இந்த பதிவில் “புதிய தமிழ் பொன்மொழிகள்” காணலாம்.
- புதிய தமிழ் பொன்மொழிகள்
- ஜேம்ஸ் ஆலன் பொன்மொழிகள்
- New Tamil Ponmoligal
புதிய தமிழ் பொன்மொழிகள்
1.சொற்கள் நம் சிந்தனையின் உடைகள். அவற்றை கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக்கூடாது.
2. அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அறிய மனமில்லாமை.
3. காதல் சந்திரன் போல் ஜோதியாகவும் இருக்கும். சில சமயம் நெருப்பாகவும் எரிக்கும்.
4. நமது மேலாதிக்க எண்ணங்களின் விளைவுகளையே நமது வாழ்க்கை எப்போதும் பிரதிபலிக்கின்றது.
5. தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்
6. அன்பு நிறைந்த இன்சொல், இரும்புக் கதவைக்கூடத் திறக்கும்.
7. மரங்களில் இலைகள் துளிர்த்தல் போல் கவிதை பிறக்க வேண்டும்.
8. அனுமதியில்லாத இடத்தில் இன்பம் இருக்க முடியாது.
9. பணிவான சொல் வாழ்க்கைப் பாதையை எளிதாக்குகிறது.
10. உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.
11. மூடர் இறுதியில் செய்வதை, அறிவாளி ஆரம்பத்திலேயே செய்துவிடுவார்.
12. வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர முடியும்.
13. நல்ல செயலுக்கு வட்டி கிடைக்கும்.
14. மனம் நரகத்தை சொர்க்கமாக்கும், சொர்க்கத்தை நகரமாக்கும்.
New Tamil Ponmoligal
15. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
16. குற்றத்தை மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது.
17. மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நீ எளிய வாழ்கையைக் கடைப்பிடி.
18. ஆண்கள் தங்களுக்குத் தெரிந்ததைத்தான் சொல்வார்கள். ஆனால் பெண்கள் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களைத்தான் சொல்வார்கள்.
19. வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப் பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான்.
20. தீய செயல்கள் நம்மைத் துன்புறுத்துவது, அவற்றைச் செய்த காலத்தில் அன்று. வெகுகாலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்போதுதான்.
21. வாழ்கையை ரசிப்பவர்கள் நீண்டகாலம் வாழ்கின்றனர்.
22. ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால், ஓயாமல் மனதோடு போராட வேண்டும்.
23. ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய சிந்தனைதான்.
24. பொறுமை கசக்கும்; ஆனால் அதன்மூலம் கிடைக்கும் பலன் இனிக்கும்.
25. நேற்றைய மனிதனின் வாழ்க்கை உண்மையும், எளிமையும் கொண்டதாயிருந்தது. இன்றோ சுகங்களையே அதிகம் விரும்பும் கேவலநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சுகங்கள் அதிகரிக்கவும் ஒழுக்கங்கள் தேய்ந்து மறையலாயிற்று.
26. அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது.
27. ஆடம்பரம் அதிகமாகிக் கொண்டே போனால் உண்மையான வீரமும், ஒழுக்கங்களும் அகற்றப்பட்டுவிடும்.
28. மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி, சமுதாய முன்னேற்றத்தின் கருவியாகவும் இருக்க வேண்டும்.
ஜேம்ஸ் ஆலன் பொன்மொழிகள்
29. மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படு; அதைரியமூட்டுபவர்களை அருகில் விடாதே.
30. காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை நீயே கொலை செய்வதற்கு ஒப்பாகும்.
31. ஒழுக்கம் உள்ள மனிதன் பெருந்தன்மையும் மரியாதையும் கலந்த சொற்களையே பேசுவான்.
32. மனத்தினால் தீமையை மறப்பது மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தீமையை விலக்கி, அதனை அறிதல் வேண்டும். நன்மையை மனத்தினால் அங்கீகரித்தால் மட்டும் போதாது. விடமுயற்சியினால் ஒவ்வொரு நாளும் நன்மையைச் செய்து, அதனை அறிதல் வேண்டும்.
33. முயற்சி செய்கிறவரை நம் திறமையே தெரியாது
34. செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
35. ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்துவிரல்கள்.
36. உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.