இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

Tamil Birthday Wishes For Friend

இந்த பதிவில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா கவிதைகள்” பார்க்கலாம்.

  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா கவிதைகள்
  • Tamil Birthday Wishes For Friend

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா கவிதை

1.நிலக்கரியில் இருந்து எடுத்த வைரமாய்
உன் வாழ்வில் வளம் பல பெற்று
நலமுடன் வாழ்வாய் வாழ்க பல்லாண்டு..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

2. குறையில்லாத உன் குணத்தோடும்..
குறையாத உன் பண்போடும்..
குறையில்லாத புகழோடும்..
குறையில்லாமல் நீ வாழ்ந்திட
இறைவனை வேண்டுகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா.!

3. சோதனைகள் எல்லாம்
சாதனைகள் ஆகட்டும்..
வேதனைகள் எல்லாம்
பறந்து ஓடட்டும்..
மனம் முழுக்க பட்டாம்பூச்சி
மாதிரி சந்தோஷம் பரவட்டும்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

4. இன்று போல் என்றைக்கும்
நீ சந்தோஷமா நல்லா இருக்கணும்..
என் அன்பான இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

5. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நண்பனே.

6. நீ யாரோ நான் யாரோ..
நம் உறவுக்கு முன் ஆனால்
நீ இல்லையேல் நானும் இல்லை
நீ என் உயிரில் கலந்த பின்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பனே.

7. சண்டை போட்டு நாலு நாள் பேசாமல்
இருந்து விட்டு அடுத்தநாள்
எதுவும் நடக்காதது போல்
பேசும் நண்பன் இருக்கும் வரை
வாழ்க்கை சொர்க்கமே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா.!

8. அழகு இருந்தால் வருவேன்
என்றது காதல்..
பணம் இருந்தால் வருவேன்
என்றது சொந்தம்..
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு இதுவே
உண்மையான நட்பு..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

9. ஆயிரம் சொந்தம் நம்மை தேடிவரும்
ஆனால் தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நல்லநண்பன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

10. வரையப்படாத ஓவியம்..
தொடமுடியாத நிலவு..
மீட்டப்படாத இசை..
தொடமுடியாத வானம்..
இவற்றை போல் உயர்ந்தது தான்
நம் நட்பு..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

11. ஜாதி, மதம், இனம், மொழி
இதையெல்லாம் தாண்டி வருவது
காதல் மட்டுமல்ல நட்பும் தான்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

12. உயிர் பிரிந்தாலும் நம் நட்பு பிரியாது..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா.!

13. நண்பன் என்பவன் யார்?
எவன் ஒருவனிடம் நீ நீயாக
இருக்க முடிகிறதோ அவனே நண்பன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

14. விரல் விட்டு எண்ண முடியாத
நண்பர்கள் மத்தியில்..
என்றும் என் விரல் கோர்த்து
நடக்கும் என் உயிர் நட்புக்கு
என்றும் நான் அடிமை தான்.!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா.!

15. உலகமே உன்னை எதிர்த்தாலும்
உன்னோடு நிற்பவன் தான்
உண்மையான நண்பன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா.!

16. என் இதயத்திற்கும் என் நண்பனுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு..
இருவரும் எனக்காகத் துடிப்பவர்களே..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

17. கண்ணீர் வராமல் காக்கும்
இமைகள் தான் உறவுகள் என்றால்..
அந்த இமைகளையும் கடந்து வரும்
கண்ணீரைத் துடைக்கும்
கரங்கள் தான் நட்பு..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!

Read more from New Tamil Quotes.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்

இன்றைய சிந்தனை துளிகள்