மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர்களின் கூற்றாருக்கும். ஒரு குழந்தை அறிவு எனும் ஒளிசுடரை ஆசிரியர்களிடமிருந்தே பெற்றுக்கொள்கின்றது.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற ஆத்தி சூடி வரிகள் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுகின்றது.
அன்புள்ள ஆசிரியருக்கு கவிதை-1
அறிவின் வடிவமாய் மட்டும் இன்றி
அன்பின் வடிவமாய் தெரிபவரே,
என் அன்புள்ள ஆசானே!
என் கரங்களினால் உமக்கோர் நொடிகள்..
நீர் வகுப்பறையில் நுழையும் போது
கம்பீரமான சிங்கத்தின் தோற்றத்தையும்,
நீர் எம்மில் அக்கறை கொள்ளும் போது
ஒரு தாயின் பாசத்தையும் உம்மில் உணர்ந்தேன்..
பாடசாலை வரவில் எனது பெயரை உச்சரித்து
ஒரு புன்முறுவல் செய்தாலே போதும்,
அந்த நாள் என் அதிசய நாள் என
நண்பர்களிடம் சொல்லி மகிழ்வது என் அன்றாட கடமை..
என் பாட நூலில் உமது கை எழுத்தை வாங்குவதே,
எனக்கு அந்த நாளின் சவாலாகும்..
உமக்கு தெரியுமா? என் உயிருக்கு,
ஒரு உருவத்தை செதுக்கியவர் நீர்..
இன்றும் என் ஏடுகளை பார்த்து,
எனக்குள் சிரித்து கொள்கிறேன்….
உமது அழகான கை எழுத்தை
எனது நேரங்களில் ரசித்தது உண்டு..
உமது ஆழமான இரசிகன் நான்..
உம்முடன் சேர்ந்த என் ஒவ்வொரு,
நிமிடங்களும் அற்புதமானவை..
உமது அன்பிற்கும் ஆதரவிற்கும்
நன்றிகள் கோடி ஆசானே..!
அன்புள்ள ஆசிரியருக்கு கவிதை-2
அற்புதமாய் கலைகளை அள்ளி தந்தீர்..
ஆழமான சிந்தனையில் எம்மை நுழைத்தீர்..
இருள் எனும் நிலையை எம்மில் இருந்து போக்கினீர்..
ஈகையின் ஆழத்தை எமக்கு கற்று தந்தீர்..
உயரமாய் பறக்க சொன்னீர்..
ஊக்கத்தை அதிகம் நம்பினீர்..
எட்டாம் அதிசயமாய் மாற சொன்னீர்..
ஏடுகளை எப்பொழுதும் பரிசளிக்க சொன்னீர்..
ஐயம் என்ற சொல்லை எம்மில் அகற்றினீர்..
ஒற்றுமையை எம்மில் உருவாக்கினீர்..
ஓலைகளில் கை கருவிகள் செய்து தந்தீர்..
ஔவை பாட்டு சொல்லி தந்தீர்..
நல்லதோர் ஆசானாக நம்மை வழி நடத்தி,
நாளும் எம்மை செம்மையாக்கினீர்..
அளப்பெறும் அற்புத பணியை,
எமக்கு அள்ளி தந்த ஆசானே..
ஒவ்வொரு செயலிலும் உம்மை
என்றென்றும் நினைத்து கொள்வேன்..
எனது எழுத்துக்களை தலை எழுத்தாய்
எனக்கு மாற்றி தந்தமைக்காக..
இன்றும் என்னுள் உம்மை காண்கிறேன்,
நீர் சொல்லி தந்த அறத்தை செய்கையில்…
ஆயிரம் காலத்து பயிராய்
இம் மண்ணிற்காக என்னை
வளர்த்து எடுத்ததிற்கு கோடி நன்றிகள்..!
அன்புள்ள ஆசிரியருக்கு கவிதை-3
அன்புள்ள ஆசானே!
கண்டிப்புக்களிற்கு இடையில்
உமது பாசத்தை அள்ளி தந்தீரே..
உமக்கு என் படைப்புகளில் ஒன்று..
ஆயிரம் உறவுகளில் நீர் மட்டும்
மனதில் ஆழமாய் உள்ளீர்..
உம்முடன் எனக்கு ஏற்பட்ட அழகிய
உறவுக்கு பெயரும் ஆழமானதே..
நம் வளர்ச்சியின் ஒவ்வொரு
கட்டத்தின் தூண்களாக இருந்தீரே..
அற்புதமான படைப்புக்களை
துல்லியமாய் எமக்கு சொல்லி தந்தீரே..
வேப்பங்காய் கசப்பது போல் எமது
பாட நூல்களும் கசக்கிறது என்று சொல்கையில்,
பாட நூல்களின் பாடத்தை அழகாய்
நமக்கு சொல்லி தந்தவரே..
என்னுடைய ஒவ்வொரு நாட்களையும்
அற்புதமாய் வாழ்வதற்கு வழி நடத்தியவரே..
உம்முடன் சென்ற பாதடி சுவடுகளை
நினைக்கையில் கண்களில் ஓர் ஏக்கம்..
உம்முடன் என் பயணங்களை ஆரம்பித்தேன்..
இன்றும் உம் கொள்கைகளை பின்பற்றுகிறேன்..
உம்மை போல் ஒரு சிறந்த ஆசானுக்கு,
என்றும் நன்றிகள் ஆயிரம்..!
மேலும் தொடர்ந்து படியுங்கள்: