உலகத்தை கட்டியெழுப்ப போகும் எதிர்கால தூண்கள் குழந்தைகள். அதன் அடிப்படையில் நம் எதிர் கால சந்ததிகள் நம் சிறுவர்கள் அவர்களுக்காக இம் மேடையில் நான் உள்ளேன்.
முதலில் எனது வணக்கத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகள். என் இரு கரம் கூப்பி இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் காலை வணக்கம். நம் முத்து இரத்தினங்களே உங்களை இன்று என் வழியில் கௌரவிக்க வந்துள்ளேன்.
குழந்தைகள் என்றால் யார்
ஒக்ரோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. பதினெட்டு வயதுக்கு கீழ்ப்பட்ட அனைவருமே குழந்தைகளாக கருதப்படுகின்றனர்.
அவர்களின் அனைத்து செயற்பாடுகளும் இன்னொருவர் மீது தங்கி இருக்கும். இதில் நன்மைகள் இருக்கின்ற போதும் பாதகமான விடயங்களும் உள்ளது.
குழந்தைகளுக்கு என பல உரிமைகளும் உண்டு. சுகாதாரம், கல்வி, மொழி சுதந்திரம், உணவு, உடை, உறையுள், பொழுதுபோக்கு என அனைத்து உரிமையும் உண்டு.
அத்துடன் இவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலயும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உள்ளதால் இந்த காலப்பகுதியினரை குழந்தைகள் என பாகுபடுத்தி வைத்துள்ளனர்.
அதனுடன் குழந்தைகளுக்கான கடமைகளும் சமூகத்தில் பேணப்பட வேண்டிய கட்டாயம் இன்றைய சிறார்களுக்கு உள்ளது. அவையாவன ஒழுக்க விதிகளை பின்பற்ற வேண்டும்.
நாட்டின் சட்ட நடவடிக்கைக்கு புறம்பான எந்த செயற்பாட்டிலும் ஈடுபட முடியாது. கட்டாயம் குழந்தை கல்வி பயில வேண்டும். சிறுவயது தொழில் புரிதல் கூடாது என்பன குழந்தைகளின் கடமையாகும்.
குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்படும் தருணங்கள்
குழந்தைகளை தவறான முறைகளுக்குள் சில பெற்றோர்களே தள்ளுகின்றனர். சிறு வயதிலேயே பல துஷ்பிரயோகங்கள் நம் கண் முன்னே நடக்கின்றது. அவற்றில் சில உதாரணங்கள் சிறுவர்களை உடல் அளவிலும் உள ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
கற்கும் மாணவர்களை அதிக மன உளைச்சலுக்குள் உள் தள்ளுவதில் பெற்றோர்கள் தான் முதல் இடம். அதன் பின் பாடசாலைகளில் ஆசிரியர்களின் தாக்கமும் பாரியளவில் உள்ளது. அதுபோல் குழந்தைகளின் அறிவை தவறாக பயன்படுத்துகின்றனர். சிறு வயதிலே போதைக்கு அடிமையாதல் என சிறுவர் குற்றபிரிவுக்குள் இன்றும் ஏராளமான சிறுவர்கள் உள்ளனர்.
குழந்தை கல்வியை பல சிறுவர்கள் கற்பதில்லை. இதனால் தவறான வழிகளில் செல்ல வழி காட்டுகிறார்கள் பல கயவர் கூட்டம். சிறுவயதிலே தொழில் புரிகிறார்கள். இதன் மூலம் குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை கேள்வி குறி ஆகின்றது.
சிறுவர் துஷ்பிரயத்தை தடுக்கும் முறை
குழந்தைகளுக்காக பல சட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டு வந்துள்ளார்கள். அந்த சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு நாம் அனைவரும் சேர்ந்து தண்டனை வழங்க வேண்டும்.
உறவுகளின் பெயரில் வரும் சில கயவர்களை குழந்தைகள் அறியாமல் பல இன்னலை முகம்கொடுகின்றார்கள். அவர்களுக்கு துஷ்பிரயோகம் பற்றியும் அதன் விளைவையும் பெற்றோர்கள் ஆகிய நீங்களும் பாடசாலைகளிலும் சொல்லி கொடுக்க வேண்டும்.
பாடசாலை விட்டு வீடு வரும் பொழுது பெற்றோர்களும் வீட்டில் இருந்து பாடசாலைக்கு வரும் பொழுது ஆசிரியர்களும் குழந்தைகளின் மாற்றங்களை அறிந்து கேளுங்கள். குழந்தைகள் பயத்தில் மறைப்பார்கள். நீங்கள் தான் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்களுடன் நேரத்தை அன்பாக செலவிடுங்கள்.
நம் பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது அவர்களின் வளர்ச்சிக்கும் அவர்களுடன் இருக்க வேண்டும். தவறு என்றால் தட்டி கேளுங்கள். நம் எதிர்காலம் அவர்கள். அவர்களின் எதிர்காலம் நாங்கள்.
எனவே சின்னஞ்சிறு கிளிகளை எப்பொழுதும் சந்தோசமான சூழலில் வைத்திருக்க வேண்டும் எனக்கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றிகள்.
Read More: