1. தனிமை பெண் கவிதை
அற்புதமான வடிவத்தை பெண் என
படைத்தான் பிரமன் என்பார்..
ஆனால் அவளின் வேதனைக்கு
பிரமன் கொடுப்பதோ தனிமை..
வலிகளை மறைத்து சிரிப்பை
வெளிப்படுத்தும் பதுமை பெண்..
ஆனால் அவளின் வலிகளுக்கு
காவியமாகும் இந்த தனிமை..
மங்கையராய் பிறந்திட நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும் என்பார்..
ஆனால் அவள் துன்பத்தை – ஒரு
கவியாய் மாற்றுவது தனிமை..
பெண்ணுக்கு ஓர் இலக்கணத்தை
வகுத்து பூட்டி வைத்துள்ள உலகம் இது..
பாரதி கண்ட புதுமை பெண் எங்கே..?
தனிமையிலே கண்கள் போராடுகிறது அங்கே..
தனிமையிலே சிரிப்பாள், தனிமையிலே அழுவாள்
தனிமையிலே காதல் செய்வாள்..
தனிமையிலே பேசுவாள், தனக்கு தானே
ஆறுதலாய் இருப்பாள் தனிமையிலே..
பெண்ணிற்கு பெண்ணே துணை
இருப்பினும் அந்த பெண்ணின் வாழ்க்கை..?
தனிமை மட்டுமே மிஞ்சும் வாழ்கை
இந்த பெண்ணின் வாழ்கை..!
2. தனிமை பெண் கவிதை
கற்களை அடுக்கி வைத்து
அதை அடித்து நெருக்குவது போல்
பெண் மனதை தனிமையில்
போராட வைத்தாய் இங்கே..
ஒரு நிமிட பிரிவை தாங்காத என்
மனதை தனிமை எனும்
கடலில் தவிக்க விட்டு சென்றாய் இன்று..
உன் உள்ளத்தின் நாயகி
என்று சொன்னாய்..
இன்று என் உள்ளத்தையே
தனிமையில் தத்தளிக்க வைத்து விட்டாய்..
உன்னிடம் தனிமையில் ஆறுதல் தேடுகிறேன்..
உன் மடியில் ஓர் இடம்
வேண்டுகிறேன்..
கண்களின் ஓரம் நீர் துளிகள்
துடைக்க உன் கரம் இல்லை..
தனிமையில் என் கரம்
உன் இடத்தை பிடித்து விட்டது..
உன் நினைவை மறக்க
தனிமையை நாடுகிறேன்..
ஆனால் தனிமை உன் நினைவாக்கிறது..
தனிமையில் துன்பத்தின்
ஓர் இன்பத்தை காண்கிறேன்..
போதும் நம் அழகிய நினைவுகள்
தனிமையில் அதை புன்னகையுடன் இரசிக்கிறேன்..!
3. தனிமை பெண் கவிதை
எட்டு திசைகள் அதில்
ஒரு திசை கூட எனக்கு வழி இல்லை..
தனிமையாகி போனது என் வாழ்வு
ஏனோ இன்று நிம்மதி பெரு மூச்சு..
தனிமையில் சந்தித்தேன்
என்னைப் போல் ஒரு தோழியை..
இருளுக்குள் என்னை
வழிப்படுத்தினாள்..
என் துவண்டு போன நிமிடங்கள்
நினைவுண்டு இன்று..
என் தனிமை தோளுக்கு
தோழனாய் தட்டிகொடுத்தது..
அற்புதமான ஒன்று நம்
தனிமை..
அதை அழகாய் மாற்றுவதும்
வெறுப்பை காட்டுவதும் நம் கையில்..!
எனக்குள் ஓர் அதிசயத்தை
தனிமையில் காண்பேன்..
எனக்குள் ஓர் புத்துயிரை
தனிமையில் உணர்வேன்..
பெண் என பெருமையை
உணரவைத்தது தனிமை..
தனிமை என் பலம் – எனக்குள்
தனிமை ஓர் அங்கம்..!
Read More: