கலைஞரும் தமிழும் கவிதை

kalaignarum tamilum kavithai in tamil

கலைஞரும் தமிழும் கவிதை

இது கதையல்ல வரலாறு
அய்யா கலைஞரின் அத்தியாயம்..

ஏழைக்கு ஓர் எழுத்தறிவித்து
தமிழுக்கு தலை சாய்த்து
உம் பணியை சிறப்புற செய்தீரே..

எங்கள் முத்தமிழ் அறிஞர்
மூத்த தலைவர்
கருணாநிதி அய்யாவின்
திராவிட கழகத்திற்காய்
உதித்த ஆதவனே..

ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில்
தமிழுக்கு ஒரு பாரதத்தை
நிலைநாட்டிட உமது குரலை உயர்த்தினீரே..

அண்ணா வழி வந்த எம்
கலைஞர் ஐயாவின் பணிகளும்
இன்று அண்ணா தொழிநுட்பகூடங்களுடன்
பல்கலைக்கழகங்களும் என தொடர்ந்த உம்
தமிழ் பணி ஏராளம்..

என் உடல் மண்ணுக்கு
என் மூச்சு தமிழுக்கு என
வாழ்ந்து காட்டிய
பெரும் தமிழரையா நீர்..

உம் கவிதைகள் கோடி
கவியரங்குகள் கூடி
மக்களை தமிழ் கடலில்
தவிர்க்க விட்டீரே..

உம் தமிழ் பணியை
எண்ணி மெய்சிலிக்கிறேன்
தமிழனாய் பிறந்ததில் உம்மால்
பெருமிதம் கொள்கிறேன்..!

கலைஞரும் தமிழும் கவிதை

காலத்தின் குரல்
காலம் அழியாத குரல்
நம் கலைஞர் ஐயாவின் குரல்
கணமாய் காதில் ஒலிக்கிறது..

அஞ்சுதம் அம்மணி பெற்ற
மூத்த புதல்வன்
தமிழ் பெரும்செல்வம்
கலையின் மொத்த உருவம்..

கவிதைகள் ஆயிரம் உண்டு
ஆனால் தமிழுக்கு நீர்
ஓர் கவிதை..

தமிழை செம்மொழியாய்
மாற்ற போராடிய ஊண்டுகோல்..
உம் தமிழுக்கு கோடி
கூட்டங்கள் இங்கு..

உம் தமிழ் பற்றுக்கும்
நீர் செய்த தமிழ் பணிக்கும்
இன்றும் உம் பெயரை உலகம் சொல்லும்..

காலத்தில் அழியாத
காவியம் உம் மறைவு
என்றும் எம் மனதில்
உம் நினைவு..!

கலைஞரும் தமிழும் கவிதை

என் நாடு நம்
தமிழ் நாடு என
உரக்க சொன்ன
கவிதைகளின் பேரரசன்
நம் முத்தமிழ் கலைஞர்..

நாட்டுப்பற்றில் தொலைநோக்கு
பாதை அமைப்பதிலும்
நாட்டு மக்களை நலமாய்
வாழ வைப்பதையும் சிந்தனையில்
நினைப்பதுண்டு..

நாட்டுப்பற்றுடன் நிறுத்தவில்லை
சிறுவயதின் தமிழ்பற்றையும்
மனதில் ஆழமாய் விதைத்து
தனது ஆயுதமாய் பேனாவை
கையில் எடுத்தார்..

ஊடகத்துறையில் தமிழை
அதிகம் உட்புகுத்தினார்
சிறந்த இயக்குனர்களை
உருவாக்கியவரும் இவரே..

பாடசாலை முதல் பல்கலைகழகம் வரை
தமிழை மாணவர் இடையே
புத்துயிர் பெற வைத்தவர்
ஒரு எழுத்தாளன்- நாளை
காவியத்தை படைப்பான் என்ற
தூரநோக்கை முன்னரே கணித்தவர்..

எங்கு எல்லாம் தமிழ் உடைகிறதோ
அங்கு கலைஞரின் குரல் ஓங்கும்..
அவரின் காகிதங்கள்
சரித்திரம் படைக்கும்..

ஆதவனை கண்ட
தாமரை போல்
திராவிட கழகத்தின்
தூண் நம்
கலைஞர் ஐயா..

அண்ணா சொன்ன வழியை
அழகாய் மக்களிற்கு செயற்படுத்தினார்
திகட்டாத தமிழ் இனிப்பை
அற்புதமாய் சொன்ன பேராசிரியர்..

உம் மறைவை எதிர்பாராத
மக்களின் கண்ணீர் சொல்லும்
ஆதவனின் மறைவு
முடிவல்ல அதுவே
அத்தியாயத்தின் தொடக்கம்..!!!

Read More:

தேர்தல் விழிப்புணர்வு கவிதை

ஆசிரியர் தின வாழ்த்து கவிதை