தேர்தல் விழிப்புணர்வு கவிதை

therthal vilipunarvu kavithai

ஒரு நாட்டு மக்களின் தலையெழுத்தை தீர்மானிப்பவையாக தேர்தல் அமைகின்றது. இதனை உணர்ந்து ஒவ்வொரு வாக்காளர்களும் விலை போகாது நேர்மையாக வாக்களித்து சிறந்த தலைவரை தீர்மானிக்க வேண்டும்.

இந்த தேர்தல் விழிப்புணர்வு கவிதை தேர்தலின் முக்கியத்துவத்தையும் வாக்காளர்களின் பலத்தையும் எடுத்தியம்புவதாக அமையும்.

தேர்தல் விழிப்புணர்வு கவிதை

தேர்தலும் ஒரு தேர்வு தானே..
பள்ளியில் நாம் எழுதும் தேர்வு
நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும்
வாக்கு எனும் தேர்வு
நம்மை ஆளும் அரசினை தீர்மானிக்கும்..

சில நொடியில் தன் நிலை மறந்து
விரல் நுனியில் உயிர் தனை இழந்து
வாக்களிக்கும் அடையாள மை
ஒவ்வொரு குடிமகனின் தலை எழுத்து..

ஒரு வாக்கு என்னும் மாற்றம் செய்யும்
என்றொரு சிந்தனை வந்தால்
சிறு துளி பெருவெள்ளம்
கரை புரளும் ஆறு
கடல் அதற்கு சாட்சி..

சரியான வாக்கு நாம் அளித்தால்
கண் எதிரே பொய் பேச்சு
கண் தெரியாமலே போகும்
அகக் கண் தெரிந்து வாக்களியுங்கள்..

கண் முன்னே பொய் பிரச்சாரம்
ஏது செய்ய முடியும் உன்னால்
சரியான வாக்கு ஒன்றே
பொய்யான அரசியலுக்கான சவுக்கடி
ஜனங்களின் நாயகனாய் ஜனநாயகம்
எங்கள் வாக்கு எங்கள் உரிமை..

தேர்தல் என்னும் தேர்வில்
தேர்ந்தெடுப்போம் தகுதியானவரை
நாடும் வீடும் சுகம் பெற
சின்னம் மட்டும் விழி நோக்காது
உண்மையாய் உணர்வாய் வாக்களிப்போம்.!!

Read More:

ஆசிரியர் தின கவிதை

பாரத நாடு பழம்பெரும் நாடு கவிதை