இந்த பதிவு “நற்சிந்தனை துளிகள் – Natsinthanai” உள்ளடக்கியுள்ளது.
- நற்சிந்தனை துளிகள் – Natsinthanai
- சிந்தனை துளிகள்
- Natsinthanai In Tamil
நற்சிந்தனை துளிகள்
1.மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.
2. அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும்.
3. சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும்.
4. உடம்பு வியர்க்க வியர்க்க உழைப்பில் ஈடுபட்டால் பசித்துப் புசிக்கலாம். நோய் அனைத்தும் பறந்தோடும்.
5. உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து கடமை ஆற்றினால் சோம்பல் சாம்பலாகி விடும்.
6. உழைப்பில் மனதை செலுத்தினால், எப்போதும் உற்சாகத்துடன் பொழுதைக் கழிக்கலாம்.
7. அச்சமில்லாத வாழ்வே ஆனந்தமான வாழ்வு. மனதில் பயம் என்னும் விஷம் நுழைய அனுமதிப்பது கூடாது.
8. உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.
9. நடைமுறைக்கு ஒத்துவராத விஷயத்தை ஞானம் என்று சொல்லுவது பிழை.
10. தியானம் செய்வதை தினசரி கடமையாக கொள்ளுங்கள். தியானத்தால் மனதில் துணிவும் ஆற்றலும் உண்டாகும்.
11. பிறர் நம்மை தாழ்வாக கருதவோ, நடத்தவோ இடம் அளிக்க கூடாது.
12. உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள். சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்.
13. தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும் மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.
14. இயற்கையை மதித்து வாழ்ந்தால் எந்த தீமையும் உண்டாகாது. இது சாதாரண விஷயமல்ல. இதுவே உண்மை ஞானம்.
15. ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
16. உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் வாழ்வு நேர்மையான வழியில் அமையும்.
17. நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும். அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி.
18. நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லுவது சுலபம். ஆனால் அதன்படி நடப்பது மிக அரிய செயல்.
19. துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.
20. நடந்ததை எண்ணிப் பயனில்லை, இனிமேல் நடக்க இருப்பதை குறித்து சிந்தித்தால் நலம் உண்டாகும்.
Natsinthanai In Tamil
21. கோபத்தை மனதிற்குள் அனுமதிப்பது கூடாது. அமைதி வழியில் செல்லுங்கள்.
22. உள்ளத்தில் உண்மை இருந்தால் தான். பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும்.
23. கல்வியையும் தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.
24. யாருக்கும் பயந்து எமக்கு தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.
25. தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் பயனுள்ளதை செய்வதே உழைப்பு.
26. நோயால் மனிதர்கள் சாவதை விட.. பயம், கவலையால் அதிகம் சாகிறார்கள்.
27. தெய்வம் அருளைப் பொழியும் விதத்தில் உள்ளத்தை திறந்து வைத்திருங்கள்.
28. இப்போது செய்ய வேண்டியதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது.
29. தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள். தர்மம் மட்டுமே உண்மை என உணருங்கள்.
30. நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு வேதங்களும் சொல்லும் தீர்ப்பு. நம்பிக்கை மிக்கவனே சிறந்தவன்.
31. உன்னை நீயே மனத்தால் துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம்.
32. இயற்கையை நேசித்து வாழ வேண்டும். எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
33. கொள்கையை சொல்வது எளிது. செயலில் பின்பற்றுவது சிரமமானது.
34. மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால் நிம்மதியை பெற முடியாது.
35. தனக்கு தானே தலைவனாக இருப்பது தான், மனித உரிமையிலேயே மதிப்பு மிக்கது.
36. இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ள புத்திசாலியின் மனம் விரும்புவதில்லை.
37. அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும்.