இந்த பதிவு “இன்றைய சிந்தனை துளிகள்” உள்ளடக்கியுள்ளது.
- இன்றைய சிந்தனை துளிகள்
- சிந்தனை துளிகள்
- Sinthanai Thuligal In Tamil
இன்றைய சிந்தனை துளிகள்
1.துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது.
எனவே துன்பத்தை எதிர்கொள்ள
தன்னை ஆயத்தப்படுத்திக்
கொள்பவனே சிறந்த மனிதன்.
2. எல்லோரிடமிருந்தும்
கற்றுக் கொள்பவனே
சிறந்த மனிதன்.
3. நமது மனிதநேயத்தின்
அளவை அளக்கும் கருவி..
நாம் பிறருக்கு உதவி செய்யும் போது
ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை
பொறுத்தது.
4. எதிலும் துணிந்து பங்கேற்று
பல்வேறு அனுபவங்களையும்
சுவைக்கத் தவறாதீர்.
5. இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
புகழ் ஓட்டமும் அதுபோலத்தான்.
அதுதான் சீரிய உடல் நலத்திற்கு
அடையாளம்.
6. உடல் நலம் பெரிதும்
மனநலத்தைப் பொறுத்தது.
7. நம்மால் முடியாதது யாராலும் முடியாது.
யாராலும் முடியாதது
நம்மால் மட்டுமே முடியும்.
8. மனிதன் அடக்கம் என்ற போர்வையில்
தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.
9. நோய்களில் கொடிய நோய்
மூடநம்பிக்கை என்ற நோய்தான்.
10. மணிக்கணக்கில் பேசாமல்,
மணிமணியாக பேசுதல்
சிறப்புடைத்து.
11. எல்லோருக்கும் தேவையானது
சிறந்த அறிவும்,
திறந்த இதயமும் ஆகும்.
12. மோசமான தோல்வியை
எதிர்கொள்ளும் தைரியம்
உடையவர்களே மிகப்பெரிய
வெற்றியைப் பெறமுடியும்.
13. சிக்கல்கள்தான் மிகப்பெரிய
சாதனைகளையும், மிக உறுதியான
வெற்றிகளையும் உருவாக்குகிறது.
14. வாழ்ந்து தீர வேண்டும் என்ற
மனோநிலைதான் வாழ்வின்
சிறந்த மருந்து.
15. ஓய்வை நாடியே மனிதர்கள்
களைத்துப் போய் விடுகிறார்கள்.
16. நாம் சந்தோஷமாய் இருப்பது
நம்மைப் பொறுத்தே உள்ளது.
17. வணங்கத் தொடங்கும்போதே
வளரத் தொடங்கிவிட்டோம்.
18. ஓர் இல்லத்தை இல்லமாக்க
ஒரு பெண்ணால் மட்டுமே
முடியும்.
19. கஷ்டத்திலிருந்து தப்பித்துக்
கொள்வது,
அதனை அனுபவித்து விடுவதுதான்.
20. நம்மால் முடியும் என்று எண்ணுவதே
முடிக்கும் ஆற்றலை அளிக்கும்.
21. பெரும் பொறுப்புகளை ஏற்க
முதன்மையாகத் தேவைப்படுவது
தன்னம்பிக்கை.
Sinthanai Thuligal In Tamil
22. மகத்தான சாதனைகள்
சாதிக்கப்படுவது வலிமையால் அல்ல,
விடா முயற்சியினால்.
23. விஷயங்களை அறிந்துகொள்ளும்
ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான்.
24. வெற்றிக்கு திட்டமிடாதவர்கள்
தானாகவே தோல்விக்கு
திட்டம்போட்டு விடுகிறார்கள்.
25. நேரம் வரட்டும் பல நல்ல செயல்களை
ஒரேயடியாகச் செய்துவிடலாம்
என்று காத்திருப்பவன் எந்த நேரத்திலும்
எதுவும் செய்யமாட்டான்.
26. ஆற்றல் நிறைந்தவனாக
இருப்பதைக் காட்டிலும்
நேர்மையானவனாக இருப்பது
மேலானது.
27. வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே,
அனைத்து லட்சியங்களுக்குமான
இறுதி முடிவு
28. மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து,
புகாருடன் வாழ்ந்து,
ஏமாற்றத்துடன் இறக்கின்றான்.
29. நிழலின் குளுமையை இழந்தால் தான்
சூரியனின் பிரகாசத்தை அடைய முடியும்.
30. சிக்கனமாக இல்லாமல் யாரும்
செல்வந்தராக முடியாது.
சிக்கனமாக இருந்தால் யாரும்
வறியவராக முடியாது
31. பிரச்சனைகளோடு போராடி
அவற்றை வெல்வதுதான்
மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.
32. எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்
மூலம் வாங்கப்படுகின்றது.
33. நமக்கு வரும் சோதனைகளை
ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்
மூலம் கடந்து, படிப்படியாக
முன்னேறி அமையும் வெற்றியை விட
சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில்
வேறொன்றும் இல்லை.
34. நீ தனிமையாய் இருக்கும் போது
வேலையின்றிச் சும்மா
இருக்காதே!
35. நீ வேலையின்றிச் சும்மா
இருக்கும் போது
தனிமையாய் இருக்காதே!
36. வளத்தின் ஒரு கை உழைப்பு.
ஒரு கை சிக்கனம்.
37. போர் மனிதர்களை அழிக்கிறது,
அதுபோல் ஆடம்பரம்
மனிதாபிமானத்தையும், உடலையும்,
உள்ளத்தையும் அழிக்கிறது.
38. திருமணம் என்பது ஆண்,
பெண் நட்பு. நம்பிக்கையில்லாமல்
நட்பு வளராது.
நம்பிக்கையோ நேர்மையில்
இருந்து மலர்வது.
39. அறிவில்லாத நேர்மை பலவீனமானது.
நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
40. எண்ணங்களைச் சம்பவமாக்குவது
அரசியல்.
41. நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள்.
எதிர்காலம் தன்னைத் தானே
கவனித்துக் கொள்ளும்.