இந்த பதிவில் “நற்சிந்தனைகள் தத்துவங்கள் பொன்மொழிகள்” உள்ளடக்கியுள்ளது.
- நற்சிந்தனைகள்
- தத்துவங்கள் பொன்மொழிகள்
- Thathuvangal Ponmozhigal
நற்சிந்தனைகள் தத்துவங்கள் பொன்மொழிகள்
1.எதிரி இல்லையென்றால் சண்டை இல்லை; சண்டை இல்லையென்றால் வெற்றி இல்லை; வெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை.
2. ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.
3. தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில் பயன் எதுவுமே இல்லை. அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.
4. நல்லவர்கள் செய்யும் உதவி, பூமிக்கடியில் இருக்கும் நீர்போல. தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது. ஆனால், பூமியின் மேற்பரப்பில் பயிர்பச்சைகளை செழுமையாக வளரச்செய்யும்.
5. அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.
6. நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கேட்பதை விட்டுவிட்டு செயல்படுங்கள்; செயல்பாடு ஒன்றே உங்களை வரையறுக்கும்.
7. தனது இலக்கினை அடைவதற்கான சரியான அணுகுமுறை கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது; தவறான அணுகுமுறை கொண்ட ஒருவனுக்கு இந்த பூமியில் எதுவும் உதவ முடியாது.
8. இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால் அதுதான் விலைமதிக்க முடியாத திறமை.
9. நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல் அமைதியாக முடிவெடுப்பது; உற்சாகமான சூழ் நிலையில் சம நிலை இழக்காமல் இருப்பது; யாரையும் திருப்திபடுத்த தனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பது இவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள்.
10. உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால், ஒருவருக்கு நல்ல மகளாக வாழும் ஒருவரை திருமணம் செய்துகொள்ளுங்கள்.
11. மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.
12. நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயே அதிக நன்மை உள்ளது.
13. திருமணம் செய்து கொள்வதற்கு முன் கண்களை நன்றாகத் திறந்து வை. அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும்.
14. அன்பு தலைமுடியைப் போன்றது. வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும்.
15. பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
தத்துவங்கள் பொன்மொழிகள்
16. எதிரியையை அலட்சியம் செய்தால் அவனைவிட உயர்ந்தவன் ஆவோம்.
17. மது, மாது, சூது ஆகியவை செல்வத்தைச் சுருக்கி தேவைகளைப் பெருக்குகின்றன.
18. தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்; தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்.
19. சிறு தீங்குகளைப் பொருட்படுத்தாமல் இருந்தால் அவை ஒன்றுமில்லாமல் போய்விடும்.
20. சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
21. உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன.
22. ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு. நீ சுறுசுறுப்பாய் இருப்பதை நீயே உணர்வாய்!
23. மோசமான சாக்குபோக்குகள் என்பது எதுவும் சொல்லாததைவிட மட்டமானது.
24. உங்களால் முடியும் என்று நம்புங்கள், அதுவே உங்களுக்கான பாதி வெற்றி.
25. விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்.
26. மற்றவர்களுடன் இணைந்து வெற்றி பெறுவது எப்படி? என்பதை அறிந்துகொள்வதே, வெற்றி சூத்திரத்தின் மிக முக்கியமான ஒற்றை மூலப்பொருள்.
27. எங்கே இருக்கின்றீர்களோ அங்கிருந்தே, எதை வைத்துள்ளீர்களோ அதைக்கொண்டு, உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள்.
28. உங்கள் கண்களை நட்சத்திரங்களின் மீதும், உங்கள் பாதங்களை தரையின் மீதும் வைத்திருங்கள்.
29. வாக்கு என்பது துப்பாக்கி போன்றது; அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது.
30. ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன், ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை.
31. அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்.
32. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில்தான் இருக்கிறது.