந்து விடுவோம் இதுதான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டால்.”
5. “தாங்கக்கூடிய வலியை மட்டுமே படைத்தவன் கொடுப்பான் என்று எண்ணும் பக்குவப்பட்ட மனிதருக்கு ஆறுதல் தேவையில்லை.!”
6. “நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் எல்லோருக்கும் உண்டு.. அதில் மட்டும் தாராளம் காட்டுவதுதான் வாழ்க்கையின் ரகசியம்.!”
7. “அழகு உன்னை ஆளக் கூடாது.. அறிவுதான் ஆளவேண்டும்.. பிரிவு உன்னை ஆளக்கூடாது.. தெளிவு தான் உன்னை ஆளவேண்டும்.!”
8. “தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும் அதைச் செய்வதில் அவமானம் ஒன்றும் இல்லை. சோம்பேறியாகத் திரிவதுதான் அவமானம்.”
9. “உழைத்துக் கொண்டே இருங்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு வாழ்வில் சலிப்பே வராது.”
10. “உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.”
11. “உழைப்பு, இது மட்டும் தான் உங்களை மற்றவர்களிடமிருந்து பளிச் என்று வேறுபடுத்திக் காட்டும்.”
12. “கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்.”
13. “இலட்சியம் என்று ஒன்று இல்லாவிட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்!”
14. “சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறிப்போக ஒருமுறை நினைத்து விட்டால்! பிறகு ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நீ மாறிக்கொண்டே போக வேண்டி இருக்கும்…!!”
15. “பணத்தின் மதிப்பு தெரிந்தவனே! சிக்கனமாக செலவு செய்பவன்..!!”
16. “கஷ்டங்கள் கவலைகள் உனக்கு மட்டும்தான் என்று புலம்பாதே..! இங்கு சந்தோசத்தை மட்டுமே அனுபவிக்கும் மனிதர்கள் எவரும் இல்லை..!”
17. “நிதானம் தவறும் போதெல்லாம் ஒன்றைமட்டும் நினைவில் கொள்ளுங்கள்… வார்த்தைகள் கூர்மையானது நம்மை எப்போதும் சிதைக்கக் கூடும்..”
18. “ஒருவனின் மனம் துய்மையாக இல்லை என்றால், பணமாக இருந்தாலும் சரி, பலமாக இருந்தாலும் சரி.. அது அவனுக்கு பலன் தராது..”
19. “நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலை வராது.. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது.. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது..!”
20. “ஏமாற்றம் தோல்வியின் முதல் படியில்லை அது வெற்றியின் அத்திவாரம்.”
21. “கொட்டும் தேனீக்களை தாண்டித்தான் சுவைமிகுந்த தேன் உண்டு…! கடினமான வலிகளை தாண்டி தான் வாழ்வில் வெற்றி உண்டு..!”
22. “மறக்கக் கற்றுக்கொள், மன்னிக்க கற்றுக் கொள்வாய்..! மன்னிக்க கற்றுக் கொள், கோபப்படாமல் இருக்க கற்றுக்கொள்வாய்..! கோபப்படாமல் இருக்க கற்றுக்கொள், பொறுமையாக இருக்க கற்றுக் கொள்வாய்..! பொறுமையாக இருக்க கற்றுக் கொள், அனைத்து பிரச்சனைகளும் எளிமையாக போய்விடும்.”
23. “உனக்கு துரோகம் இழைத்தவர்களை நீ பழி வாங்காதே. அதை காலத்திலும் ஒப்படைத்து விட்டு நீ அமைதியாக இரு. ஏனென்றால் காலம் போல் மிகக் கொடூரமாய் பழிவாங்க உலகில் யாராலும் முடியாது.”
24. “சொற்களில் வலிமையை உணர்ந்தால் யாரிடமும் வார்த்தைகளை விடமாட்டீர்கள்….!!”
25. “குழந்தை போல மனமிருந்தால் ௭தற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை! உலகம் ௭ன்பது ௭ன்னவென்று தெரியாத வயது தான்! உண்மையில் மகிழ்ச்சி நிறைந்தாக இருக்கிறது…!!”
Read More Tamil Quotes :