என் பேச்சை கேட்க சபையில் அமைந்திருக்கும் தலைவர் அவர்களே, என் தோழர்களே, தோழிகளே மற்றும் பெரியவர்களே அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.
இந்த பொன்னான நிமிடங்களில் எமது நாட்டின் விடுதலை பற்றி பேச வந்துள்ளேன். இன்று எமது நாட்டின் குடியரசு தினம். பெருமை கொள்ள வேண்டிய இடத்தில் ஓர் இந்தியனாக இன்று நான் உள்ளேன்.
குடியரசு தினம் என்றால் என்ன
இந்தியர்கள் ஆங்கிலயரிடம் இருந்து நாட்டை சுகந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கு இருந்த போதிலும் இந்திய நாட்டுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குவதை பல குழுக்கள் சேர்ந்து செயற்பட்டது.
அதற்கமைய 1950ஆம் ஆண்டு ஐனவரி 26ஆம் திகதி இந்திய நாட்டுக்கான அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த நாள் இந்தியாவின் குடியரசு தினமாக நாளாக கொண்டாடப்படுகின்றது.
இது இந்தியாவின் முதல் குடியரசு தலைவரும். இந்திய விடுதலை போராட்ட வீரருமான டாக்டர்.இராஜேந்திர பிரசாத் அவர்களினால் தான் இன்று குடியரசுதினம் என்ற நாளாக கொண்டாடுகின்றோம்.
இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்ற காரணம்
இந்தியாவிற்கு வர்த்தக நோக்கில் வந்தவர்கள் ஆங்கிலயர்கள் ஆவார். அவர்களின் நடவடிக்கை காலப்போக்கில் நாட்டை முழுவதுமாக கைப்பற்றும் தீர்மானம் ஆனது.
இதற்கமைய இந்திய நாட்டுக்குள் ஆங்கலேயரின் மேகத்துக்கு மக்களும் மாட்டினார்கள். அத்துடன் இந்திய நாட்டின் வளங்களை சுரண்டும் நோக்கில் இந்திய மக்களாகிய எம் முன்னோர்களை அடிமைகளாகவும் மாற்றினார்கள்.
குறைந்த சம்பளத்திற்கு நாட்டு மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். சொந்த நாட்டிலேயே வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த நிலையில் காந்தியின் அஹிம்சை வழி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். அத்துடன் நிற்கவில்லை சிறைச்சாலைகளில் எத்தினையே போராட்டவாதிகள் துன்பத்திற்கு ஆளானார்கள்.
இதனை கண்டு பல பெரியவர்களும் தலைவர்களும் காந்திக்கு துணையாக இருந்தார்கள்.
குடியரசு தினம் கொண்டாட்டம்
குடியரசு தினம் அன்று இந்திய நாட்டின் கொடி குடியரசு தலைவரால் ஏற்றப்பட்டு, இந்திய நாட்டின் தேசிய கீதம் பாடப்படும். அதை தொடர்ந்து இந்திய நாட்டின் இராணுவ படையின் அணி வகுப்புகள் இந்திய கொடிக்கும் நாட்டு தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டு அவர்களின் படைபலத்தை உலகிற்கு தெரியப்படுத்தும்.
அதை அடுத்து இந்திய நாட்டின் முப்படைகளின் அணியும் அவர்களின் மரியாதை செலுத்துவார்கள். வான வேடிக்கைகளும், எல்லா மத, இனம் என குடியரசு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும். வெவ்வேறு கலாசார நிகழ்வுகளை இந்திய நாட்டின் குடியரசு தினத்தில் காணலாம்.
இன்று அத்தகைய நம் தலைவர்களின் பெருமையும் நாட்டு மக்களின் மகிழ்ச்சியும் காணக்கூடியதாய் உள்ளது.
நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் இந்திய நாட்டின் செல்வங்கள் என கூறிக்கொண்டு எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பை எனக்கு அமைத்து தந்த அனைவருக்கும் என் நன்றிகள் சமர்ப்பணம்.
Read More: