இந்த பதிவில் “சிந்தனை தத்துவங்கள்” காணலாம்.
- சிந்தனை தத்துவங்கள்
- சிந்தனைகள்
- Sinthanaigal In Tamil
சிந்தனை தத்துவங்கள்
1.தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும்.
2. நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள் இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார்.
3. உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும் சரி, ஒரு நாட்டையும் சரி, மிகவும் பாதித்து விடுகிறது.
4. காதலிப்பதிலும் சரி, பழி வாங்குவதிலும் சரி ஆணை விடப் பெண் ஆவேசமானவள். அவள் பழிவாங்க முனைந்து விட்டால் விதியின் கதியும் அதோ கதிதான், அவள் தந்திரத்தில் ஆணை மிஞ்சியவள்.
5. இந்த மண்ணை நேசியுங்கள், இந்த மண்ணிடம் விசுவாசமாயிருங்கள் உங்களால் முடிந்தமட்டும் இம்மண்ணுக்கப்பால் ஏதோவொன்று இருப்பதாய் யாரவது கூறினால் அதை நம்பாதீர்கள். இந்த மண்ணைவிட உயர்ந்தது வேறொன்றில்லை.
6. உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்.
7. பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர்.
8. ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம். முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
9. மன்னித்தல் தண்டித்தலைவிடச் சிறந்தது. ஏனெனில் தண்டித்தல் மிருகத்தனம் மன்னித்தல் மனித குணம்.
10. உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் திட்டவட்டமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக, சாக்குப் போக்குகளை ஒருபோதும் சார்ந்திருக்காதீர்கள்.
11. உங்கள் வாக்குறிதியை நீங்கள் காப்பாற்ற விரும்பினால் எந்தவொரு வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள்.
12. நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும். சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை. நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை. அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம்.
13. சாதாரண மக்கள் எப்போது ஒருங்கிணைகிறார்களோ அல்லது தங்களை நாட்டுடன் ஈடுபத்திக் கொள்கிறார்களோ அன்றுதான் மாற்றங்கள் ஏற்படும்.
Sinthanaigal In Tamil
14. மனிதன் சூரியனாய்ப் பிரகாசிக்க வாய்ப்பிருக்கும்போது ஏன்? மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் தர வேண்டும்.
15. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.
16. நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை. ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன்.
17. ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால், அதில் களைகள்தான் முளைக்கும்.
18. பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.
19. உங்களுக்குத் தேவையான சக்தியும், செயல் ஊக்கமும் உங்களிடம் தான் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பினால் தான் இவை இரண்டும் நீர்வீழ்ச்சி போல தங்கு தடையின்றி உங்களுக்குக் கிடைக்கும்.
20. எவர் சொன்னாலும் அதனை அப்படியே நம்பி விடாமல் அதன் உண்மைத் தன்மையை அறிந்து செயல்படவேண்டும்.
21. அறிவு உடையவர்கள் வேறொன்றும் இல்லாதவராயினும் எல்லாம் உடையவரே; அறிவில்லாதவர் எல்லாமுடையவராயினும் ஒன்றுமில்லாதவரே.
22. எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள்.
23. பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டும்மானால் அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள்.